Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-மரபுக்கவிதை மரபுக்கவிதை(All Authors)

முடியரசன்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இயற் பெயர் = துரைராசு
  • ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி

வேறு பெயர்கள்:

  • கவியரசு(குன்றக்குடி அடிகளார்)
  • தமிழ்நாட்டு வானம்பாடி(அறிஞர் அண்ணா)

நூல்கள்:

  • முகில் விடு தூது
  • தாலாட்டுப் பாடல்கள்
  • கவியரங்கில் முடியரசன்
  • முடியரசன் கவிதைகள்
  • பாடுங்குயில்
  • காவியப்பாவை
  • ஞாயிறும் திங்களும்
  • மனிதனைத் தேடுகிறேன்
  • பூங்கொடி(தமிழ் தேசிய காப்பியம், தமிழக அரசு பரிசு பெற்றது)
  • வீரகாவியம்(தமிழ் வளர்ச்சி கழக பரிசு)
  • நெஞ்சு பொறுக்குதில்லையே

நாடகம்:

  • ஊன்றுகோல்(பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது)

குறிப்பு:

  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் அர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
  • இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது

சிறப்பு:

  • அறிஞர் அண்ணா இவரைத் "தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது

மேற்கோள்:

  • இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
  • இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
  • வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்
  • மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
  • வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்
  • பிணவினையில் தமிழுண்டோ


வாணிதாசன்

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = எத்திராசலு (எ) அரங்கசாமி
  • பெயர் = வாணிதாசன்
  • பிறந்த இடம் = புதுவையை அடுத்த வில்லியனூர்
  • பெற்றோர் = அரங்க திருக்காமு – துளசியம்மாள்

வேறு பெயர்கள்:

  • புதுமைக் கவிஞர்
  • பாவலரேறு
  • பாவலர்மணி
  • தமிழ்நாட்டுத் தாகூர்(மயிலை சிவமுத்து)
  • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்

புனைப்பெயர்:

  • ரமி

நூல்கள்:

  • தமிழச்சி
  • கொடிமுல்லை
  • எழிலோவியம்
  • தீர்த்த யாத்திரை
  • இன்ப இலக்கியம்
  • பொங்கல் பரிசு
  • இரவு வரவில்லை
  • சிரித்த நுணா
  • வாணிதாசன் கவிதைகள்
  • பாட்டரங்கப் பாடல்கள்
  • இனிக்கும் பாட்டு
  • எழில் விருத்தம்(விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது)
  • தொடுவானம்
  • பாட்டு பிறக்குமடா(தமிழக அரசு பரிசு)

குறிப்பு:

  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
  • இவரின் முதல் பாடல் = பாரதி நாள்

சிறப்பு:

  • பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
  • பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
  • மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டுத் தாகூர்
  • சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்
  • குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே

மேற்கோள்:

  • பாரதி தாசன் பெயரை உரைத்திடப்
  • பாட்டுப் பிறக்குமடா
  • இடுவெயில் போல்உழைக்கும் சேரிவாழ் ஏழைமக்கள்
  • கொடுவெயில் குளிர்மழைக்குத் குந்திடக் குடிசை உண்டோ?
  • மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
  • மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்


சுரதா

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • ஊர் = பழையனூர்
  • பெற்றோர் = திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

சிறப்பு பெயர்கள்:

  • உவமைக் கவிஞர்(ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம்(சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர்(மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி(தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர்(கலைஞர் கருணாநிதி)

படைப்புகள்:

  • தேன்மழை(கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
  • சிரிப்பின் நிழல்(முதல் கவிதை)
  • சாவின் முத்தம்
  • உதட்டில் உதடு
  • பட்டத்தரசி
  • சுவரும் சுண்ணாம்பும்
  • துறைமுகம்
  • வார்த்தை வாசல்
  • எச்சில் இரவு
  • அமுதும் தேனும்
  • தொடா வாலிபம்

கட்டுரை:

  • முன்னும் பின்னும்

இதழ்:

  • காவியம்(முதல் கவிதை இதழ், வார இதழ்)
  • இலக்கியம்(மாத இதழ்)
  • ஊர்வலம்(மாத இதழ்)
  • சுரதா(மாத இதழ்)
  • விண்மீன்(மாத இதழ்)

குறிப்பு:

  • பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியதால் சுப்புரத்தினதாசன் என்பதை சுரதா என மாற்றிக்கொண்டார்

சிறப்பு:

  • தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
  • வ.ரா(வ.ராமசாமி) = மற்றொரு பாரதி பிறந்து விட்டான்

மேற்கோள்:

  • தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
  • தடைநடையே அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
  • தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு
  • படுக்கவைத்த வினாக்குறி போல்
  • மீசை வைத்த பாண்டியர்கள்
  • வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
  • எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
  • என்பானோ மோனனையைப் போல் முன்னே வந்தான்


கண்ணதாசன்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இயற்பெயர் = முத்தையா
  • ஊர் = இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டி
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • காலம் = 1927-1981

புனைப் பெயர்:

  • காரை முத்துப் புலவர்
  • வணங்காமுடி
  • கமகப்பிரியா
  • பார்வதிநாதன்
  • துப்பாக்கி
  • ஆரோக்கியசாமி

வேறு பெயர்கள்:

  • கவியரசு
  • கவிச்சக்ரவர்த்தி
  • குழந்தை மனம் கொண்ட கவிஞர்

படைப்புகள்:

  • மாங்கனி
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • கவிதாஞ்சலி
  • பொன்மலை
  • அம்பிகா
  • அழகு தரிசனம்
  • பகவாத் கீதை விளக்கவுரை
  • ஸ்ரீ கிருஷ்னகவசம்
  • அர்த்தமுள்ள இந்துமதம்
  • பாரிமலைக் கொடி
  • சந்தித்தேன் சிந்தித்தேன்
  • அனார்கலி
  • தெய்வ தரிசனம்
  • இயேசு காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
  • பேனா நாட்டியம்

நாவல்கள்:

  • சேரமான் காதலி(சாகித்ய அகாடமி விருது)
  • குமரிக் காண்டம்
  • வேலன்குடித் திருவிழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • ஆயிரங்கால் மண்டபம்
  • சிங்காரி பார்த்த சென்னை
  • ஊமையான் கோட்டை
  • இராஜ தண்டனை
  • சிவகங்கைச் சீமை

தன் வரலாறு:

  • வனவாசம்
  • மனவாசம்

இதழ்:

  • தென்றல்
  • கண்ணதாசன்
  • சண்டமாருதம்
  • முல்லை
  • தென்றல் திரை
  • கடிதம்
  • திருமகள்
  • திரைஒளி
  • மேதாவி

குறிப்பு:

  • திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியுள்ளார்
  • இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த கண்ணே கலைமானே பாடலாகும்
  • சேலம் மாவட்டம் சலகண்டாபுரம்(சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்

சிறப்பு:

  • தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்
  • சௌந்திரா கைலாசம் = தடுமாறு போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள்:

  • காலைக் குளித்தெழுந்து
  • கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
  • கருநாகப் பாம்பெனவே
  • கார்கூந்தல் பின்னலிட்டு
  • போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
  • தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
  • வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
  • காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
  • மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
  • மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
  • ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
  • அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?


உடுமலை நாராயணகவி

வாழ்க்கை குறிப்பு

  • புலவர் :உடுமலை நாராயணகவி
  • பிறப்பு :திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர்
  • பெற்றோர் : கிருஷ்ணசாமி – முத்தம்மாள்
  • இயற்பெயர் : நாராயணசாமி
  • காலம் :15.09.1899 முதல் 23.05.1981
  • சிறப்பு பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்

ஆசிரியர் குறிப்பு

இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.

பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.

கல்வி

  • முத்துசாமிக் கவிராயரிடம் கல்வி பயின்றார் .
  • சங்கரதாசு சுவாமிகளிடம் யாப்பிலக்கணம் பயின்றார் .
  • கலைவானர் N.S. கிருஷ்ணனுக்கு "கிந்தனார் கதா காலச்சேபம் " எழுதியதால் கலைவானரின் குருவாக மதிக்கப்பட்டார்.

திரையுலகத் தொடர்பு

  • கிராமபோன் கம்பனிக்கு பாட்டு எழுதி தர இயக்குனர் நாராயணன் இவரை திரைப்பட துறைக்கு அறிமுகப்படுத்தினார்
  • இவர் பாடல் எழுதிய முதல் திரைப்படம் சந்திர மோகனா (அ ) சமூக தொண்டு
  • நாட்டுப்புற பாடல் மெட்டுகளை , திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
  • தம் பாடல்களின் திருக்குறள் கருத்துக்களைமிகுதியாக பயன்படுத்தியவர்.

சிறப்பு

‘கலைமாமணி’ என்னும் பட்டம் பெற்றார்.

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை 500 காசு அஞ்சல் தலையை வெளியிட்டது.

சிறப்புப் பாடல்கள்

  • பெண்களை நம்பாதே ! கண்களே பெண்களை நம்பாதே !(தூக்கு தூக்கி என்ற திரைப்படத்தில் இந்த பாடலை எழுதியுள்ளார்)
  • காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் , பி.ஏ படிப்பு பெஞ்ச் துடைக்குதாம்.
  • குற்றம்புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது ?
  • சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம் ; சோம்பல் வளர்த்தா ஏற்படும் கஷ்டம்.
  • கத்தியைத் தீட்டுவது அந்தக்காலம் , புத்தியைத் தீட்டுவது இந்தக்காலம்.

பாடல் எழுதிய திரைப்படங்கள்

  • வேலைக்காரி
  • ஓர் இரவு
  • ராஜகுமாரி
  • நல்லதம்பி
  • பராசக்தி
  • மனோகரா
  • பிரபாவதி
  • காவேரி
  • சொர்க்க வாசல்
  • தூக்குத் தூக்கி
  • தெய்வப்பிறவி
  • மாங்கல்ய பாக்கியம்
  • சித்தி
  • எங்கள் வீட்டு மகாலட்சுமி
  • ரத்தக்கண்ணீர்
  • ஆதி பராசக்தி
  • தேவதாஸ்

மணி மண்டபம்

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

  • இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப் போற்றுவர்
  • பெற்றோ = அருணாசலம், விசாலாட்சி
  • இவரின் ஊர் = செங்கப்படுத்தான் காடு
  • பாரதிதாசனால் “எனது வலது கை” எனப் புகழப்பட்டவர்
  • உடுமலை நாராயகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்
  • இவர் எழுதிய மொத்தப்பாடல்கள் = 56


மருதகாசி:

வாழ்க்கை குறிப்பு:

  • ஊர் : மேலக்குடிகாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
  • பெற்றோர் : அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்.
  • மனைவி : தனக்கோடி அம்மாள்.
  • ஆசிரியர் : ராசகோபால ஐயர்.
  • காலம் : பிறப்பு : பிப்ரவரி 13, 1920-இறப்பு : நவம்பர் 29, 1989
  • சிறப்பு பெயர் : திரைக்கவித் திலகம்

ஆசிரியர் குறிப்பு

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.

1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

கல்வி:

உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார் பின்பு, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.

திருமண வாழ்க்கை:

1940 ஆம் ஆண்டில் திருமணமானது.

மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளார்கள்.

திரைப்பயணம்:

  • கல்லூரி படிப்பிற்குப் பிறகு "தேவி நாடக சபையின்" நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார்.
  • எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்.
  • கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

முதல் பாடல்:

1949-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் மாயாவதி என்ற படத்திற்கு

பெண் எனும் மாயப் பேயாம் ....

பொய் மாதரை என் மனம் நாடுமோ ....

என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.

சிறப்பு :

  • "கலைமாமணி" பட்டம் பெற்றுள்ளார்.
  • "துணைவன்" படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.
  • “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றது.
  • “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் "குடந்தை வாணி விலாச சபையினர்".
  • ஜகம்புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே என்று 53 வரிகளில் ராமாயணத்தை சுருக்கமாக எழுதினார் .

நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்:

  • கடவுள் என்னும் முதலாளி ( விவசாயி )
  • சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… ( நீலமலைத் திருடன் )
  • ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே ( பிள்ளைக்கனியமுது )
  • காவியமா? நெஞ்சின் ஓவியமா? ( பாவை விளக்கு )
  • முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல ( உத்தம புத்திரன் )
  • கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ( தூக்குத் தூக்கி )
  • சமரசம் உலாவும் இடமே ... (ரம்பையின் காதல் 1939)
  • சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு ( ராஜா ராணி )
  • ஆளை ஆளைப் பார்க்கிறார் ( ரத்தக்கண்ணீர் )
  • ஆனாக்க அந்த மடம்… ( ஆயிரம் ரூபாய் )
  • கோடி கோடி இன்பம் பெறவே ( ஆட வந்த தெய்வம் )
  • வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ( மல்லிகா )

பாடல்கள் நாட்டுடமை:

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும் ரூ 5 லட்சத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.


Share with Friends