Easy Tutorial
For Competitive Exams

Science QA பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Notes

பகுத்தறிவாளர்களின் எழுச்சி

  • கிபி 7ம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் பக்தி இயக்கங்கள் தோன்றின.இவ்வியக்கங்கள் இடைக்கால இந்திய வரலாற்றில் சமூக மற்றும் சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றின.
  • இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் சமூக சமய சீர்திருத்த இயக்கம் ராஜாராம் மோகன்ராய் என்பவரால் தொடங்கப்பட்டு அதன் பின் இந்தியா முழுவதும் பல சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சமூக-சமய, மறுமலர்ச்சிக்கு வித்திட்டன.
  • 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் சமூக நிலை உலக நாடுகளுக்கிடையில் பின்தங்கி இருந்தது.
  • இந்தியாவில் அச்சு இயந்திரம் ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்யப்பட்டதால் செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் வெளிவந்தன.
  • அமிர்தபஜார் பத்திரிக்கா, தி இந்து,சுதேசமித்திரன், இந்தியா, கேசரி, மராத்தா போன்ற செய்தித்தாள்கள் நம் நாட்டின் பண்பாட்டை அறிந்து கொள்ள உதவியாக அமைந்தன.
  • கிபி 1835 ஆம் ஆண்டு மெக்காலே முயற்சியால் ஆங்கிலம் இந்தியாவில் பயிற்றுமொழி ஆக்கப்பட்டது.
  • கிபி 1854 ஆம் ஆண்டு சார்லஸ் உட் அறிக்கையின்படி கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
  • மாக்ஸ்முல்லர் மற்றும் வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை மறு உயிர்ப்பு செய்தனர்.

பிரம்ம சமாஜம்

ராஜாராம் மோகன்ராய்

  • 19ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் இராஜாராம் மோகன்ராய் ஆவார்.
  • தனது பதினைந்தாம் வயதில் உருவவழிபாடு மறை நூல்களில் கருத்துக்கு எதிரானது மாறானது என்று வங்க மொழியில் எழுதி வெளியிட்டு, எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தார்.
  • கிபி 1820 இல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து ஏசுவின் கொள்கைகள், அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டார்.
  • ராஜாராம் மோகன்ராய் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தவை கிபி 1811 ஆம் ஆண்டு நடந்த தன் அண்ணனின் மனைவிக்கு நடந்த சதி என்ற உடன்கட்டை ஏறுதல் ஆகும்.
  • ராம் மோகன்ராய் என்பவருக்கு இராஜா என்ற பட்டம் அளித்தவர் முகலாய அரசர் இரண்டாம் அக்பர் ஷா(1806-1835) இதன்பின் இவர் ராஜாராம் மோகன்ராய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
  • 1815 இல் இவர் கல்கத்தாவில் ஆத்மிய சபாவைத் தோற்றுவித்தார். இதுவே பின்னர் 1828 பிரம்மசமாஜமாக ஆக மாறியது.
  • தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி என்பதே பிரம்ம சமாஜத்தின் அடிப்படை தத்துவமாகும்.

  • வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராக பதவி வகித்த போது சதிக்கு தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கி.பி 1829 ஆம் ஆண்டு டிசம்பர் 4 எண் XVII ன் படி சதி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டது.
  • ஆங்கில கிழக்கிந்திய ஆட்சியில் கிறிஸ்தவ சமயப் பரப்பு குழுவினர் வில்லியம் கேரி தலைமையில் வங்காளத்தில் சாதியை ஒழிக்க முயற்சி மேற்கொண்டனர்.
  • கிபி 1815 மற்றும் கிபி 1818 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தில் அதிக அளவில் சதி ஒழிப்பு முயற்சிகள் நடைபெற்றன.
  • கிபி 1861 இல் விக்டோரியா மகாராணிஆட்சி காலத்தில் இந்தியா முழுவதும் இக்கொடிய சமூகப் பழக்கம் தடை செய்யப்பட்டது.
  • வரலாற்றாசிரியர் கர்னல் டாட் கூற்றுப்படி, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்று விடும் வழக்கம் இராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது.
  • 1795இல் வங்காளத்தில் பெண்சிசுக் கொலைக்கு தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது (வங்கம் நெறிமுறைப்படுத்தும் சட்டப்படி 1795 XXI- இன் பிரிவு).
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர் முயற்சியால் கி.பி.1856இல் விதவை மறுமண சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • கிபி 1872இல் சிறப்புத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் குழந்தைமணம், பலதாரமணம் ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் என்றது.
  • கி.பி 1901 இல் பரோடா அரசு குழந்தைத் திருமண தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்தது.
  • கி.பி 1929 ல் இந்திய அரசால் சாரதா சட்டம் கொண்டுவரப்பட்டு பெண்ணின் திருமண வயது 14 ஆக உயர்த்தப்பட்டது.
  • பண்டிதகார்வே என்பவர் பூனாவில் விதவை பெண்களுக்கென இல்லத்தை நிறுவினார்.
  • ராஜாராம் மோகன்ராயை இந்து சமயத்தைச் சீர்திருத்திய செம்மல், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை, இந்தியாவின் விடிவெள்ளி, இந்திய தேசியத்தின் முன்னோடி, இந்தியாவின் புத்துலகச்சிற்பி என்று போற்றுகின்றனர்.
  • இந்தியருக்கு தாய்மொழிப் பற்றும், தன்னம்பிக்கையும் வளர சம்வாத்கௌமுகி (கிபி.1821) என்னும் வங்கமொழி வாரப்பத்திரிகையொன்றைத் தொடங்கினார்.
  • பாரசீக வாரப்பத்திரிக்கையான மிராத்- உல்-அக்பர் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
  • இவர் கிபி 1833 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் பிரிஸ்டலில் மறைந்தார்.
  • இவர் உலகிலேயே நவீன முறையில் முதன்முதலாக சமய ஒற்றுமை நோக்கு உணர்ச்சியினை உண்டாக்கப் பாடுபட்டார் என்று வரலாற்றாசிரியர் சர்மோனியர் வில்லியம் குறிப்பிடுகிறார்.
  • பரந்த மனித மதத்தைக் கண்டவர் ராஜாராம் மோகன்ராய் என்று வரலாற்றாசிரியர் சீல் குறிப்பிடுகிறார்.
57487.சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
1828
1829
1835
1838

ஆரிய சமாஜம்

  • ஆரியா என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் அறிவார்ந்த அமைப்பு மற்றும் கடவுளின் குழந்தை என்பதாகும்.

தயானந்த சரஸ்வதி

  • ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதியால் கிபி 1875இல் தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய இயற்பெயர் மூல்சங்கர்.
  • மதீனாவிற்கு சென்று அங்கு சுவாமி விரஜானந்தரின் சீடரானார்.
  • இவர் வேத நூல்களை மொழிபெயர்த்தார் அவற்றை சத்தியார்தபிரகாஷ் என இந்தியிலும், வேத பாஷ்யங்கள், யஜீர்வேதம் போன்றவற்றை சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்தார்.
  • மேற்கத்திய அறிவாலும், பண்பாட்டாலும் சிறிதும் மாற்றம் பெறாதவர், வேதங்களை நோக்கிச் செல் என்பதை தாரக மந்திரமாக கொண்டவர்.
  • மறை செழித்த நாடே எம்மகேஸ்வரன் வீடு இதனை வணங்குதலே இறைவனை வணங்குதல் என்று தயானந்தர் கூறினார்.
  • இந்தியா இந்தியருக்கே என்று கூறி சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • சுத்தி இயக்கத்தின் மூலம் பிற சமயத்தில் உள்ள இந்துக்களை தன் சமயத்தில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.
  • கிபி 1886ஆம் ஆண்டு லாகூரில் ஹன்ஸ்ராஜ் தலைமையில் தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.
  • இந்நிறுவனங்களில் ஆங்கிலம் முதன்மை மொழியாகவும், இந்தி சமஸ்கிருதம் இரண்டாம் மொழியாகவும் கற்பிக்கப்படுகின்றன.
  • பிஜி, நேபாளம்,மொரிசியஸ்,சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
  • வேதசமயம்,நாகரிகம், பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாகக் இவர் கருதினார்.
  • இக்கருத்து பிற்காலத்தில் சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகரின் கூற்றுக்கு அடிப்படையாக அமைந்தது.
  • சத்தியமேவ ஜெயதே என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் வாய்மையே வெல்லும் என்பதாகும்.இவ்வார்த்தை முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
  • வாய்மையே வெல்லும் எனும் தயானந்தரின் தாரகமந்திரம் அகிம்சை முறையில் போராடி சுதந்திரம் பெற இந்தியரை ஆயத்தப்படுத்தியது.
  • இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என்று இவர் அழைக்கப்பட்டார்.
  • இவரை 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என இரவீந்திரநாத் தாகூர் போற்றுகிறார்.

இராமகிருஷ்ண பரமஹம்சர்

  • இராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர் கடாதர சட்டர்ஜி ஆகும்.
  • இவர் தக்நேஷ்ஸ்வ ரர் காளி கோயில் பூசாரியாக பணிபுரிந்தார்.
  • இக்கோயில் மிகப்பெரிய செல்வந்தரான ராணி ராஸ்மோனி என்பவரால் கட்டப்பட்டது.
  • இவர் தயானந்த சரஸ்வதியின் சமகாலத்தவர் ஆவார்.
  • இராமகிருஷ்ணரை இறைவனும் மனிதனும் கலந்த வியத்தகு கலவை என விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.
  • ராஜயோகம், கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் போன்றவற்றின் மூலம் மோட்சத்தை அடையலாம் என்று தமது யோகநெறிகள் என்ற நூலில் விவேகானந்தர் கூறியுள்ளார்.
  • கேசவசந்திரசென் தலைமையில் இயங்கிய பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார்.
  • அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.
  • 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரிக்குச் சென்று பாறையின் மீது அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார்.
  • 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு மதகுரு கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தர்

  • கிபி 1892ல் சுவாமி விவேகானந்தரும் மன்னர் பாஸ்கரசேதுபதியும் மதுரையில் சந்தித்தது வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்தசந்திப்புதான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்க உலக சமய மாநாடுக்கு செல்ல வழிகோலியது எனலாம்.
  • உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியில் கடலில் சென்று சங்கமாம் பான்மையினைப்.... என்று மாநாட்டில் கூறி உலக சமய ஒற்றுமையை தெளிவுபடுத்தினார்.
  • விவேகானந்தர் 1896 இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வேதாந்த சங்கம் என்ற சமய மன்றத்தை தொடங்கினார்.
  • பின் கிபி 1897ல் வங்காளத்தில் உள்ள பேலூரில் இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கப்பட்டது.
  • இராமகிருஷ்ண இயக்கம் மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப்பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தது.

பிரம்மஞான சபை

  • 1875 இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிரம்மஞான சபை தோற்றுவிக்கப்பட்டது. இச்சபை தியோஸ்சோபி இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் பெறுவதற்காக பிரம்ம ஞானசபை நிறுவப்பட்டது.
  • 1882ல் இதன் தலைமையிடம் சென்னை அடையாற்றில் தொடங்கப்பட்டது.

  • அன்னிபெசன்ட்

  • அன்னிபெசன்ட் கிபி 1847 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். இவர் 1897 ஆம் ஆண்டு இந்தியா வந்தார்.
  • 1898 ஆம் ஆண்டு காசியில் மத்திய இந்து கல்லூரியைத் தொடங்கினார்.பின்னாளில் அது பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக வளர்ச்சிப்பெற்றது.
  • சாதி ஒழிப்பு, பெண்கல்வி, நாட்டு விடுதலை போன்றவற்றிற்காக நாடு முழுவதும் சொற்பொழிவுகளை அன்னிபெசன்ட் நிகழ்த்தினார்.
  • இவருடைய வீரமிக்க உணர்ச்சி சொற்பொழிவுகள் இந்தியனே விழித்தெழு எனும் நூலாக வெளியிடப்பட்டது.
  • 1914இல் பொது வாழ்வு எனும் வார வெளியீட்டையும், பின்னர் நியூ இந்தியா என்ற நாளிதழையும் தொடங்கினார்.

  • வள்ளலார் பதிப்பித்த நூல்கள் சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம், தொண்டைமண்டலச் சதகம், உரைநடைகள்- மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம். செய்யுள் - திருவருட்பா.

  • இராமலிங்க அடிகளார்

    • 1865ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை இராமலிங்க அடிகளார் நிறுவினார்.
    • இராமலிங்க அடிகளாரின் தலைமை சீடரான தொழுவூர் வேலாயுதனாரால் முதல் நான்கு திருமுறைகள் வெளியிடப்பட்டன.

    • இராமலிங்க அடிகளாரின் இளம் சமூகத்தினருக்கான நெறிகள்

    • நல்லோர் மனதை நடுங்க செய்யாதே, பசித்தோர் முகத்தைப் பார்த்திராதே, குருவை வணங்க தயங்கி நிற்காதே, வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே, தாய் மொழியைத் தள்ளி நடக்காதே என்று கூறினார்.
    • ஸ்ரீ நாராயண குரு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு அருகே செம்பழுந்தி கிராமத்தில் பிறந்தார். இவர் பொதுவாக நானு ஆசான் என்று அழைக்கப்பட்டார்.
    • ஸ்ரீநாராயணகுரு திருக்குறள்,ஈசோ வாஸ்யோ உபநிடதம், ஒழிவிலொடுக்கம் ஆகிய நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
    • இவர் காலத்தில் அவர்ணர்,சவர்ணர் என்ற இரு பிரிவுகளாக மக்கள் வாழ்ந்தனர்.
    • கிபி 1903இல் நாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பை நிறுவி இதன்மூலம் ஆன்மீகம், கல்வி, சமூக தொண்டு ஆற்றிய பணிகளை செய்தார்.
    • அகிலத்திரட்டு அம்மானை என்ற நூல் வைகுண்ட சாமியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலாகும். இந்நூல் இவரது சீடர் இராமகோபால் என்பவரால் எழுதப்பட்டது.
    • வைகுண்ட சாமிகள் தோற்றுவித்த வழிபாட்டுத்தலங்கள் நிழல்தாங்கல்கள் என அழைக்கப்படுகின்றன.
    • மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்த துவையல் பந்தி தொடங்கப்பட்டது.
    • வங்காளத்தில் சமூக சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவ ஈஸ்வர சந்திர வித்யாசாகர் 1820 வங்காளத்தில் பிறந்தவர்.
    • கிபி 1856 இல் கொண்டுவரப்பட்ட விதவைகள் மறுமணச் சட்டத்திற்கு காரணமாய் இருந்தவர்.
    • இவர் வங்க அகரவரிசையை மறுஉருவாக்கம் செய்தவர்.இவர் புகழைப் போற்றும் விதமாக வங்காளத்தில் ஹூக்ளி பாலத்திற்கு வித்யாசாகர் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
    • ஜோதிபா பூலே பூத்தொடுக்கும் குடும்பத்தில் பிறந்தமையால் பூலே என்று அழைக்கப்பட்டார்.
    • இவர் புத்வார் பீத் என்ற இடத்தில் பெண்கள் பள்ளியை தொடங்கினார்.
    • ஸ்காட்டிஷ் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பூலே விவசாயிகளுக்காக இரவுநேரப் பள்ளியைத் தொடங்கினார்.
    • ஹண்டர் கல்விக் குழுவிடம் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
    • 1873 இல் சத்திய சோதக் சமாஜம் என்ற அமைப்பைத் * தோற்றுவித்தார்.இதற்கு உண்மை அறியும் சங்கம் என்று பொருள்.
    • அயோத்திதாசப் பண்டிதர் தமிழ்-பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தார்.
    • இவருடைய இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும். அத்வைத கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்.
    • 1907இல் இராயப்பேட்டையைத் தலைமையிடமாக கொண்டு அன்றைய காலணா மதிப்பில் ஒரு பைசா தமிழன் என்ற செய்திகளை வெளியிட்டார்.
    • கந்துகூரி வீரேசலிங்கம் தெலுங்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்.
    • இவர் 1848 இல் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி என்ற இடத்தில் பிறந்தவர்.
    • பெண் கல்வியை ஊக்குவிக்க 1876இல் விவேகவர்த்தினி என்ற செய்திதாளைத் தொடங்கினார்.
    • 1874 இல் பொது பள்ளியை நிறுவி சமூகம் முன்னேற்றமடையச் செய்தார்.
    • 1908 இல் ஹித்காரினி பள்ளியையும் தொடங்கினார்.
    • ஆந்திராவில் விதவைகள் திருமணத்தை 1881 இல் நடத்திவைத்தார்.

    தந்தை பெரியார்

    • தந்தை பெரியார் என்று போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17இல் ஈரோட்டில் பிறந்தார்.
    • குடியரசு,புரட்சி,விடுதலை போன்ற இதழ்கள் மூலம் தமது சுயமரியாதைக் கொள்கைகளை வெளியிட்டார்.
    • பெரியாரால் சுயமரியாதை இயக்கம் 1925இல் தோற்றுவிக்கப்பட்டது.
    • பெரியார் 1929 முதல் 1932 வரை மலேசியா, சிங்கப்பூர் இலங்கை, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கி கூறினார்.
    • இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம்(1973) பெரியாரை புத்துலக தொலைநோக்காளர், தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என பாராட்டி விருது வழங்கியது.
    • பெரியாரின் முதலாவது சமுதாயப் போராட்டம் கேரளாவில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் தீண்டாமை ஒழிப்பிற்காக திருவிதாங்கூர் மன்னருக்கு எதிராக போராடி வெற்றி கொண்டார்.

    • 1835 இல் மெக்காலே கல்விக்கொள்கை உருவாவதற்கும், 1854 இல் சார்லஸ் உட் கல்விக்கொள்கை உருவாவதர்க்கும் அதனால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை பரவுவதற்கும் 19ம் நூற்றாண்டின் சமூக-சமய சீர்திருத்த வாதிகள் ஆங்கிலேயருக்கு உதவினர்.
    • விவேகானந்தரின் ஆன்மீக சிந்தனைகள் ஐரோப்பிய நாடுகளை கவர்ந்தன.இதன் காரணமாக சகோதரி நிவேதிதா இவருடைய சீடரானார்.
    • 19 ஆம் நூற்றாண்டின் சமூக சமய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் இராஜாராம் மோகன்ராய்.
    • மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு, வழிநடத்தி, தெய்வ நிலையை அடையச் செய்வதே சமரச சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறியவர் இராமலிங்க அடிகளார்.
    • சத்திய சோதக் சமாஜம் என்ற அமைப்பை நிறுவியவர் ஜோதிபா பூலே.
    • உலகில் எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியில் கடலில் சென்று சங்கமாம் பான்மையினைப் போன்று உலகோர் பின்பற்றும் தன்மையாலே.... யாருடைய கூற்று? விவேகானந்தர்.
    • இந்தியா இந்தியருக்கே என்று முழங்கியவர் தயானந்த சரஸ்வதி

    பொருத்துக

    • பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்
    • ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி
    • ராமகிருஷ்ண இயக்கம் - சுவாமி விவேகானந்தர்
    • பிரம்ம ஞானசபை - பிளாவட்ஸ்கி அம்மையார்.
    • கந்துகூரி வீரேசலிங்கம் - விவேக வர்த்தினி
    • இராஜாராம் மோகன்ராய் - சம்வாத் கௌமுகி.
    • அன்னிபெசன்ட் - நவ இந்தியா.
    • ஆத்மிய சபை - இராஜாராம் மோகன்ராய்.
    • பிரார்த்தனை சமாஜம் - ஆத்மாராம் பாண்டுரங்.
    • விதவைகள் மறுமண சட்டம் - ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
    • சமரச சுத்த சன்மார்க்க சங்கம் - இராமலிங்க அடிகளார்.
    • மூல்சங்கர்- தயானந்த சரஸ்வதி,
    • நரேந்திரநாத் தத்தா - விவேகானந்தர்
    • கடாதர சட்டர்ஜி - இராமகிருஷ்ண பரமஹம்சர்.
    • காத்தவராயன் - அயோத்திதாச பண்டிதர்.
    9481.பொருத்துக:
    (a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
    (b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
    (c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
    (d) ஜீவாவே சிவா 4.ஸ்ரீ நாராயண குரு
    2 1 4 3
    2 4 3 1
    4 1 2 3
    1 3 2 4
    10062.பட்டியல் 1-ஐ பட்டியல் 11-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
    விடையைத் தேர்ந்தெடு:
    (a) தத்துவபோதினி சபை 1. ஹென்றி விவியன் தெரோஜியோ
    (b) இளம் வங்காள இயக்கம் 2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட் (
    (c) விதவை மறுமண சங்கம் 3. வீரேசலிங்கம்
    (d) ஹிதகர்ணிசமாஜம் 4 தேவேந்திரநாத்தாகூர் குறியீடுகள்:
    4 1 2 3
    4 3 2 1
    3 4 1 2
    2 1 4 3
    10132.வரிசை I உடன் வரிசை IIஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
    சரியான விடையை தெரிவு செய்க :
    (a) பிரம்ம சமாஜம் 1.சுவாமி விவேகானந்தர்
    (b) ஆரிய சமாஜம் 2.மேடம் பிளவாட்ஸ்கி
    (c) ராமகிருஷ்ண மிஷன் 3. ராஜாராம் மோகன்ராய்
    (d) பிரம்மஞான சபை 4.சுவாமி தயானந்த சரஸ்வதி
    3 4 1 2
    3 2 1 4
    4 1 2 3
    1 3 4 2
    57559.பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
    தயானந்த சரஸ்வதி
    இராஜாராம் மோகன்ராய்
    சர் சையது அகமதுகான்
    அன்னிபெசன்ட்

    தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

    • ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ் மொழியாகும். மிக முன்னதாக 1578இல் தம்பிரான் வணக்கம் எனும் தமிழ் புத்தகம் கோவாவில் வெளியிடப்பட்டது .
    • 1709இல் முழுமையான அச்சகம் சீகன்பால்கு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.
    • தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812 இல் வெளியிடப்பட்டது.

    சி.வை.தாமோதரனார்

    • சி.வை.தாமோதரனார் பனை ஓலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை பதிப்பித்தார்
    • அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை , சூளாமணி ஆகியவை அடங்கும்.

    • உ.வே.சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான சீவகசிந்தாமணி 1887, பத்துப்பாட்டு 1889, சிலப்பதிகாரம் 1892, புறநானூறு 1894, புறப்பொருள் வெண்பாமாலை 1895, மணிமேகலை 1898, ஐங்குறு நூறு 1903, பதிற்றுப்பத்து 1904 ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
    • 1816இல் புனித ஜார்ஜ் கோட்டையில் கல்லூரியை நிறுவிய F.W. எல்லிஸ் தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை, அவை இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை எனும் கோட்பாட்டை உருவாக்கினார்.
    • ராபர்ட் கால்டுவெ திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற தலைப்பிட்ட நூலில் இக்கோட்பாட்டை 1856 இல் விரிவுபடுத்தினார். திராவிட மொழிகளுக்கு இடையே நெருக்கமான ஒப்புமை இருப்பதையும் அப்படியான ஒப்புமை சமஸ்கிருதத்துடன் இல்லை என்பதையும் நிறுவினார்.
    • தமிழ்நாட்டில் திராவிட உணர்வு தோன்றி வளர்வதற்கு தமிழ் மறுமலர்ச்சி பங்களிப்பைச் செய்தது.
    • இச்சிந்தனைகள் பி.சுந்தரனாரால்(1855-1897) எழுதப்பெற்ற மனோன்மணியம் என்னும் நாடக நூலில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழி வாழ்த்து பாடலில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • இராமலிங்க அடிகளார் நடைமுறையில் இருந்த இந்துசமய பழமைவாதத்தை கேள்விக்குறி ஆக்கினார்.
    • ஆப்ரஹாம் பண்டிதர் (1859 - 1919) தமிழிசைக்கு சிறப்பு செய்ததோடு, தமிழிசை வரலாறு குறித்து நூல்களையும் வெளியிட்டார்.
    • பௌத்தத்திற்கு புத்துயிர் அளித்த ஒரு தொடக்க கால முன்னோடியான M.சிங்காரவேலர் காலனிய சக்தியை எதிர்கொள்வதற்காக பொதுவுடமைவாதத்தையும், சமத்துவத்தையும் வளர்த்தார்.

    பரிதிமாற் கலைஞர்

    • பரிதிமாற் கலைஞர்(1870 / 1903) சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.
    • தமிழின் மீது சமஸ்கிருதம் கொண்டிருந்த செல்வாக்கை அடையாளம் கண்ட தொடக்ககால தமிழ் அறிஞர்களில் ஒருவர் பரிதிமாற்கலைஞர்.
    • மேற்கத்திய இலக்கிய மாதிரிகள் மீது இவர் கொண்டிருந்த தாக்கத்தின் விளைவாக 14 வரிசெயுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தார்.

    மறைமலை அடிகள்

    • மறைமலை அடிகள் (1876 - 1950) தமிழ் மொழியில் தூய்மைவாதத்தின் தந்தை என்றும், தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் எனவும் கருதப்படுகிறார்.
    • சங்க இலக்கிய நூல்களான பட்டினப்பாலை,முல்லைப்பாட்டு ஆகியவற்றிற்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
    • இளைஞராக இருந்தபோது சித்தாந்த தீபிகா எனும் பத்திரிகையில் பணிபுரிந்தார்.
    • தனித்தமிழ் இயக்கம் 1916 இல் தொடங்கப்பட்டது.மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை இவ்வியக்கம் உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார்.
    • அவருடைய ஞானசாகரம் எனும் பத்திரிக்கை அறிவுக்கடல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    • அவருடைய சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனம் பொதுநிலைக் கழகம் என்று பெயரிடப்பட்டது.
    • தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருத சொற்களுக்கு இணையான பொருள்தரக்கூடிய தமிழ் சொற்கள் அடங்கிய அகராதி ஒன்றை நீலாம்பிகை தொகுத்தார்.
    57774.பொருத்துக :
    (a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட்
    (b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய்
    (c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம்
    (d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
    1 3 2 4
    2 4 1 3
    4 3 2 1
    1 4 3 2
    57989.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

    பட்டியல் I - பட்டியல் II

    a) நீதிக்கட்சி 1. பெரியார் ஈ. வே. ராமசாமி

    b) தேவதாசி முறை 2.டாக்டர் எஸ். தருமாம்பாள்

    c) வைக்கம் வீரர் 3.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

    d) வீரத்தமிழன்னை 4. தியகராய செட்டியார்.

    குறியீடுகள் :
    4 3 1 2
    1 2 3 4
    2 3 4 1
    4 2 1 3
    Share with Friends