Easy Tutorial
For Competitive Exams

Science QA TNUSRB Syllabus

TNUSRB இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் தேர்வு பாடத்திட்டம்

SSLC(எஸ்.எஸ்.எல்.சி.தரம்)

பொது அறிவு (General Knowledge)

1.தமிழ்

செய்யுள் நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், செய்யுள் நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்.

Study Material : இலக்கணம் - Notes,QA & Test"

Study Material : இலக்கியம் - Notes,QA & Test"


2.ஆங்கிலம்

ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.


3. கணிதம்: அடிப்படைகள்

6-அம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை உள்ள கணித படத்தில் உள்ள எளிய கணக்குகள் கேட்கப்படும்


4.பொது அறிவியல்

நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன், உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள். அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும் முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல், சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்.

Study Material : இயற்பியல் - Notes,QA & Test"

Study Material : வேதியியல் - Notes,QA & Test"

Study Material : தாவரவியல் - Notes,QA & Test"

Study Material : விலங்கியல் - Notes,QA & Test"


5.இந்திய வரலாறு

சிந்துசமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் , மௌரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள், முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள். ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.

Study Material : இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றம் பண்பாடு - Notes,QA & Test"


6. புவியியல்

புவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள், புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை, மழை பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள், பயிர்கள் பயிரிடும்முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலைப்பிரதேசங்கள், தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.

Study Material : புவியியல் - Notes,QA & Test"


7.இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல். விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர்., இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு. மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.

Study Material : இந்திய தேசிய இயக்கம் - Notes,QA & Test"


8.நடப்பு நிகழ்வுகள்

சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதியதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, வரலாற்று நிகழ்வுகள். இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு விருதுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.

Study Material : நடப்பு நிகழ்வுகள் 2021


9.உளவியல்(Psychology)

அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்:

இப்பகுதியில் உள்ள வினாக்கள், போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை கொண்டதாகவும் இருக்கும்.

Study Material : திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள்

Share with Friends