Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் சிற்பம் ,ஓவியம், பேச்சு, திரைப்படக்கலை

சிற்பம்

  • கல்லைக் குடைந்து செதுக்கியும் கோயில் கலையை வளர்த்த பல்லவர்கள் சிற்பக்கலையையும் வளர்த்தார்கள்
  • மகேந்திரவர்மன் காலந்தொட்டே சிற்பக்கலை வளர்ந்து வருகிறது
  • பல்லவர் காலத்தில் கோயில் சிற்பங்கள், திறந்தவெளி சிற்பங்கள் எனவும் புடைப்புச் சிற்பங்கள், தனிச்சிலைகள் எனவும் வளர்ந்தன
  • மண்டகப்பாட்டு, திருச்சிச் சிவன் கோயில், தளவானூர், சீயமங்கலம், மாமல்லாபுரம், காஞ்சி கைலாசநாதர் கோயில், வைகுந்த பெருமாள் கோயில் போன்ற இடங்களில் பல்லவர்காலச் சிற்பங்கள் உள்ளன
  • சோழர் காலச் சிற்பங்கள் தனிச் சிறப்புடையன. அதனால் உலகெங்கும் உள்ள பொருட்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன
  • சைவம் , வைணவம், சமணம், பௌத்தம், சிறுதெய்வ வழிபாடு என அனைத்துச் சமய தெய்வங்களுக்கும் சோழர் காலத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன
  • கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 13 நூற்றாண்டு வரை சோழர்கள் சிறந்த ஆட்சி செய்தனர். இவர்கள் காலத்தில் சிற்பக்கலையும் வளர்ந்தது
  • கும்பகோணம், தக்கோலம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் சோழர் காலச் சிற்பங்கள் உள்ளன
  • தொடக்கத்தில் கோயில் கட்டுவதற்கு முதன்மை கொடுத்த சோழர்கள், பின் சிற்பங்களுக்கு முதன்மை கொடுத்தனர்
  • சிற்பங்களின் ஆடை ஆபரணங்கள் அளவாக இருந்தது பொய் மிகை அலங்காரச் சிற்பங்கள் தோன்றின
  • மூன்று பக்கங்களிலும் புடைப்பு மிகுதியாக இருக்கும்
  • இலக்கியம், சமயம் சார்ந்த சிற்பங்கள் மிகுதியாகச் செதுக்கப்பட்டன
  • கோயில் கட்டுவதில் மிகுத்த ஆர்வம் காட்டாத நாயக்கர்கள் சிற்பக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்கள்
  • மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம், பேரூர்பட்டிப் பெருமாள் கோயிலின் கனகசபை, இராமேஸ்வரம் தூண்சிற்பங்கள் போன்ற இடங்களில் நாயக்கர் காலச் சிற்பங்கள் உள்ளன
  • பல்லவர் காலச் சிற்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைப்பாறைச் சிற்பம் உலகப் புகழ் பெற்றதாகும்
  • கட்டடக் களையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம்
  • அரிசிலாற்றின் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது.

ஓவியக்கலை

ஓவியம்:

  • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
  • காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.

கோட்டோவியங்கள்:

  • சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
  • தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

கண்ணெழுத்து:

  • தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
  • தாம் வரைந்த ஓவியங்களை முதலில் "கண்ணெழுத்து" என்றே வழங்கினர்.

எழுத்து:

  • எழுத்து என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும் கூறுகின்றன.

கோட்டோவியங்கள்:

  • ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படை.
  • இவ்வாறு வரையப்படுபவை "கோட்டோவியங்கள்" எனப்படும்.

நடுகல் வணக்கம்:

  • தொல்காப்பியம் நடு கல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.
  • நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.

ஓவியக்கலையின் வேறுபெயர்கள்:

  • ஓவியம்
  • சித்திரம்
  • படம்
  • படாம்

ஓவியக் கலைஞனின் வேறு பெயர்கள்:

  • ஓவியர்
  • ஓவியப்புலவன்
  • கண்ணுள் வினைஞன்
  • சித்திரகாரர்
  • வித்தக வினைஞன்
  • வித்தகர்
  • கிளவி வல்லோன்

நச்சினார்கினியர் இலக்கணம்:

  • நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, "நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்" என இலக்கணம் வகுத்துள்ளார்.

ஓவியக் குழுக்கள்:

  • ஓவிய கலைஞர் குழுவை "ஓவிய மாக்கள்" என்று அழைத்தனர்.
  • ஆண் ஓவியர் = சித்திராங்கதன்
  • பெண் ஓவியர் = சித்திரசேனா

சிலப்பதிகாரம்:

  • ஆடல் மகள் மாதவி, "ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்" எனச் சிலம்பு பகிர்கிறது.

வரைகருவிகள்:

  • வண்ணம் தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
  • வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு "வட்டிகைப் பலகை" எனப் பெயர்.

வரைவிடங்கள்:

  • ஓவியம் வரையப்பட்ட இடங்கள் = சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதொளில் அம்பலம்
  • இறை நடனம் புரிவதற்கே "சித்திர சபை" ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.

புறநானூறு:

  • "ஓவத்தனைய இடனுடை வனப்பு" - புறநானூறு
  • இவ்வாறு வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.

ஓவிய எழினி:

  • நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்குகினவற்றை "ஓவிய எழினி" கொண்டு அறிகிறோம்.

புனையா ஓவியம்:

  • வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பர்.
  • இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் உள்ளது.

நெடுநல்வாடை:

  • ஆடு முதலான 12 இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை கூறுகிறது.

தமிழரின் ஓவிய மரபு:

  • ஓவியங்களில் "நிற்றல், இருத்தல், கிடத்தல்" ஆகிய மனித இயல்புகளையும்
  • "வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை" ஆகிய மெய்ப்பாடுகளையும்
  • "உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.

மகேந்திரவர்மப் பல்லவன்:

  • சங்கக் காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது.
  • மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்.
  • 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் சிறந்த ஓவியன்.
  • கல்வெட்டுகள் இவனைச் "சித்திரகாரப்புலி" எனப் புகழ்கின்றன.
  • "தட்சிணசித்திரம்" என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

சித்தன்னவாசல் – ஓவியக் கருவூலம்:

  • திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
  • புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலமாக வைத்து போற்ற தக்கது.
  • கி.பி.9ஆம் நூற்றாண்டில் "அவனிப சேகர ஸ்ரீவல்லபன்" என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் "இளம்கௌதமன்" இவ்வோவியங்களை வரைந்தார் என கல்வெட்டுகள் கூறுகிறது.

சோழர் கால ஓவியங்கள்:

  • சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் காணலாம்.
  • அதில் கவின்மிகு கயிலைகாட்சி உள்ளது.

பேச்சுக்கலை

பேச்சுக்கலை:

  • நுண்ணிய நூல்பல கற்றவற்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலை.

மேடைப்பேச்சில் நல்ல தமிழ்:

  • மேடைப்பேச்சில் நல்ல தமிழை கொண்டு மக்களை ஈர்த்தவர்கள் திரு.வி.க, அண்ணா, ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார்.

பேச்சும் மேடைப்பேச்சும்:

  • பேச்சில் உணர்ந்ததை உணர்ந்தவாறு தெரிவித்தால் போதுமானது; ஆனால், மேடைப்பேச்சிலோ உணர்ந்ததனை உணர்த்தும் வகையிலும் தெரிவித்தல் வேண்டும்.
  • பேச்சில் கேட்கின்றவனைக் கேட்கின்றவனாகவே மதிக்கலாம். ஆனால், மேடைப்பேச்சிலோ கேட்கின்றவனை மதிப்பிடுவோனாக மதித்தல் வேண்டும்.

பேச்சுக்கலையில் மொழியும் முறையும்:

  • மேடைப்பேச்சுக்கு கருத்துகளே உயிர்நாடி என்றாலும், அக்கருத்துக்களை வெளியிடும் மொழியும் முறையும் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.
  • கருத்தைக் விளக்க மொழி கருவியாக உள்ளது.

முக்கூறுகள்:

  • பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்திக் தொடக்கம், இடைப்பகுதி, முடிவு எனப் பகுத்துக் பேசுவதையே பேச்சுமுறை என்கிறோம்.
  • இதனை எடுத்தல், தொடுதல், முடிதல் எனவும் கூறலாம்.

எடுத்தல்:

  • பேச்சை தொடங்குவது எடுப்பு.
  • தொடக்கம் நன்றாக இராவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சினை குறித்த நல்லெண்ணம் தோன்றாது.
  • சுருக்கமான முன்னுரையுடன் தொடங்க வேண்டும்.

தொடுத்தல்:

  • தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை தொடுத்தல் எனப்படும்.
  • இடையிடையே சுவைமிக்க சொற்களும் குணமிக்க கருத்துகளும் பிணைத்துப் பேசுவதே தொடுத்தல் எனப்படும்.

பேச்சின் அணிகலன்:

  • எண்ணங்களைச் சொல்லும் முறையால் அழகு படுத்துவதே அணி எனப்படும்.
  • கேட்போர் சுவைக்கத்தக்க உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், பல்வேறு நடைகள், சிறுசிறு கதைகள் முதலியன அமையப் பேசுவதே சிறந்த பேச்சாகும்.

உணர்த்தும் திறன்:

  • உணர்ச்சி உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.
  • பேச்சாளர், தாம் உணர்ச்சிவயப்படாது, கேட்போரின் உள்ளத்தில் தாம் விரும்பும் உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் வேண்டும்.

முடித்தல்:

  • பேச்சை முடிக்கும்போது தான், பேச்சாளர் தமது கருத்தை வற்புறுத்தவும் கேட்போர் மனதில் பதியுமாறு சுருக்கிக் கூறவும் கூடும்.
  • பேச்சின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத் தூண்டும் முறையில் முடித்தல், பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடிதல் என முடிக்கும் முறைகள் பல உள்ளன.

திரைப்படக்கலை

திரைப்படத்தின் சிறப்பு:

  • உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
  • அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.

திரைப்படத்தின் வரலாறு:

  • ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
  • ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
  • எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
  • பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

திரைப்படம்:

  • நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
  • கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.

திரைப்படச்சுருள்:

  • திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
  • படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.

படம்பிடிக்கும் கருவி:

  • இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
  • படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

ஒலிப்பதிவு:

  • நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.

திரைப்படக்காட்சிப் பதிவு:

  • ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
  • இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.

கருத்துப்படம்:

  • கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் “வால்ட் டிஸ்னி” என்பார் ஆவார்.
  • படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.

Share with Friends