Easy Tutorial
For Competitive Exams

Science QA தில்லையாடி வள்ளியம்மை

தில்லையாடி வள்ளியம்மை

  • பெயர் : வள்ளியம்மை
  • பெற்றோர் : முனுசாமி - மங்களம்
  • பிறந்த ஊர்: ஜோகன்ஸ்பர்க், தென்னாப்பிரிக்கா
  • காலம் : 1898 - 1913
  • நெசவுத்தொழிலாளியான வள்ளியம்மையின் தந்தை முனுசாமி, ஆங்கிலேயர்கள் தம் நாட்டுத்துணிகளை இந்தியாவில் விற்பனை செய்ததால் தம் தொழில் பாதிக்கப்பட்டதை அடுத்து வேலைத் தேடி தன் மனைவி மங்களம் அம்மையாருடன் புதுச்சேரியில் இருந்து சென்று தென்னாப்பிரிக்காவில் குடியேறினார்.
  • அங்கு ஜோகன்னஸ்பர்க் நகரில் சிறிய அளவில் காய்கறிக் கடை நடத்தினார்.
  • அங்கு, வள்ளியம்மை 1898-ல் பிறந்தார்.
  • தென்னாப்பிரிக்காவில் பிறந்தாலும் அவரின் தாயாரின் ஊரான தில்லையாடி பெயரை இணைத்து "தில்லையாடி வள்ளியம்மை" என அழைக்கப்படுகிறார்.
  • தில்லையாடி - நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூருக்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.
  • தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக அமைந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான ஆண்டு 1913.
  • தென்னாப்பிரிக்க திருமணச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்பதே அந்த தீர்ப்பு.
  • காந்தியடிகள் தீர்ப்புக்கெதிரான அறப்போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
  • காந்தியடிகளின் உரிமை முழக்கத்தால் கவரப்பட்ட வள்ளியம்மை அறப்போராட்டத்தில் முனைப்புடன் பங்கேற்றார்.
  • வள்ளியம்மை கைது செய்யப்பட்ட நாள் - 23.12.1913
  • வள்ளியம்மை கைது செய்யப்பட்ட இடம் - வால்க்ஸ்ரஸ்ட்
  • அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை அளித்தது.
  • சிறையில் மோசமான உணவால் காய்ச்சலுக்கு ஆட்பட்டு, போதிய மருத்துவம் அளிக்கப்படாததால் உயிருக்குப் போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
  • வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் "சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?" எனக் கேட்டபோது, வள்ளியம்மை "இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்றார்.
  • இந்தியர்கள் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்ற வள்ளியம்மையின் பதிலைக் கேட்டு காந்தியடிகள் நெகிழ்ந்தார்.
  • சிறைச் சூழலால் உடல்நலம் குன்றிய வள்ளியம்மை, 22.02.1913 அன்று தனது 16-வது வயதில் காலமானார்.

காந்தியின் கருத்து:

  • "என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது" என்றார் காந்தி.
  • வள்ளியம்மை குறித்து, "மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர்நீத்த அவருடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. நம்பிக்கைதான் அவரது ஆயுதம்” என்று "இந்தியன் ஒப்பீனியன்” இதழில் எழுதியுள்ளார்.
  • தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்” என்று "தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம்” என்னும் நூலில் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புகள்:

  • தில்லையாடி வள்ளியம்மையை போற்றும் வகையில், அஞ்சல் தலையும், அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டது.
  • தமிழக அரசு, தில்லையாடியில் அவரது சிலையை நிறுவியுள்ளது.
  • தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் - கோ-ஆப்-டெக்ஸ், தனது சென்னையிலுள்ள 600-வது விற்பனை மையத்திற்கு "தில்லையாடி வள்ளியம்மை மாளிகை" எனப் பெயர் சூட்டியுள்ளது.

Share with Friends