TNPSC   சிற்றிலக்கியங்கள்

* சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அமையும்.
* அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.
* சிற்றிலக்கியதிற்கு பிரபந்தம் என்ற பெயரும் உண்டு.
* சிற்றிலக்கியங்களில் இலக்கணத்தைக் கூறும் நூல்கள் = பட்டியல் நூல்கள்
* சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
* சிற்றிலக்கிய வகை = 96
* 96 வகை சிற்றிலக்கியங்களின் பெயரை முதலில் கூறிய நூல் = வீரமாமுனிவரின் சதுரகராதி

1.சதகம்2.பிள்ளைக்கவி
3.பரணி4.கலம்பகம்
5.அகப்பொருட்கோவை6.ஐந்திணைச் செய்யுள்
7.வருக்கக் கோவை8.மும்மணிக்கோவை
9.அங்கமாலை10.அட்டமங்கலம்
11.அனுராகமாலை12.இரட்டைமணிமாலை
13.இணைமணி மாலை14.நவமணிமாலை
15.நான்மணிமாலை16. நாமமாலை
17.பல்சந்தமாலை18.பன்மணிமாலை
19.மணிமாலை20புகழ்ச்சி மாலை
21.பெருமகிழ்ச்சிமாலை22.வருக்கமாலை
23.மெய்க்கீர்த்திமாலை24.காப்புமாலை
25. வேனில் மாலை26. வசந்தமாலை
27. தாரகைமாலை28. உற்பவமாலை
29. தானைமாலை30. மும்மணிமாலை
31. தண்டகமாலை32. வீரவெட்சிமாலை
33. வெட்சிக்கரந்தைமஞ்சரி34. போர்க்கெழுவஞ்சி
35. வரலாற்று வஞ்சி36. செருக்களவஞ்சி
37. காஞ்சிமாலை38. நொச்சிமாலை
39. உழிஞைமாலை40. தும்பைமாலை
41. வாகைமாலை42. வாதோரணமஞ்சரி
43. எண்செய்யுள்44. தொகைநிலைச்செய்யுள்
45. ஒலியந்தாதி46. பதிற்றந்தாதி
47. நூற்றந்தாதி48. உலா
49. உலாமடல்50. வளமடல்
51. ஒருபா ஒருபது52. இருபா இருபது
53. ஆற்றுப்படை54. கண்படைநிலை
55. துயிலெடை நிலை56. பெயரின்னிசை
57. ஊரின்னிசை58. பெயர் நேரிசை
59. ஊர் நேரிசை60. ஊர்வெண்பா
61. விளக்குநிலை62. புறநிலை
63. கடைநிலை64. கையறுநிலை
65. தசாங்கப்பத்து66. தசாங்கத்தயல்
67. அரசன்விருத்தம்68. நயனப்பத்து
69. முலைப்பத்து70. பாதாதிகேசம்
71. கேசாதிபாதம்72. அலங்காரபஞ்சகம்
73. கைக்கிளை74. மங்கலவள்ளை
75. தூது76. நானாற்பது
77. குழமகன்78. தாண்டகம்
79. பதிகம்80. சதகம்
81. செவியறிவுறூஉ82. வாயுறைவாழ்த்து
83. புறநிலைவாழ்த்து84. பவனிக்காதல்
85. குறத்திப்பாட்டு86. உழத்திப்பாட்டு
87. ஊசல்88. எழுகூற்றிருக்கை
89. நாழிகைவெண்பா90. சின்னப்பூ
91. விருத்தவிலக்கணம்92. முதுகாஞ்சி
93. இயன்மொழி வாழ்த்து94. பெருமங்கலம்
95. பெருங்காப்பியம்96. சிறுகாப்பியம்

திருக்குற்றால குறவஞ்சி

நூல் குறிப்பு :

 • திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
 • இதுவே முதல் குறவஞ்சி நூல்
 • இந்நூலின் தலைவன் = திருக்குற்றால நாதர்
 • இந்நூலின் தலைவி = வசந்தவல்லி

ஆசிரியர் குறிப்பு :

 • இதன் ஆசிரியர் : திரிகூடராசப்ப கவிராயர்
 • இவர் குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர்
 • மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் இவருக்கு “குறவஞ்சி மேடு” என்னும் நிலப்பகுதியை இனாமாக வழங்கினார்.
 • இவர் இயற்றிய மற்ற நூல்கள் : குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை


கலிங்கத்துப்பரணி

  நூல் குறிப்பு :

 • கலிங்கத்துப்பரணி ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற விரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி எனப்படும்.
 • 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல்.
 • கலிங்க மன்னன் அனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.
 • அவ்வெற்றியைப் போற்றி பாடப்பட்ட நூலான இது. தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்துள்ளது.
 • இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.

பரணி இலக்கியங்கள்:

 • தக்கயாகப் பரணி
 • இரணியன் வதைப் பரணி
 • பாசவதைப் பரணி
 • மோகவதைப் பரணி
 • வங்கத்துப் பரணி
 • திராவிடத்துப் பரணி
 • சீனத்துப் பரணிதிருச்செந்துர்ப் பரணி சூரன் வதைப் பரணி)

ஆசிரியர் குறிப்பு:

 • ஆசிரியர் : சயங்கொண்டார்
 • காலம் : கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
 • ஊர் : தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்
 • முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.
 • இவர் இயற்றிய மற்ற நூல்கள் : இசையாயிரம், உலா மற்றும் மடல்
 • பரணிக்கோர் சயங்கொண்டார்" எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்
 • எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே என்றார் அறிஞர் அண்ணா.


முத்தொள்ளாயிரம்

 • மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைகத் கொண்டது.
 • ஆயினும்இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
 • "புறத்திரட்டு" என்னும் நூல் வாயிலாக 108 வெண்பாக்களும், பழைய உரைநூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
 • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
 • சேரர் பற்றி 23 பாடல்களும், சோழர் பற்றி 46 பாடல்களும், பாண்டியர் பற்றி 61 பாடைகளும் என மொத்தம் 130 பாடல்கள் கிடைத்துள்ளன
 • இதில் அகப்பாடல்கள் 75, புறப்பாடல்கள் 55 உள்ளன.


தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது.

நூல் கூறும் பொருள்கள்

 • தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.
 • பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல்.
 • தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.
 • தலைவி தன் துன்பம் கூறுதல்.
 • தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல். என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது தமிழ்விடுதூது.
 • இந்நூலில் 268 கண்ணிகள் உள்ளன.
 • ஆசிரியர் பெயர் தெரியாத இத்தூது நூல் மிக சிறப்பான நூல் ஆகும்.


நந்திக் கலம்பகம்

 • கலம்பகம்- கலம் + பகம்
 • கலம் - 12 உருபுகளை கொண்டது
 • பகம்(பாதி) - 6 உருபுகளை கொண்டது
 • கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.
 • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
 • கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
 • தமிழ் மீது கொண்ட காதலால் மன்னன் உயிர் விட்டான்.
 • “நந்தி கலம்பகத்தால் இறந்ததை நாடறியும்” என்பது சோமேசர் முதுமொழி வெண்பா பாடல்
 • 144 பாடல்கள் உள்ளன
 • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


விக்ரமசோழன் உலா

நூல் குறிப்பு:

 • உலா என்பது 96 வகை சிற்றிலக்கியனங்களுள் ஒன்று.
 • இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகை சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றன.
 • உலா என்பதற்கு “ஊர்கோலம் வருதல்” என்பது பொருள்.
 • பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என எழுவகைப் பெண்களும் காதல் கொள்வதாய்க் அமைத்துப் பாடுவது உலா.
 • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
 • அவனின் தயார் மதுராந்தகி.
 • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

ஆசிரியர் குறிப்பு:

 • இயற்பெயர் = ஒட்டக்கூத்தர்
 • சிறப்புப்பெயர் = கவிச்சக்ரவர்த்தி
 • சிறப்பு = விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
 • இயற்றிய நூல்கள் = மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
 • காலம் = பனிரெண்டாம் நூற்றாண்டு


முக்கூடற்பள்ளு

 • இதுவே பள்ளு நூல்களில் முதல் நூல்
 • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்
 • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
 • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
 • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
 • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
 • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
 • இதன் காலம் பதினேழாம் நூற்றாண்டு
 • “முக்கூடல் நாடகம்” படைத்தவர் = சின்னத்தம்பி வேளாளர்


காவடிசிந்து

 • பெயர் = அண்ணாமலையார்
 • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
 • பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
 • நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
 • சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
 • காலம் = 1861–1890
 • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
 • இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.


திருவேங்கடத் தந்தாதி:

அந்தாதி:

 • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
 • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.

திருவேங்கடத் தந்தாதி:

 • இந்நூலின் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
 • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
 • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
 • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
 • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.


முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்:

 • முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
 • பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும்
 • இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர்
 • இது இரு வகைப்படும் = ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
 • பிள்ளைத்தமிழ் பாடாமல் விலக்கு அளிக்கப்பட்ட கடவுள் = சிவன்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்:

 • இதன் ஆசிரியர் குமரகுருபரர்
 • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
 • ஊர் – திருவைகுண்டம்
 • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
 • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
 • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
 • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.


பெத்தலகேம் குறவஞ்சி

 • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னராக இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
 • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.
 • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
 • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
 • ஊர் = திருநெல்வேலி
 • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
 • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
 • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.
 • இவரை “ஞானதீபக் கவிராயர்” என்றும் “அண்ணாவியார்” என்றும் போற்றுவர்.


அழகர் கிள்ளை விடு தூது

 • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
 • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
 • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
 • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
 • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
 • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
 • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை


இராசராசசோழன்

இரண்டாம் இராசராசனைப் பாராட்டி ஒட்டக்கூத்தர் பாடியது இராசராசசோழன் உலா ஆகும்

உலா:

 • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
 • உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
 • தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
 • இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
 • இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
 • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
 • ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).

ஆசிரியர் குறிப்பு:

 • இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
 • இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
 • இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
 • இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
 • இவரின் இயற் பெயர் = கூத்தர்
 • ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.

 

*Click on the QNo to display a Question.

Total Ans