Easy Tutorial
For Competitive Exams

Related QA - - கூற்று

6426.கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.
(A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
(A) சரி (R) தவறு
(A) தவறு (R) சரி
6515.கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது
தூயப்பட்டு இழைகளின் இராணி எனப்படுகிறது
இந்தியா உலகில் பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது
ஆட்டின் தோலிலிருந்து கம்பளி எடுக்கும்பயோகிளிப் முறை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது
ஏபிஸ் டார்சேட்டா -பாறைத்தேனி என அழைக்கப்படுகிறது
7459.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க.
கூற்று : (A) ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்தல்.
காரணம் : (R) ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது. எளிதில் பாஸ்போலிப்பிடுக்குள் செல் சவ்வினைக் கடக்கக்கூடியது
(A) மற்றும் (R) சரி மற்றும் (R)ரானது (A)க்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) சரியானது ஆனால் (R)ரானது (A) is சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) சரியல்ல
(A) சரியல்ல ஆனால் (R) சரி
7565.1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று
பேரளவு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது
அடிப்படை தொழிலகங்களை முன்னேற்றுவது
சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
வேளாண் மற்றும் சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது
7571.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல்,
இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7581.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R): உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.
இவற்றுள் சரியான விடை எது?
(A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்
(A) தவறானது ஆனால் (R) சரியானதாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (R)- (A)க்கான சரியான விளக்கம் அல்ல
7621.கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்ளவும்.
1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
2. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன
3. தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளது
மேற்கண்டவற்றில் எவை சரியானது?
2 மற்றும் 3
1 மற்றும் 2
1,2 மற்றும் 3
3 மட்டும்
7623.இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.
1. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
2. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்
3. பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்
4. குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்
இவற்றில் சரியான கூற்று எது?
1 மற்றும் 2
1 மற்றும் 3
2,3 மற்றும் 4
3 மற்றும் 4
7631.கீழே உள்ள கூற்றுகளில் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.
1. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள் --
2. தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்
3. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது *
4. தலைமை தேர்தல் ஆணையர் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன் படி பதவி காப்பார்
இவைகளில் எவை சரியானவை?
1 மற்றும் 2
2 மற்றும் 3
1 மற்றும் 4
2 மற்றும் 4
7635.கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல
என்பதை கூறுக,
நீக்கப்படுவார்
அவருக்கு பாராளுமன்றத்துடன் நேரடி தொடர்பு கிடையாது மற்றும் எந்த அமைச்சரும் அவரது பிரதிநிதியாக செயல்பட முடியாது
அவரது ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள் இந்தியாவின் தொகுப்பூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவி ஓய்வு பெற்ற பின்னர், மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில் பணப்பயன் கிடைக்கும் பதவி வகித்தால் அவர் அப்பதவியிலிருந்து
7641.கீழ்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க.
1. பொதுநலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம்
2. ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்சநீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம்
3. இது ஒரு சமூக நடத்தை தொடர்பான வழக்கு என்றும் அழைக்கலாம்
4. நீதிபதி W.R. கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி T.N. பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு
வந்தவர்கள் ஆவர் .
1 மற்றும் 2
2 மற்றும் 3
3 மற்றும் 4 .
1, 2, 3 மற்றும் 4
7643.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : கஸ்குடா என்பது ஓர் ஒட்டுண்ணி விலங்கினம்.
காரணம் (R) : கஸ்குடா தனது உணவு, தண்ணீர் மற்றும் தனிம உப்புகளின் தேவைகளுக்கு ஆதாரத் தாவரத்தினைச் சார்ந்திருக்கும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R)தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7655.கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களில் எவை சரியானவை?
ஒரு சமவெப்பநிலை நிகழ்வில்,
(a) அந்த வாயுவின் வெப்பநிலை மாறாததாகும்
(b) அந்த வாயு சுற்றுப்புறத்திலிருந்து எந்த வெப்பமும் எடுப்பதில்லை
(c) வாயுவின் உள் ஆற்றல் மாறாததாகும்
(d) வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் மாறாததாகும்
கூற்று (b) மற்றும் (c) சரியானவை
கூற்று (c) மற்றும் (d) சரியானவை
கூற்று (a) மற்றும் (c) சரியானவை
கூற்று (a) மற்றும் (d) சரியானவை
7659.கீழ்க்காணும் வர்க்கியங்களைக் கவனத்தில் கொள்க.
கூற்று (A) : குடிக்கும் கர்ப்பிணி பெண். தன் குழந்தை வளர்ச்சிக்கு துன்புறுத்துகின்றார்.
காரணம் (R) : மதுபானம் இரத்தத்தின் மூலமாக குழந்தைக்கு செல்கின்றது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி. (R),(A)க்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7699.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : காந்தியடிகள் 1930-ல் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
(A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு, சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7701.கீழ்கண்ட வாக்கியங்களை கவ்னிக்கவும்.
கூற்று (Α) : 1916 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் (R) : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
7703.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) : 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
(கூ) மற்றும் (கா) ஆகிய இரண்டும் சரி (கா), (கூ) வின் சரியான விளக்கம்
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு
(கூ) மற்றும் (கா) இரண்டும் தனித்தனியே சரி ஆனால் (கா), (கூ) வின் சரியான விளக்கம் அல்ல
(கூ) சரி, (கா) தவறு
7771.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று I : மொத்த நாட்டு உற்பத்தி எப்பொழுதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருக்கும்.
கூற்று II : மொத்த நாட்டு உற்பத்தியை பெறுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிகர காரணிகளின் வருமானத்தையும் சேர்க்க வேண்டும்.
இவற்றுள் எது சரியான விடை?
இரண்டு கூற்றுகளுமே தனித்தனியே உண்மை மேலும் கூற்று II கூற்று I க்கு சரியான விளக்கமாகும்.
இரண்டு கூற்றுகளுமே தனித்தனியே சரியானவை மேலும் கூற்று II, கூற்று I க்கு சரியான விளக்கமல்ல
கூற்று I சரியானது, ஆனால் கூற்று II தவறானது
கூற்று Iதவறானது, ஆனால் கூற்று II சரியானது
7773.கீழ்க்கண்டவாக்கியங்களை கவனி:
கூற்று (A) : விலைக் கொள்கை நிதிப் பற்றாக்குறையை கீழ் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையதாகும்
காரணம் (R): நிதிப்பற்றாக்குறை பணவீக்க அழுத்தத்தை உண்டாக்கும்.
இவற்றுள் சரியான விடை எது?
(A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்
(A) தவறானது ஆனால் (R) சரியானதாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை ஆகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (A) க்கு (R) சரியான விளக்கமாகும்
7833.பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?
1 மற்றும் 2
1, 2 மற்றும் 3
2, 3 மற்றும் 4
1 மற்றும் 4
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us