Easy Tutorial
For Competitive Exams

Science QA அணுக்கரு இயற்பியல் Notes

அணுக்கரு இயற்பியல்

புரோட்டான்களும், நியூட்ரான்களும் - நியூக்ளியான்கள் எனப்படும்.

மின்காந்த அலைகள்
  • ஊடகத்தின் துணையின்றி பரவக்கூடிய அலைகள் - மின்காந்த அலைகள் எனப்படும்.
  • மின்காந்த அலைகளுக்கு எ.கா. 1) காமாக் கதிர்கள் 2) X - கதிர்கள் 3) புறஊதா கதிர்கள் 4) அகச்சிவப்பு கதிர்கள் 5) கண்ணுறு கதிர்கள் 6) மைக்ரோ அலைகள் 7) ரேடியோ அலைகள்.
  • மின்காந்த அலைகளின் வேகம் - C = v$\lambda$
  • ஒளியின் திசைவேகத்திற்கான சமன்பாடு C = v$\lambda$ அல்லது V = n$\lambda$
  • அனைத்து மின்காந்த அலைகளும் - குறுக்கலைகள் ஆகும்.
  • அலைகளின் அடிப்படை பண்புகளான எதிரொலித்தல், விலகல், குறுக்கீட்டு விளைவு,விளிம்பு விளைவு போன்றவற்றிற்கு அனைத்து மின்காந்த அலைகளும் உட்படுகின்றன.
  • மின்காந்த அலைகளுக்கு மின்னூட்டம் இல்லை.


X- கதிர்கள்:
  • அதிவேக எதிர்மின் வாய் கதிர்கள் டங்ஸ்டன், காப்பர் போன்ற உலோகங்களை தாக்கும்போது உருவாகும் கதிர்கள் - X - கதிர்கள் ஆகும்.
  • தற்காலத்தில் பயன்படும் X கதிர் குழாயினை வடிவமைத்தவர் - கூலிட்ஜ்.
  • எலும்பு, தங்கம், காரீயம் போன்ற பொருள்களின் வழியே X கதிர்கள் ஊடுருவாது.

பயன்கள்:
  • எலும்பு முறிவு சிகிச்சைக்கும், புற்றுநோய் கட்டிகளை அழிக்கவும், சில தோல் நோய்களை குணப்படுத்தவும், X - கதிர்கள் பயன்படுகின்றன.
  • இரத்தினக்கல்லின் தரம் அறியவும், டென்னிஸ் பந்துகள் மற்றும் ரப்பர் பந்துகளின் குறைபாடுகளை கண்டறியவும், உலோக வார்ப்புகள் மற்றும் உலோக இணைப்புகளில் ஏற்படும்.
  • விரிசல்களை கண்டறியவும் X கதிர்கள் பயன்படுகிறது.
  • குற்றங்களை துப்பறியவும், படிகங்களின் உள்ளமைப்பு மற்றும் கரிம மூலக்கூறுகளின் அமைப்புகளையும் அறிய X கதிர்கள் பயன்படுகிறது.
  • கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டறியவும், போலிப்பத்திரங்கள் தயாரித்தலை கண்டறியவும் X கதிர்கள் பயன்படுகிறது.

அகச்சிவப்புக் கதிர்கள்
  • மனித உடலிலிருந்து வெளியிடப்படும் அகச்சிவப்பு கதிர்களின் அளவு - 1 / 10 மி.மீலிருந்து 1/100 மி. மீ.
  • இருட்டில் பாம்புகள், அகச்சிவப்புக் கதிர்களடை பயன்படுத்தி தனது இரையை தேடிக் கொள்கின்றன

பயன்கள்
  • காற்று, மூடுபனி இவற்றை கடந்து படம் எடுக்கவும், இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், தசைகளிலும், எலும்பு இணைப்புகளிலும் ஏற்படும்.
  • வலியை நீக்கவும், மூலக்கூறுகளின் வடிவமைப்பை கண்டறியவும்,அகச்சிவப்பு கதிர்கள் பயன்படுகின்றன.
  • பெயிண்ட் பூச்சுகளை குறைந்த நேரத்தில் உலர வைக்கவும், புவியிலுள்ள நீர் மூலங்களை கண்டறியவும், செயற்கை கோள்களிலிருந்து புவியின் வானிலையை படம் பிடிக்கவும்.
  • நோய்வாய்ப்பட்ட பயிர்களை கண்டறியவும் அகச்சிவப்பு கதிர்கள்பயன்படுகின்றன.

மைக்ரோ அலைகள்:

மைக்ரோ அலைகளை உற்பத்தி செய்யும் மூலகங்கள் - மைக்ரோ அலை அடுப்பு, மாக்னட்ரான், கிளிஸ்ட்ரான், இயங்கு அலைகுழாய்

பயன்கள்:
  • செயற்கைக்கோள் தொலைத் தொடர்பிலும், ராடார் சாதனங்களிலும் பயன்படுகிறது.
  • தானியக்கிடங்குகளில் பூச்சிகளை அழிக்கவும், உணவை பாக்டீரியங்களிலிருந்து பாதுகாக்கவும், ரேடியோ வானியல் துறையிலும், அணு மூலக்கூறுகளின் கட்டமைப்பு அறியவும் பயன்படுகிறது.

ரேடியோ அலைகள்:
  • பெரும அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள் - ரேடியோ அலைகள் ஆகும்.
  • விண்மீன்களும், விண்மீன் திரள்களும் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன.

பயன்கள்:

ரேடியோ அலைகள் - ரேடியோ, தொலைக்காட்சி, செய்தி தொடர்பு சாதனங்களில் பயன்படுகின்றன

கதிரியக்கம்:
  • கதிரியகத்தைக் கண்டறிந்தவர் - ஹென்றி பெக்கொரல்.
  • கதிரியக்க ஆய்வு மேற்கொண்டவர்கள் - மேடம் கியூரி மற்றும் அவரது :கியூரி மற்றும் ரூதர்போர்டு ஆகியோர்.
  • அணு எடை 206க்கு மேல் கொண்ட தனிமங்கள் - யுரேனியம், பொலோனி ,ரேடியம் ,தோரியம் .

கதிரியக்க சோதனை:
  • கதிரியக்க சோதனையில் இடதுபுறம் விலகுவது - ஆல்பா கதிர்கள்
  • கதிரியக்க சோதனையில் வலதுபுறம் விலகுவது - பீட்டா கதிர்கள்
  • கதிரியக்க சோதனையில் நேராக செல்வது - காமா கதிர்கள்


  • செயற்கை கதிரியகத்தை கண்டறிந்தவர்கள் - கியூரி, ஜோலியட்
  • தூண்டப்பட்ட கதிரியக்கம் - ரேடியோ ஐசோடோப்புகள் எனப்படும்.


  • இதய பேஸ்மேக்கர் கருவிக்கு ஆற்றல் அளிக்க பயன்படும் மின்கலம் -அணுக்கரு மின்கலம்.
  • கதிரியக்கத் தனிமம் $\alpha$ - துகள்களை உமிழ்ந்தால், அத்தனிமத்தின் அணு எண் 2 குறையும், நிறை எண் 4 குறையும்.
  • $_{92}U^{238} \rightarrow _{90}Th^{234} + _{2}He^{4}$
  • .
  • யுரேனிய அணுக்கரு பிளவின்போது 200 Mev ஆற்றல் வெளிப்படுகிறது .
  • 1 கிராம் யுரேனியம் அணுக்கரு பிளவிற்கு உட்படும் போது 5.128 X $10^{23}$ Mev ஆற்றல் வெளிப்படுகிறது. இது 2.26 X $10^{4}$ கிலோ வாட் மணி ஆற்றலுக்குச் சமம்.
  • கதிரியக்கத் தனிமம் $\beta$ - துகள் உமிழ்ந்தால், அத்தனிமத்தின் அணு எண் ஒன்று அதிகரிக்கும், நிறை எண் மாறுதல் ஏற்படுவதில்லை.
  • கதிரியக்கத்தனிமம் காமா கதிர்களை உமிழ்ந்தால், அத்தனிமத்தின் அதன் அணு எண்ணிலோ நிறை எண்ணிலோ மாற்றமில்லை. அணுக்கருவின் ஆற்றல் மட்டங்களில் மாற்றம் ஏற்படும்.
  • அணுக்கரு பிளவை கண்டறிந்தவர் -- ஆட்டோஹான் ஸ்ட்ராஸ்மான்.
  • அணுகுண்டு தாயாரிக்கப்படும் தத்துவம் - அணுக்கரு பிளவு .
  • ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கப்படும் தத்துவம் -அணுக்கரு இணைவு.
  • ஐன்ஸ்டீ ன் நிறை ஆற்றல் சமன்பாடு E = $mc^{2}$.
  • அணுநிறையின் அலகு = a.m.u.
  • 1 a.m.u. = 931 Mev.
  • Mev என்பது மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் ஆகும்.

அணுக்கரு உலை:
  • இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் அதிகம் காணப்படுவது $U^{238}$ (99.28%)
  • செறிவூட்டப்பட்ட யுரேனியம் என அழைக்கப்படுவது - $U^{235}$ எனப்படும்.
  • அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் தணிப்பான்கள் -- கிராபைட், பெரிலியம், கனநீர் $(D_{2}O)$, பெரிலியம் ஆக்சைடு.
  • அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தும் கழிகள் - காட்மியம், போரான், அல்லது ஹேப்னியம்.
  • அணுக்கரு உலையில் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்கள் - சாதாரணநீர், கனநீர் $(D_{2}O)$, காற்று, கார்பன்டை ஆக்சைடு, ஹீலியம், திரவ சோடியம்.

அணுக்கரு இணைவு:
  • அணுக்கரு இணைவில் இரு டியூட்ரியம் அணுக்கருக்கள் இணைந்து ஒரு ஹீலியம்.
  • அணுக்கருவாக மாறும் போது வெளிப்படும் ஆற்றல் E = 23.84 Mev.
  • அணுக்கரு இணைவு கொள்கையை வெளியிட்டவர் - பெத்தே.
  • சூரியனிலும், விண்மீன்களிலும் ஏற்படும் ஆற்றலுக்கு காரணம் - அணுக்கரு இணைவு.
  • சூரியனை விட அதிக வெப்பநிலையில் உள்ள விண்மீன்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலை கார்பன் - நைட்ரஜன் சுழற்சி மூலம் பெறுகின்றன .
  • சூரியனைவிட குறைந்த வெப்பநிலையிலுள்ள விண்மீன்கள் தங்களுக்குத் தேவையான ஆற்றலை புரோட்டான் - புரோட்டான் சுழற்சி மூலம் பெறுகின்றன.

அணுக்கரு இணைவைப் பயன்படுத்துவதன் நன்மைகள்:
  • தேவையான எரிபொருள்களான ஹைட்ரஜன், டியூட்ரியம், லித்தியம் போன்ற அணுக்கருக்கள் மிகுந்த அளவில் கடலில் கிடைக்கின்றன .
  • அணுக்கரு இணைவில் கழிவுப்பொருள்கள உருவாவதில்லை அணுக்கரு பிளவு மூலம் ஓர் அணுக்கரு துகளின் மூலம் கிடைக்கும் சராசரி ஆற்றல் -0.850 Mev.
  • அணுக்கரு இணைவு மூலம் ஓர் அணுக்கரு துகளின் மூலம் கிடைக்கும் சராசரி ஆற்றல் - 6.75 Mev
  • கதிர்வீச்சின் அலகு - ராண்ட்ஜன் ஆகும்.
  • ஒரு கிலோ கிராம் காற்றில் 1.61 X $10^{15}$ அயனி இணைகளை உண்டாக்கக்கூடிய கதிர்வீச்சு ஓரலகு ராண்ட்ஜ ன் ஆகும்.
  • இந்தியாவில் முதல் அணுக்கரு ஆற்றல் திட்டத்தை உருவாக்கியவர் - ஹோமிபாபா.
  • பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ள இடம் - டிராம்பே.
  • பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காணப்படும் ஆராய்ச்சி உலைகள் -அப்சரா, சிரஸ், ஜெரிலினா, பூர்ணிமா, துருவா
  • X- கதிர்கள் கால்சியம் வழியே ஊடுருவாது
  • கதிரியகத்தின் மூலம் ஒரு ரேடியே ஐசோடோப்பானது தனது தொடக்க நிறையிலிருந்து சரிபாதி நிறையாக மாறுவதற்கு "அரைஆயுட்காலம்” என்று பெயர்
  • கார்பனின் அரை ஆயட்காலம் --5730 ஆண்டுகள்
  • உலகில் மிகப்பழமையான பாறைகள் காணப்படும் இடம் - வட கனடா

Share with Friends