Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் சிலப்பதிகாரம்,மணிமேகலை-ஐம்பெரும் - ஐஞ்சிறுங்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம்

* ஆசிரியர் = இளங்கோவடிகள்
* காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
* அடிகள் = 5001
* காதைகள் = 30
* காண்டங்கள் = 3
* பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
* சமயம் = சமணம்


உரைகள்:


* அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.
* அடியார்க்கு நல்லாரின் உரை
* ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை


ஆசிரியர் குறிப்பு:


* பெயர் = இளங்கோவடிகள்
* பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
* அண்ணன் = சேரன் செங்குட்டுவன்
* இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.
* நூலின் வேறு பெயர்கள்:
  • தமிழின் முதல் காப்பியம்
  • உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
  • முத்தமிழ்க்காப்பியம் முதன்மைக் காப்பியம்
  • பத்தினிக் காப்பியம் நாடகப் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
  • புதுமைக் காப்பியம்
  • பொதுமைக் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • ஒருமைப்பாட்டுக் காப்பியம்
  • தமிழ்த் தேசியக் காப்பியம்
  • மூவேந்தர் காப்பியம்
  • வரலாற்றுக் காப்பியம்
  • போராட்ட காப்பியம்
  • புரட்சிக்காப்பியம்
  • சிறப்பதிகாரம்(உ.வே.சா)
  • பைந்தமிழ் காப்பியம்

நூல் அமைப்பு:


* காண்டங்கள் = 3(புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)
* காதைகள் = 30
* முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்
* இறுதி காதை = வரந்தருகாதை


புகார் காண்டம்:


* புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
* முதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை
* பத்தாவது காதை = நாடுகாண் காதை


மதுரைக் காண்டம்:


* மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13
* 11வது காதை = காடுகாண் காதை
* 23வது காதை = கட்டுரைக் காதை


வஞ்சிக் காண்டம்:


* வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7
* 24வது காதை = குன்றக்குரவை காதை
* 30வது காதை = வரந்தருகாதை


நூல் எழுந்த வரலாறு:


* மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.
* சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
* சீத்தலைச் சாதனார்ர், இளங்கோவடிகளை "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக" என வேண்டிக்கொண்டார்.
* இளங்கோவடிகளும், "நாட்டதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்" எனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.


நூல் கூறும் மூன்று உண்மைகள்:


* ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
* அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
* உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்


கதை மாந்தர்கள்:


* கோவலனின் தந்தை மாசாத்துவான்
* கண்ணகியின் தந்தை மாநாய்கன்
* கோவலனின் தோழன் மாடலன்
* கண்ணகியின் தோழி தேவந்தி
* மாதவியின் தோழி , வயந்தமாலை
* கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை
* கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன் கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)
* சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்


சிறப்புகள்:


  • "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என பாரதியார் கூறுகிறார்.
  • "சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்........தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்" என கூறுகிறார் பாரதியார்.
  • "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை" என்றார் பாரதியார்
  • "முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்" – மு.வரதராசனார்
  • பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்


மேற்கோள்:


மாசறு பொன்னே, வலம்புரி முத்தே
காசறு விரையே, கரும்பே, தேனே
அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே


இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம்


பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள


2. மணிமேகலை

மணிமேகலையின் உருவம்:


* ஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
* காலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு
* அடிகள் = 4755 வரிகள்
* காதைகள் = 30
* பாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா
* சமயம் = பௌத்தம்


நூலின் வேறு பெயர்கள்:


* மணிமேகலைத் துறவு
* முதல் சமயக் காப்பியம்
* அறக்காப்பியம்
* சீர்திருத்தக்காப்பியம்
* குறிக்கோள் காப்பியம்
* புரட்சிக்காப்பியம்
* சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
* கதை களஞ்சியக் காப்பியம்
* பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
* பசு போற்றும் காப்பியம்
* இயற்றமிழ்க் காப்பியம்
* துறவுக் காப்பியம்


ஆசிரியர் குறிப்பு:


* மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்
* சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
* இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
* கூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)
* இவரை, “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” எனப் போற்றுவர்.


நூல் குறிப்பு;


* இந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.
* முப்பது காதைகள் மட்டும் உள்ளன.
* முதல் காதை = விழாவறைக் காதை
* இறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை


கதை மாந்தர்:


* மணிமேகலையின் தோழி சுதமதி
* புத்தத்துறவி அறவன அடிகள்
* மணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை
* மனிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்
* மணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்
* கோவலனின் குலதெய்வம் மணிமேகலை


பொதுவான குறிப்புகள்:


* இரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை
* இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல்
* பிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் மணிமேகலை
* சிலப்பதிகாரத்தின் இறுதியில் “மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.
* மணிமேகலையை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.
* கதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.
* தொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணிமேகலை.
* திருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுறை” என்றும் முதலில் கூறிய காப்பியம்


மேற்கோள்:


வினையின் வந்தது வினைக்கு விளைவாது
புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது
மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை
கோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்
பசிப்பிணி என்னும் பாவி
மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லென காவலன் உரைக்கும்


3. சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணியின் உருவம்:


* ஆசிரியர் = திருத்தக்கதேவர்
* காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
* சமயம் = சமணம்
* பாவகை = விருத்தப்பா
* பாடல்கள் = 3145 விருத்தங்கள்


சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்:


* மணநூல்
* முக்திநூல்
* காமநூல்
* மறைநூல்
* முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
* இயற்கை தவம்
* முதல் விருத்தப்பா காப்பியம்
* சிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி


ஆசிரியரின் வேறு பெயர்கள்:


* திருத்தகு முனிவர்
* திருத்தகு மகாமுனிவர்
* தேவர்


ஆசிரியர் குறிப்பு:


* திருத்தக்கதேவர் சோழ மரபினர்.
* இவர் எழுதிய மற்றொரு நூல் = நரிவிருத்தம்
* சீவக சிந்தாமணியை தேவர் எட்டே நாட்களில் படைத்தார்.
* இவர் நூலை அரங்கேற்றிய இடம் = மதுரை தமிழ் சங்கம்
* இவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவண பெலகுளா கோவில் கல்வெட்டில் உள்ளது.


நூல் அமைப்பு:


* 13 இலம்பகம்
* 3145 பாடல்கள்
* முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
* இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்


நூல் குறிப்பு:


* சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
* சிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.


பொதுவான குறிப்பு:


* சைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்
* நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
* உ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் இது.
* கிறித்துவரான ஜி.யு.போப் இந்நூலை, “தமிழில் உள்ள இலக்கியச் சின்னங்களுள் மிக உயர்வானது. தமிழ்மொழியின் இலியதும் ஓடிசியுமான புதிய பெரிய இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று” என கூறினார்.
* ஜி.யு.போப் திருதக்கதேவரை “தமிழ் கவிஞர்களுள் இளவரசன்” எனப் புகழ்ந்துள்ளார்.
* வடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.
* கம்பர், “சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்து கொண்டேன்” என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.


நச்சினார்கினியர்:

* இவர் சைவர்.
* சீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது.
* இவரை, “உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்” எனப் போற்றுவர்.
* இவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்
* இவர் “தமிழ்மல்லி நாதசூரி” எனப் போற்றப்படுவார்


மேற்கோள்:


* இவ்வாறாகப் பிறப்பதுவோ
* இதுவோ மன்னற்கு இயல் வேந்தே
* மெய்வகை தெரிதல் தம்மை
* விளங்கிய பொருள்கள் தம்மை
* பொய்வகை இன்றித்தேறல் காட்சி
* ஐம்பொறியும் வாட்டி
* உய்வகை உயிரைத்தேயாது
* ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும்
* இவ்வகை நிறைந்த போழ்தே
* இருவினையும் கழியும் என்றான்


4. வளையாபதி

* ஆசிரியர் = தெரியவில்லை
* காலம் = கி.பி.9ஆம் நூற்றாண்டு
* பாவகை = விருத்தப்பா
* பாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
* சமயம் = சமணம்


பொதுவான குறிப்புகள்:


* நூல் முழுவதும் கிடைக்கவில்லை
* 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
* ஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினித்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.
* இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்.
* நவகோடி நாராயணன் என்பவரை பற்றிய கதை.
* வளையாபதியின் கதையை வைசிய புராணம் கூறுகிறது


மேற்கோள்:


கள்ளன்மின் களவு ஆயின யாவையும்
கொள்ளன்மின் கோளை கூடிவரும் அறம்
பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை,
மேவத் துறையிலா வசன வாவி, துகிலிலாக் கோலத் தூய்மை


5. குண்டலகேசி

குண்டலகேசியின் உருவம்:


* ஆசிரியர் = நாதகுத்தனார்
* காலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு
* பாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன
* பாவகை = விருத்தம்
* சமயம் = பௌத்தம்


பெயர்க்காரணம்:


* துறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றாள். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.


நூலின் வேறு பெயர்கள்:


* குண்டலகேசி விருத்தம்
* அகல கவி


பொதுவான குறிப்பு:


* சமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.
* புறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.
* பத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.


மேற்கோள்:


பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே
மேல்வரும் மூபுன் ஆகி
நாளும் நாள் சாகின்றோமால்
நமக்கு நாம் அழாதது என்னோ


ஐஞ்சிறுங்காப்பியங்கள்:

பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘ஐஞ்சிறு சிறுகாப்பியம்’ எனப்பட்டன.

உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவனவாகும்.

நூல்நூலாசிரியர்
சூளாமணிதோலாமொழித்தேவர்
நீலகேசிஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயணகுமார காவியம்ஆசிரியர் பெயர் தெரியவில்லை
நாககுமார காவியம்ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம்ஆசிரியர் பெயர் தெரியவில்லை

1.சூளாமணி

* இது ஒரு சமண காப்பியம்.
* இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர்.
* 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல்.
* ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் * விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது. பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன. சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.

இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது. இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.

வேறுபெயர்-சூடாமணி.


2.நீலகேசி

* இது ஒரு சமண காப்பியம்.
* குண்டலகேசி எனும் பௌத்த மத காப்பியத்திற்கு எதிராக தோன்றிய சமய நூல் நீலகேசியாகும்.
* வேறுபெயர் - “நீலகேசி திரட்டு”

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.


3.உதயணகுமார காவியம்

* இது உதயணன் கதையை கூறும் நூல்.
* மிகப் பிற்பட்ட காலத்தில் எழுந்த நூல் ஆகும்.
* உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
* இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன-உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம்.
* இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது. உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.

* இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை. * உதயண குமார காவியம் என்பது பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தித் தரும் இலக்கியம் ஆகும். * இந்நூலின்கண் 367 செய்யுட்கள் உள்ளன.


4.நாககுமார காவியம்

* நூலாசிரியர் சமண மதத்தைச் சார்ந்த துறவியாக இருக்கலாம் என்பதைத் தவிர வேறெதுவும் தகவல் இல்லை.
* இதன் ஆசிரியரும் ஒரு சமணப் பெண்துறவியே. பெயர் அறியக் கிடைக்கவில்லை.
* 5 சருக்கங்களில் 170 விருத்தப்பாக்களில் நாகபஞ்சமியின் கதையை உரைக்கும் சிறுகாப்பியமாகும் இது.
* முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையும் மட்டுமே பேசுகிறது. 519 பெண்களைக் கதையின் நாயகன் மணக்கிறான்.
* காவிய நயமோ அமைதியோ சிறிதும் இல்லாத நூல் இது. காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

அழிந்து போன நூல் என்று கருதப்பட்ட இதனை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு.சண்முகம் பிள்ளை பதிப்பித்துள்ளார்.


5.யசோதர காவியம்

* உயிர்க்கொலை தீது எனக் கூறும் நூல்
* தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
* இந்நூல் நான்கு சருக்கங்களில் 320 விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

* இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது.
* மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல்.
* எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது.
* காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.

Share with Friends