Easy Tutorial
For Competitive Exams

Science QA இந்திய அரசியலமைப்பின் முகவுரை

இந்திய அரசியலமைப்பின் முகவுரை

  • முகவுரை என்பது இயற்றப்பட்ட

    சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.

  • முகவுரை அரசியலமைப்பின் தொகுப்பாகவும் அதன் சாரமாகவும் உள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் முகப்புரை,

    பண்டித ஜவஹர்லால் நேருவால் டிசம்பர், 13 1946-ல் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22, 1947-இல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘குறிக்கோள் தீர்மானத்தை’ அடிப்படையாகக் கொண்டு

    எடுத்தாளப் பெற்ற ஒன்றாகும்.
  • இந்திய அரசியலமைப்பு முகவுரையைக் கொண்டே தொடங்குகிறது.
  • அமெரிக்க

    அரசியலமைப்புச் சட்டமே முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது.

முகப்புரை

  • இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்
  • சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்,
  • சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்,
  • தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும்,
  • உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு,

1949, நவம்பர் இருபத்து ஆறாம் (Nov-26)

நாளாகிய இன்று நம்முடைய அரசியலைப்புக் பேரவையில்,ஈங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள்

  • Sovereign – இறையாண்மை

    – முழவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.
  • Socialist – சமதர்மம்

    – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
  • Secular – மதச்சார்பின்மை

    – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)
  • Democratic – மக்களாட்சி

    – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.
  • Justice – நீதி

    – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி
  • Liberty – உரிமை, சுதந்திரம்

    – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு
  • Equality – சமத்துவம்

    – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில்
  • Fraternity – சகோததரத்துவம்

    – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.

முகவுரையின் முக்கியத்துவம்

  • அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் எந்நோக்கத்திற்காக அதனை இயற்றினார்கள், அதன் மூலம் அடைய விரும்புகிற அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார சூழல்கள் பற்றிய குறிப்புகளை முகவுரை பகிர்கிறது.
  • யு. பால்கிவாலா-

    அரசியலமைப்பின் அடையாள அட்டை
  • மு.ஆ. முன்ஷி

    – நம் இறையாண்மையுடைய மக்களாட்சிக் குடியரசின் ஜாதகம்.
  • சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்

    – எங்கள் நீண்ட நாள் சிந்தமையும் கனவையும் உள்ளடக்கியது.

அரசியலமைப்பின் ஒரு பகுதி – முகவுரை

  • அரசியலமைப்பு வரலாற்றில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியா என்பது குறித்த சிக்கல்கள் எழுந்தன.
  • பெரும்வாரி வழக்கில் (1960),

    உச்சநீதிமன்றம், முகவுரை, அரசிலமைப்பின் பகுதி அல்ல என்று தீர்ப்பளித்தது.
  • ஆனால் பின்னால் வந்த

    கேசவனந்த பாரதி வழக்கில் (1973),

    முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என்று தீர்ப்பளித்தது.
  • பின்னால் நடந்த

    எல்.ஐ.சி. வழக்கிலும் (1995)

    இதே தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
  • அரசியல் நிர்ணய சபையின் தலைவரும் இதே கருத்தைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஆனால் இரண்டு விஷயங்கள் குறிப்படத்தக்கன
  • முகவுரை சட்டமியற்றுவதற்கான அதிகார மூலம் அல்ல் மேலும், சட்டமியற்றுவதை தடை செய்யும் சாரத்தையும் உள்ளடக்கியதல்ல.
  • இது நீதி மன்றங்கள் மூலம் நிறைவேற்றப்படக்கூடிய சட்டம் அல்ல.

முகவுரையும் சட்டத்திருத்தமும்

  • கேசவானந்த பாரதி வழக்கில் (1973) முகவுரையை திருத்தம் செய்ய முடியுமா

    என்ற கேள்வி எழுந்தது.
  • உச்சநீதிமன்றம் முகவுரையை திருத்தம் செய்ய முடியுமென்றும், மேலும் அவ்வாறு திருத்தம் செய்கையில் அரசியலமைப்பின் ‘அடிப்படைக் கூறுகளுக்கு (டியளiஉ கநயவரசநள) பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியது.
  • இதைப் பின்பற்றி

    1976-ஆம் ஆண்டு 42-ஆவது சட்டத் திருத்தம்,“சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு”

    ஆகிய மூன்று சொற்களை முகவுரையில் சேர்த்தது.

முகப்புரை:

“    நாம், இந்திய மக்கள், உறுதி கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி;
எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை;
படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;


மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.
இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம். ”

Share with Friends