Easy Tutorial
For Competitive Exams

Science QA உயிர் தகவல் தொடர்பு (Bio‐communication)

உயிர் தகவல் தொடர்பு :(Bio‐communication)

தாவரங்களில் நடைபெறும் உயிரினத் தகவல் தொடர்பு :
* தாரங்கள் என்பதை கட்டின்றி நகரமுடியாத ஒரு உயிரினம் ஆகும். இவை பூமியின் மேல் மற்றும் அடியில் சுற்றுச்சுழல் வளங்களுக்காக போட்டிப்போடுகின்றன. தாவரங்களில் அதிகப்படியான வெவ்வேறு திறன் வாய்ந்த தொடர்புகள் நடைபெற வாய்ப்பு உண்டு. ஏனெனில் தாவரங்கள் இணையான தகவல் தொடர்பு முறையை கொண்டு உள்ளன. வெற்றிகரமான தகவல் தொடர்பு முறை, தாவரங்களை செழிப்பாக வளரச் செய்கின்றன. தோல்வியடைந்த தகவல் தொடர்பு முறை எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. செல்லிடை தகவல் தொடர்பு முறை வளர்ச்சி மற்றும் மேம்மாடு , வடிவம் மற்றும் இயக்கத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. பொதுபான சிறப்பியல்பு. இவை தகுந்த தகவமைப்பு இயல்பு உருவாவதைக் குறிக்கிறது.

* அடையாளங்கள் (சைகைகள்) மூலம் நடைபெறும் தகவல் தொடர்பு என்பது குறைந்தது இரண்டு உயிரின பொருள்கள், அதாவது செல்கள், திசுக்கள், உறுப்புகள், உயிரினங்கள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள அனைத்து ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கான முன் நிபந்தனையாகும். பெரும்பாலான நிலைகளில் உயிர்த் தகவல் தொடர்பின் அடையாளம் என்பது வேதியியல் மூலக்கூறுகள் ஆகும். இவை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் தொடர்பு கொள்கின்றன. திறன் வாயந்த தகவல் தொடர்பு வேதியியல் மற்றும் இயற்பிபயல் தகல் தொடர்பு முறைகளை கொண்டு உள்ளது. கடத்தல் அல்லது செல் - செல் தகவல் தொடர்பு ஆகும். இது ஒரு குறிப்பிட்ட தாவர திசு இணைப்பு மூலம் நடைபெறுகிறது. உடல் சார்ந்த தகவல் தொடர்பானது மின்னனு, நீர் மற்றும் இயந்திர அடையாளங்கள் மூலம் நடைபெறுகிறது.

* நரம்பு இணைப்புகளில் நடைபெறும் செல் - செல் தகவல் தொடர்பிற்காக, தாவரங்கள் நரம்பணுக்கடத்திகளான ஆக்சினை பயன்படுத்துகின்றன. மேலும் குளுட்டமேட், கிளைசின், ஹிஸ்டமைன், அசிடைல் கொலைன் மற்றும் டோபமைன் போன்ற நரம்பணுக்கடத்திகளையும் தாவரங்கள் பயன்படுத்துகின்றன. ஃபைட்டோஹார்மோன்களைப் போன்று, தாவர பெப்டைடு ஹார்மோனான சிஸ்டமின் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தாவரங்கள் இதனை உள் காயங்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றன. ஒரு பயனுள்ள பாதுகாப்பு செயலில் சிஸ்டமின், ஜாஸ்மோனேட் மற்றும் எத்திலின் ஆகியவை சமிக்கை மூலக்கூறுகளாக செயல்படுகின்றன.

தாவரங்களில் வேதிப்பொருட்களின் பரிமாற்றம் :
* தாவரத்தினுள் மற்றும் தாவரங்களுக்கு இடையே நடைபெறும் வேதியியல் தகவல் தொடர்பு மிகவும் சிக்கலானது. தற்போது 20க்கு மேற்பட்ட பல்வேறு வகையான மூலக்கூறு தொகுதிகள் தகவல் தொடர்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

* வேதி தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களாவன.

a) ஆக்சின் :
* தாவர வேர்கள் தாவர தண்டுகள் சுற்றுச்சூழல் குறிப்பலைகளைக் கண்டுபிடிக்கின்றன. அதே போன்று வளர்ச்சி நிலைகள், நீண்ட தொலைவு தகவல் தொடர்பு வழிமுறையைக் கண்டுபிடிக்கின்ற ஆக்சின், ஹார்மோன்கள், உருவத் தோற்றவியல் மற்றும் குறிப்பலைகளைச் செலுத்தும் வழிமுறைகளில் பயன்படுத்துகிறது. தாவர நரம்பிணைப்பிலி ஆக்சின் ஒளி, ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுவதால் புறவணு குறிப்பாலையாகக் கருதப்படுகிறது. இவ்வாறாக இருந்த போதிலும் இது மின்னணு குறிப்பலைகளை அனுப்பும் புறவணு தூது பொருளாகச் செயல்படுகிறது. மேலும் செல் பிரிகைக்காக குறிப்பலைகளை ஒன்றுபடுத்துகிறது.

b) பெப்டைடு ஹார்மோன் :
* தாவர பெப்பைடு ஹார்மோன் சிஸ்டமின் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தாவரங்கள் இதனை உள் காயங்களுக்கு எதிர்பொருளாக பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக உயிரற்ற அழுத்த ஹார்மோன், அப்சிசிக் அமிலம் ஆகியவை உயிருள்ள அழுத்த குறிப்பலைகளில் உள்ள பல்வேறு நிலைகளாக செயல்படுவதன் மூலம் நோய்களைத் தடுக்கும் திறனை வழங்குகிறது.

*தாவர ஹார்மோன்கள், தாவர வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதே வகை இனங்களுக்கிடையே தகவல் தொடர்பாகவும் செயல்படுகிறது. ஃபைட்டோ ஹார்மோன்களுக்கு அப்பாற்பட்டு வேதியியல் தாது பொருட்கள், ஃபைட்டோ சல்போகைகன் வளர்ச்சி காரணி மற்றும் RNA போன்ற பெப்டைடுகளைக் கொண்டுள்ளன.

c) RNA க்கள்
* தாவரங்கள் வெளிப்புறத்திலிருந்து வரும் தாக்கங்களை அவற்றின் நடத்தையின் மூலமாக எதிர்கொள்கின்றன. அதாவது சரியான நேரத்தில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் வெளிப்படுத்துகின்றன. இது மிகவும் இன்றியமையாததாகும்.

* நுண் RNAக்கள் தாவர வளர்ச்சி அல்லது இடப்பெயர்ச்சி / படியெடுத்தல் அல்லது இடப்பெயர்ச்சி தடுப்பு ஆகியவற்றில் செல்லினுள் ஏற்படும் தகவல் தொடர்பில் ஒரு முக்கிய பங்கை அளிக்கிறது. ஆக்குத்திசு , உறுப்பு முனைவுத் தன்மை, இரத்த நாளங்களின் வளர்ச்சி, மலர் அமைப்பு, ஹார்மோன் இயக்கம் ஆகியவற்றிற்கு நுண் RNA-க்கள் தேவைப்படுகின்றன. ஆரம்ப கால சிறிய நுண் RNA, வளர்ச்சியின் போது, குறிப்பலையாக செயல்படுகின்றன.

உயிரற்ற தாக்கங்கள் பற்றிய விளக்கம் :
* இயக்கவியல் தொடர்பு, தாவரங்கள் மற்றும் பிற யூகேரியோட்டுகள் ஆகிய இரண்டிலும் உள்ள ஒட்டு மொத்த உயிரினங்கள் மற்றும் செல் நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தொடர்புகளால் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள்.
1. தீவிரமாக எதிர் செயலாற்றுகிறது.
2. அவற்றின் மகரந்தங்களை இழக்கின்றன.
3. தாவர தண்டுகளை வளர்ச்சியடைய செய்யும். தாவரத்தின் முழு அமைப்பில் பாதி அளவு இயக்க உள்ளீடுகள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. எ.கா. காற்று மற்றும் ஈர்ப்புவிசை

* தாவர அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ளுதல் மிகவும் நுட்பமானதாகும். நெட்டையாக வளரும் தாவரங்களில், எ.கா. நீர் சமநிலை இடங்களில் செல் சுவர் வளர்ச்சி மற்றும் அமைப்பிற்கு அதிகப்படியான தேவைகள் உள்ளன. இவை சேமிப்பு மற்றும் அழுத்த பங்கீட்டின் போது அதிகப்படியான அழுத்தத்தை தாங்கிக் கொள்ளுமாறு இருக்க வேண்டும்.

தாவரங்களின் எதிர் உயிரினத் தகவல் தொடர்பு (Transorganismic Commuication of Plants) :
* உயிரினங்களின் அடையாளங்கள் மூலம் நடைபெறும் குடும்பங்கள் மற்றும் உயிரினப் பேரரசு ஆகியவற்றை சார்ந்திருப்பது என்பது தாவரங்களுக்கு மிக இன்றியமையாததாகும். இவை ஏறக்குறைய எப்போதும் இணைந்து வாழ்பவையாக அல்லது ஒட்டுண்ணிகளாக உள்ளன. இவற்றின் வரம்பு, நடுநிலைத்தன்மை மூலம் ஒன்றுக்கொன்று பயனடைதல் முதல் மற்றொன்றை அழிப்பது வரை உள்ளது. பல்வேறு வகையான இணை வாழ்வு தகவல் தொடர்பிற்கு அதில் ஈடுபட்டுள்ள உயிரினங்களின் பல்வேறு இயல்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

* வேதியியல் சமிக்கை பொருட்கள் என்பது பழமையான அடையாளம் ஆகும். இது நுண்ணுயிரிகள், பூஞ்சை, விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றினால் பயன்படுத்தப்படுவதாகும்.

* இவை சுற்றுப்புறத்தில் உள்ள திரவங்கள் அல்லது உடலினுள் உள்ள இரத்தத்தின் வழியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றை வளிமண்டலத்தின் மூலம் பரப்பலாம் மற்றும் தெரிந்து கொள்ளலாம். இலைகள் எப்பொழுதும் எளிதில் ஆவியாகக் கூடியதை சிறிய அளவு வெளிவிடுகிறது. ஆனால் ஒட்டுண்ணி பூச்சிகளால் பாதிக்கப்படும் போது அதிக அளவில் வெளிவிடுகிறது.

* தாவரங்கள் பூச்சிகளால் தாக்கப்படும் போது அவை தடுப்பாற்றல் பொருளை வளர்ச்சியடையச் செய்கிறது. அவற்றின் செயல்முறை விலங்குகளில் செயல்படுவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட தாவரங்கள் ஒரு வகை நறுமணத்தை உற்பத்தி செய்கின்றன. அது மற்ற தாவரங்களை எச்சரிக்கை செய்கிறது. பிறகு அவை வேகமாக என்சைம்களை உற்பத்தி செய்கின்றன. இவை இலைகளை, இலை உண்ணும் பூச்சிகள் உண்ணாதவாறு மாற்றுகிறது. ஒரு கைதிகளை சூழ்ந்துள்ள சிறைச்சாலை போன்று தாவரங்கள் அதனை சூழ்ந்துள்ள பூச்சிகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்றவாறு என்சைம்களை மேம்படுத்துகின்றன.

* தாவரங்கள் கட்டற்ற இயக்கம் இல்லாமல் இருப்பதினால் அவற்றின் எதிர்பாற்றல் இயக்கவியல் சேதாரம் மற்றும் பூச்சிகளின் பாதிப்பை நோக்கி செலுத்துப்படுகிறது. பாதிப்புகளுக்கு எதிரான பல எதிர்பாற்றலில் ஒன்றான புரோபிஸ் மட்டுப்படுத்திகள் I, IIவை உருவாக்குகிறது. இவை பூச்சிகளில் செரிமான பகுதியில் புரோட்டின் சிதைவடைதலைத் தடுக்கின்றன. இந்த வகையான பாதுகாப்பு எதிர்வினை பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களிலும் உருவாகிறது.தாவரத்தினுள் ஏற்படும் காயம் இடப்பெயர்ச்சி சிக்னல்களை (சைகை) உருவாக்குகிறிது. அது முழு தாவரத்தில் முறையான எதிர்ப்பாற்றலை மேம்படுத்துகிறது.

தாவரங்களின் இடை உயிரினத் தகவல் தொடர்பு (Inter - Organismic Communicaiton of Plants) :
* பல ஆய்வுகள் பூச்சிகள் மற்றும் இயக்கவியல் காயங்கள் மூலம் ஏற்படும் சிதைவுகளால் தாவரங்கள் வேறுபட்டுள்ளதை காட்டுகிறது. இயக்க ரீதியாக காயப்பட்ட தாவரங்கள், அதற்கு அருகாமையில் உள்ள தாவரங்களால் ஒதுக்கப்படும் பொருட்களை வெளிவிடுகின்றன. இவை அனைத்தும் பூச்சி பாதிப்பிற்கு எதிராக உடனடியாக செயல்படுகிறது.

* தாவரங்களை சுய தன்மை உடையவை மற்றும் சுய தன்மை அற்றவை என வேறுபடுத்தலாம். அந்நிய வேர்களுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள் துவங்கப்படுகின்றன. அந்நியவர்களுக்கு எதிராக தாவரத்தின் சொந்த வேர் பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு இது உருவாகிறது. தனித்த வேர்பகுதி மற்றும் அதனுடைய இணை வாழ்வு தாவரங்கள் வாழ்வதற்கு மற்றும் செழித்து வளர்வதற்கு சில அடிப்படை நிபந்தனைகள் தேவைப்படுகின்றன. இந்த முன் நிபந்தனைகள் மற்ற தாவரங்களின் வேர்கள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றன. இவை முன் நிபந்தனைகளை இடையூறு செய்கின்றன. இந்த வகையான இடையூறு செய்கின்றன. இந்த வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் வேர் பகுதியில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிராக எதிர் - நுண்ணுயிர் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

* தாவரங்கள் உயிருள்ள அடையாளங்களைப் பயன்படுத்தி அவற்றின் இருக்கும் தன்மை, இயலாத தன்மை, அருகாமையில் உள்ள தாவரங்களின் அடையாளம், வளர்ச்சி இடம், வளர்ச்சி இடையூறு மற்றம் போட்டி ஆகியவற்றை மற்ற தாவரங்களுக்கு தெரிவிக்கின்றன.

* தாவரங்களை ஒரு இடத்திலிருந்து நீக்கிவிட்டு மற்றொரு இடத்தில் பயிரிட்டால் அவை பல மாதங்களுக்கு அவற்றின் முந்தைய நெருங்கிய அண்டைத் தாவரங்களின் அடையாளங்களை நினைவில் வைத்திருக்கும்.

தாவரங்களின் உள் உயிரினத் தகவல் தொடர்பு(Intra-organismic communication of Plants) :
* தாவரத்தின் எதிர்வினைக் கட்டுப்பாடு பரவலாக்கப்பட்டது. இவை தாவரங்களைத் தனித்து வளரவும், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் அவற்றின் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் செய்கிறது.

பாக்டீரியாவில் நடை பெறும் உயிரினத் தகவல் தொடர்பு :
* பாக்டீரியா தகவல் தொடர்பு கொள்கிறது. எனவே அதன் பல செல் உயிரினங்கள் போன்று அவற்றின் நடத்தைகளை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் ஒருங்கமைக்கின்றன. தற்போது தகவல் தொடர்பு (சைகை) முறையை ஆய்வு செய்தால் அது அடையாளங்கள் மூலம் நடைபெறும் தகவல் தொடர்பாக உள்ளது என்பது தெரிய வருகிறது. அதாவது தகவல்கள் வெவ்வேறு முறைகளில் சைகைகளை வெளிப்படுத்துவன் மூலம் பரிமாற்றம் செய்கிறது. அடையாளங்கள் பெரும்பாலும் வேதியியல் மூலக்கூறுகளாக உள்ளன. சில சமயங்களில் தொடு உணர்ச்சி மூலம் தொடர்பு கொள்கின்றன. இவை அவற்றிற்குள்ளே மற்றும் புரோகேரியோம் உயிரினங்களுக்கு இடையே சிக்னல்களாக (சமிக்கை) செயல்படுகின்றன.

* குவாரம் சென்ஸிங் என்பது அடையாளம் மூலம் நடைபெறும் தகல் தொடர்பை விளக்கும் ஒரு வார்த்தை ஆகும். இதில் வேதியியல் மூலக்கூறுகள் பாக்டீரியா மூலம் உருவாக்கப்படுகின்றன. இந்த மூலக்கூறுகள் மரபணு படியெடுத்தலின் பல வகைகளை வெளிப்படுத்துகிறது. பல பாக்டீரியாக்கள் பல மடங்கு குவாரம் சென்ஸிங் தொகுப்பை பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக எவ்வாறு ஒரு குறிப்பிட்ட மரக்கிளை மற்றும் ஒரு தாவரத்தின் முழு அமைப்பானது காற்று, ஒளியின் கோணத்தை பொறுத்து வளர்ச்சியடைகிறது என்பதாகும். தாவரங்கள் அவற்றின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து எடுக்கப்படும் பெரும்பாலான நடவடிக்கைக்கு அத்தாவரத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தகவல்கள் தேவைப்படுகின்றன.

* மேலும் தகவல் தொடர்பானது பல்வேறு இன பாக்டீரியாக்களுக்கு இடையே மற்றும் பாக்டீரியா, பாக்டீரியா அல்லாதவைகளுக்கு இடையே நடைபெறுகிறது. பிளத்தல், உயிர்வித்து வெளியாதல், இரண்டாம் நிலை கழிவுகளை தொகுத்தல் ஆகியவற்றிற்கு வேதிப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இவை உடல் ரீதியான தொடர்புகள் மூலம் தகவலைப் பரிமாறிக் கொள்கின்றன. இது உயிர்திரை அமைப்பில் மிக முக்கியமானது ஆகும். மேலும் உயிரற்ற தாக்கங்கள் ஒரு குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்கள் அல்லது நீரியக்க மாற்றங்களான சுற்றுப்புறச் சூழ்நிலை ஆகியவற்றிற்கு சிக்னல்களாக செல்யப்படுகின்றன.

* சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் பாக்டீரியா மருந்து எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்துகின்றன. இது உயிர்த்திரை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

* உயிர்த்திரை அமைப்பு என்பது அதிக உடல்ரீதியான மற்றும் ஒரு குறிப்பிட்ட சைகை அனுப்புதலைக் கொண்டுள்ள சிறப்பு வகையான ஒருங்கமைப்பு ஆகும்.

பாக்டீரியாவின் வேதிப் பொருள் பரிமாற்றம் (Semio chemical Vacabulary of Bacteria) :
* பாக்டீரியா குறிப்பாக பல வகைப்பட்ட நிலைகளில் செமியோகெமிக்கல் பரிமாற்றத்தைப் பயன்படுத்துகின்றன. ஏனெனில் சில சைகைகளை அனுப்பும் மூலக்கூறுகள் மீண்டும் பயன்படுத்தும் பொருட்களாக உள்ளன. அசைல் ஹோமாசெரைன் லாக்டோன்கள் மற்றம் சீரான ஒலிகோபெப்டைடுகள் பல வகைப்பட்ட முறையில் சிக்னல்களாகப் பயன்படுகின்றன. V-பியூடிரோ லாக்டன்கள் உயிர்வித்து வெளியாதல். முறை மற்றும் எதிர் உயிர்ப்பொருளாக பயன்படுகின்றன. C-சிக்னல் என்பது செல் மேற்பரப்பு - புரோட்டினுடன் தொடர்புடையது. இது இயங்குத் தன்மையை ஒருங்கிணைக்க ஹோமோசெரைன் லாக்டோனை தகவல் தொடர்பு முறையில் சைகைகளாக பயன்படுத்தப்படுகின்றன. அதே போன்று கிராம் பாஸிட்டிவ் பாக்டீரியா ஒலிகோபெப்டைடுகளை குவாரம் சென்சிங் தகவல் தொடர்பு முறையில் பயன்படுத்துகின்றன. குறியீடு அல்லாத RNA உயர்நிலை ஒழுங்கு வழிமுறையில் முக்கியமானதாக உள்ளது.

பாக்டீரியாவின் எதிர் உயிரினத் தகவல் தொடர்பு (Trans - organismic Communication of Bacteria) :
* மண் பாக்டீரியா, மைக்கோரைசஸ் பூஞ்சை மற்றும் தாவர வேர்கள் ஆகியவற்றிற்கு இடையே நடைபெறும் தகவல் தொடர்பை நாம் சிக்கலாக உள்ளதென்று கருதுகின்றோம்.

* மைக்கோரைசஸ் பூஞ்சை மூலக்கூறுகளைச் சுரந்து சுற்றியுள்ள சுற்றுச்சூழலுக்குக் கொடுக்கின்றன. அவை மண் பாக்டீரியாவிற்கு ஊட்டச்சத்தாக செயல்படுகின்றன. மேலும் அவற்றின் செயல்திறனை ஊக்குவித்து தனித்துவம் மிக்க ஊட்டச்சத்துக்களைச் சிதைக்கின்றன. பிறகு இந்த ஊட்டச்சத்துக்களைச் சிதைக்கின்றன. பிறகு இந்த ஊட்டச்சத்துக்கள் மைக்கோரைசள் பூஞ்சைகளுக்கு கிடைக்கப் பெறுகின்றன. சிறப்பு மூலக்கூறுகளை உற்பத்தி செய்ய பாக்டீரியாவைத் தூண்டுதல் செய்வதன் மூலம் அல்லது பாக்டீரிய தகவல் தொடர்பு வழிமுறையை தொந்தரவு செய்வதன் மூலம் தாவர வேர்கள், பாக்டீரியா சிக்னலிங் மூலக்கூறுகள் போன்று செயல்படுகின்றன.

பாக்டீரியாவின் இடை உயிரின தகவல் தொடர்பு (Inter-organismic Communication of Bacteria) :
* பாக்டீரியாக்கள் கூட்டாக சேர்ந்து வாழ்கின்றன. ஏறக்குறைய அனைத்து வகைகளும் மற்ற இன பாக்டீரியாவுடன் சேர்ந்து காணப்படுகிறது. பல்வேறு சைகைகள் மூலம் நடைபெறும் தகவல் தொடர்பு மூலம் தாமாகவே ஒருங்கமைகின்றன. பாக்டீரியா உயிருள்ள சூழ்நிலையில் உள்ள அனைத்து சுற்றுச் சூழலிலும் இனங்களுக்கிடையே மற்றும் இனங்களுக்குள் அடையாளங்களை பயன்படுத்துகின்றன.

* கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களைப் பொறுத்து சில பாக்டீரியா இயல்பான செல் வளர்ச்சியை மட்டப்படுத்துகிறது. இது பல வகையான வேறுபட்ட செல் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது போதுமான ஏற்புத் தன்மை இயல்புடைய சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு உள்ளது. எனவே வெவ்வேறு சுற்றுச்சூழல் நிலை, ஒரே விதமான மரபணு தகவல் தொகுப்பில் வெவ்வேறு விதமான மரபணு வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கிறது. ஒரே கூட்டம் பல முறை இந்த மாற்ற சூழ்நிலைக்கு ஆட்படுகிறது எனில், அது அதிக செயலாற்று திறனைப் பெற்றியிருக்கிறது என்று கூறலாம். இது பாக்டீரிய தொகுதிகள் நியாபக சக்தியை மேம்படுத்துவதையும், அவற்றின் அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்வதையும் குறிக்கிறது. மனித வாய்வழி தூவாரத்தில் காணப்படும் பல வகையான பாக்டீரிய இணை வாழ்விகளின் தகவல் தொடர்பு முறையானது மிக சுவாரஸ்யமானது மற்றும் மிகவும் ஆராயக்கூடிய நிகழ்வாக உள்ளது. மனித பல் மற்றும் வாய் சவ்வுகளில் பாக்டீரியாக்கள் நோய் ஏற்படுத்தும் தன்மையை உருவாக்குகின்றன. இவை குறிப்பிட்ட இனங்கள் மற்றும் மாறுபட்ட இனங்களுக்கு இடையே பரஸ்பர முறையில் அடையாளங்களைப் பயன்படுத்தி தகவலை பரிமாறிக் கொள்கின்றன. மனிதனின் வாய் துவாரத்தில் உள்ள பற்சிதைவு தனித்தன்மை வாய்ந்தது. இது மற்ற இனங்களில் காணப்படுவது இல்லை. சிறப்பு வகையான தகவல் தொடர்பு முறை, சைகைகளை உருவாக்குதல் மற்றும் அதனைப் பரப்புதலில் தெளிவான படிநிலைகளைக் கொண்டுள்ளது. அவை
a. வளர்சிதை மாற்ற பரிமாற்றம்
b. செல் - செல் அடையாம் காணல்
c. மரபணு பரிமாற்றம்
d. விருந்தோம்பியின் சைகையை அடையாளம் காணல் மற்றும் ஒரே மாதிரியான அல்லது தொடர்புடைய இனங்களுக்கு இடையே சைகை அடையாளம் காணல்

பாக்டீரியாவின் உள் உயிரினத் தகவல் தொடர்பு (Intra-organismic Communication of Bacteria) :
* உள் உயிரினத் தகவல் தொடர்பு முறை என்பது செல்லினுள் சைகைகள் மூலம் நடைபெறும் தகவல் தொடர்பு முறையாகும். இது இனப்பெருக்கம், மாற்றம், பரிணாம வளர்ச்சி அடைந்த வேர்கள் மற்றும் மரபணு வார்த்தைகளின் அடிப்படையில் புரோகேரியாட்டுகளை ஒழுங்கமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

* புரோகேரியாட்டிக் மரபணு வரிசை புரோட்டின் குறியீட்டு வரிசையாக பராமரிக்கப்படுவது இல்லை. புரோட்டின்களின் இயற்பியல் ரீதியான தொடர்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரே மாதிரி உயர் வரிசை கொண்ட ஒழுங்கமைவுகள் ஏறக்குறைய அனைத்து வகையான பாக்டீரிய மரபணுக்களிலும் காணப்படுகின்றன.

* தற்போதைய ஆய்வுகள் அதிக திறன் வாய்ந்த புதிய வகையான மரபணு வரிசையை குறிப்பிட்டு காட்டுகிறது. இவை தீவிரமான உள் உயிரினங்களின் மறுசேர்க்கை உடன் நடைபெறும் கிடைமட்ட மரபணு பரிமாற்றத்தின் ஆவணங்களாக உள்ளன. மொத்த மரபணுக்கள் அல்லது மரபணு தொகுப்புகளின் இந்த பரிமாற்ற நிகழ்வு பாக்டீரிய வாழ்க்கை முறையில் அதனை செயல்திறன் மிக்க பல பாக்டீரியாவுடன் (அதாவது ஃபோனோடைப்) உடன் இணைவதற்கு உதவுகிறது. உருமாற்ற முறையானது வெளியிடப்படும் பாதுகாப்பற்ற DNA வை உள்ளடக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மறுசேர்க்கை நடைபெறுகிறது. எனவே நாம் குழுவாக உள்ளவற்றில் ஒரு மரபணுவை எடுத்துக் கொள்ளாமல் பல்வகைத் தன்மை கொண்ட மொபைல் DNA-வின் பலன்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பாக்டீரிய மரபணு தொகுப்பு என்பது திறன்களின் தொகுப்பாகும். இது அனைத்து தனித்த பாக்டீரியாவில் காணப்படுகிறது. மேலும் இது பாக்டீரிய மரபணு கண்டுபிடிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு மூலாதரமாக உள்ளது.

* உள், இடை மற்றும் எதிர் உயிரினங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு ஆகிய மூன்றும் பாக்டீரியாவில் காணப்படுகிறது. இவை பாக்டீரியாக்களில் பல்வேறு இயல்பு முறைகளான சுயமாக அல்லது சுயமாக அல்லது அடையாளம் காணுதல், கூட்டமாக வாழும் அமைப்பில் மாறுபாடு, ஸ்போர்களை உருவாக்கும் அமைப்புகளின் தகவல் (Fruiting bodies), மேம்பாடு மற்றும் வளர்ச்சி முறையின் துவக்கம் ஆகியவற்றை உருவாக்கி ஒழுங்கமைக்கின்றன.

பூஞ்சை உயிரினங்களின் தொடர்பு :
* விலங்குகளில் இருந்து வேறுபட்டு, பூஞ்சைகள் கட்டின்றி நகரும் தன்மை அற்றவையாக உள்ளது. இவை நீண்ட காலத்திற்கு நீண்ட பெரும் பகுதிகளில் வாழ்கின்றன .

* ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்கமைவு முறைகள் அனைத்து உயிரினப் பேரரசுகளிலும் காணப்படுகின்றன. இதில் பூஞ்சை விதிவிலக்கு அல்ல. இந்த வகையான முறை ஒரே வகையான இனங்களுக்கு, எதிர் உயிரினங்கள், இடை உயிரினங்கள் ஆகியவற்றிற்கிடையே மைசீலியா மற்றும் ஸ்பேர்களை உருவாக்கும் அமைப்பு (Fruiting bodies) (உள் உயிரினங்கள்) உருவாகும் போது உருவாகிறது. இந்த முறை சைகை மூலம் நடைபெறும் தகவல் தொடர்பு முறையின் கொள்கை அடிப்படையில் நடைபெறுகிறது.

பூஞ்சையின் வேதிப்பொருள் பரிமாற்றம் :
* ஐந்து வெவ்வேறு வகையான முதன்மை சைகை மூலக்கூறுகள் மிகவும் மாறுபட்ட இயல்பு முறைகளான பாக்டீரிய வளர்ப்பு முறை, இனப்பெருக்கம், வளர்ச்சி மற்றும் பாத்தாஜெனிசிட்டி ஆகியவற்றில் ஈடுபடுகின்றன. இயல்பு ஒருங்கிணைப்பு மற்றும் இந்த பொருட்களின் உற்பத்தி, தகவல் தொடர்பு மற்றும் விளைவுகளின் இயல்புகளை கொண்டு மட்டுமே பெற இயலும். உலகளவில் இந்த செமியோகெமிக்கல்கள் இந்த வகையான நோக்கங்களை வெவ்வேறு பூஞ்சை இனங்களின் ஒருங்கிணைப்பவையாக செயல்படுகின்றன. இதுவரை அவற்றிற்கிடையே காணப்படும் இனமாறுபாட்டை புறக்கணிக்க முடியவில்லை .

இந்த சைகை மூலக்கூறுகளின் - பங்கு கீழ்வருமாறு:
i. மைட்டோஜன் மூலம் ஊக்குவிக்கப்பட்ட புரோட்டின் கிநெஸ் கைகைள் செல் ஒருங்கிணைப்பு, செல் சுவர் கட்டுமானம், இனப்பெருக்கம் மற்றும் சவ்வூடு பரவலில் ஈடுபடுகின்றன.

ii. சுழற்சி அடினோசின் மோனோபாஸ்பேட் அமைப்பு பூஞ்சை வளர்ச்சி மற்றும் நச்சுத்தன்கைளில் ஈடுபடுகிறது.

iii. RAS புரோட்டின் : தொடர் சைகைகளுக்கு இடையே குறுக்குப் பெச்சாக செயல்படுகிறது.

iv. கால்சியம் - கால்மாடுலின் - கால்சிநியூரின் ஆகியவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிக வெப்பநிலை, செல் / சவ்வு வர் குழம்புதல் போன்ற நிலைகளில் செல் நிலைத்து வாழ்வதற்கு உதவி செய்கிறது.

V. இரப்பமைசின்/ அசர் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துபவையாக செயல்படுகிறது.

உயிரற்ற தகவல்களின் விளக்கம் :
* பூஞ்சைகள் கிடைக்கக் கூடிய வேறுபட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்து பாய்மரங்களுடன் மிகுந்த உணர்ச்சியுடன் வினைபுரிகின்றன. இது முதலில் தொடர்பு மூலம் விளைவை ஏற்படுத்துகிறது. கார்பன் அல்லது நைட்ரஜன் பற்றாக்குறையின் போது உயிரினங்களுக்கு இடையே நடைபெறும் தகவல் தொடர்பு போதிய அளவு நடைபெறுகிறது மற்றும் அவரின் பினோ வகையானது ஹைபல் வளர்ச்சி மாறுபடுவதல் மூலம் வெளிப்படுத்துகிறது. இதுவரை இரண்டு குறிப்பிட்ட சிக்னலிங் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை இயல்புகளை ஒருங்கமைப்பு செய்கின்றன.

* விலங்குகள் மற்றும் தாவரங்களின் சரகேடியன் அமைப்பில் பருவகால மாற்றம் என்பது ஒரு அங்கமாக உள்ளது. மேலும் இது பூஞ்சைகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக இவை ஒளி மூலம் ஒருங்கமைப்படும் ஒரு உடல் சார்ந்த முறையாகும். இது பூஞ்சையின் உள்ளார்ந்த கடிகாரத்தை ஒருங்கமைக்கிறது.

பூஞ்சையின் எதிர் உயிர்னத் தகவல் தொடர்பு :
* அனைத்து உயர்வகை பூஞ்சை வாழ்க்கை முறையும் இணை வாழ்வு முறையில் இருந்தே உருவாகி இருக்கின்றன. பூஞ்சை மற்றும் ஆல்கா அல்லது பூஞ்சை மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு இடையே காணப்படும் இணை வாழ்வு (கூட்டு வாழ்வு) முறையின் மூலம் அவற்றிற்குத் தேவையான மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள உயிரினங்களுக்குத் (போட்டியாளர்கள்) தேவையான ஊட்டச்சத்துக்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. குவாரம் சென்சிங் மூலம் பூஞ்சைகள், பாக்டீரிய சேர்க்கையில் இருந்து நன்மை அடைகின்றன. பாக்டீரியாக்கள் பூஞ்சையின் வளர்சிதை மாற்ற பொருளை எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன. இதே போன்று ஆல்காக்களுடன் கூட்டு வாழ்வு முறையே மேற்கொள்கிறது.

* மற்றொரு எதிர் - பேரரசு இணை வாழ்வு சிக்னலிங் முறையானது பூஞ்சை மற்றும் எறும்புகளுக்கு இடையே காணப்படுகிறது.

* இது மில்லியன் ஆண்டுகளாக நீடித்து இருக்கும் இணை பரிணாம வளர்ச்சி தொடர்பில் இருந்து பெறப்பட்டதாகும். சுவாரஸ்மாக சில லிக்னின் - சிதைவு பூஞ்சையும் வுட செமியோகெமிக்கல்ஸை உற்பத்தி செய்கின்றன. இவை ஃபோர்மோசன் சப்டெரனியன் கரையான் போன்று உணவூட்டல் மற்றும் இரை தேடும் இயல்பைப் பெற்றுள்ளன.

பூஞ்சைகளின் இடை உயிரினங்களின் தகவல் தொடர்பு :
* இவை ஒரு செல் மற்றும் பல செல் பூஞ்சை இனங்களாக இருப்பதால், ஒரே இனங்களுக்குகிடையே மற்றும் அதனுடன் தொடர்புடைய இனங்களுக்கு இடையே நடைபெறும் தகவல் தொடர்பு முறையை, செல்லிடை தகவல் தொடர்பு முறையில் இருந்து தெளிவாக வேறுபடுத்தி காட்ட இயலாது. எனவே ஒரு செல் ஈஸ்ட்டுகளின் தகவல் தொடர்பு முறையானது அமீபாவை ஒத்துக் காணப்படுகின்றன. இது கட்டயமாக இடை உயிரின் தகவல் தொடர்பு முறையாக கருதப்படுகிறது.

* பூஞ்சைகள் குவாரம் சென்ஸிங்கை பயன்படுத்தி உயிர்த்திரை உருவாதல் மற்றும் பாத்தாஜெனிஸிஸ் ஆகியவற்றை ஒருங்கமைக்கின்றன மற்றம் பாதிக்கின்றன. இது வெளிப்புற செல் சுற்றுச்சூழலில் தொகுப்பாக உள்ள சிறு மூலக்கூறுகள் மூலம் செயலாக்கப்படுகின்றன.

* இவை போதுமான உயர் செறிவை அடைந்த உடன், அவற்றின் உட்செல்களில் ஒருங்கமைக்கும் தன்மை செயலாக்கப்படுகிறது. மேலும் தனிச்சிறப்பு வாய்ந்த மரப்பனுக்களை ஒருங்கமைக்கவும் வழி வகுக்கிறது.

பூஞ்சைகளின் உள் உயிரினங்களில் தகவர் தொடர்பு :
* உயிரினங்களுக்குள் நடைபெறும் தகவல் தொடர்பு முறை என்பது செல்களுக்குள் நடைபெறும் அடையாள இடைநிலை செயல்களாகும். விலங்குகளினல் உள்ள சமிக்ஞை வழிப்பாதைகளுக்கு (Signalling pathways) மட்டும் பொருந்தக்கூடிய புரோட்டின்கள் பூஞ்சைகளின் சமிக்ஞை வழிப்பபாதைகளிலும் காணப்படுகின்றன என்று புதிய சான்றுகள் கூறுகின்றன. மேலும் அபோப்டாடிக் முறை என்பது விலங்குகள் மற்றும் தாவரங்களில் பல செல் உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. இப்பொழுது இது ஒரு செல் உடைய பூஞ்சைகளில் வளர்ச்சி மற்றும் மூப்படைதல் முறையை ஒழுங்குப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பவளங்களின் தகவல் தொடர்பு :
பவளங்களிலும் உள்ளே மற்றும் இடையே என செல்கள், திசுக்கள், உறுப்புகளுக்கு இடையே அடையாளங்கள் மூலம் தகவல் தொடர்பு நடைபெறுகின்றன. பெரும்பாலும் அடையாளங்கள் என்பது மூலக்கூறுகளாகும். எனவே இவை செமியோசெமிக்கல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

எந்தவொரு நிலையிலும் இந்த தகவல் தொடர்பு முறைகள் வரிசையாக ஒருங்கமைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒத்திசைவான சூழல் ஒருங்கிணைப்பு முறை ஊக்குவிக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு இந்த முறைகள் அறிந்து கொள்ளப்படுகின்றன. அதே போன்று உயிரினங்களுக்கு இடையே வளமிக்க தகவல்கள் வெற்றிகரமாக பகிர்ந்துக் கொள்ளப்படுகின்றன. ஒரு முறை இந்த வழிமுறையில் இயற்கையாக அல்லது மற்ற உயிரினங்கள் மூலம் பிழை ஏற்பட்டால் அது மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும் பவள விலங்குகள் பல இடையூறுகள் இந்தத் தகவல் தொடர்பை தீவிரமான நிலையின் போது குறுக்கீடு செய்தால் அது விலங்கின் உடல் நலனைப் பாதிக்கிறது. இறுதியாக நோயை ஏற்படுத்துகிறது. மேலும் இறப்பையும் ஏற்படுத்துகிறது.

* இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களான டெர்ப்பென், கொழுப்பு, மெழுகு எஸ்டர் டைடர்பீனாய்டு மற்றும் நரம்பு கடத்திகளான அசிடைல் கொலைன், டோப்பமைன் போன்ற சில வகையான வேதிப்பொருட்கள் தகவல் தொடரில் பங்கு பெறுகின்றன.

பூச்சிகளின் தகவல் தொடர்பு :
* ஆல்கஹால், கீட்டோன், ஆல்டிஹைடு , எஸ்டர் அரோமெட்டிகட், டெர்ப்பென் போன்ற வரையறுக்கப்பட்ட ஆவியாகக்கூடிய தாவர வேதிப்பொருட்கள் பூச்சிகளின் தகவல் தொடர்பில் முக்கிய பங்கு அளிக்கின்றன. பெண்பால் மூலம் சுற்றுச்சூழலுக்கு வெளிப்படுத்தப்படும். வேதிப்பொருட்களின் கலவை அல்லது ஒரே ஒரு தனித்த வேதிப்பொருள் ஆகியவை சிக்னல்களை உருவாக்கி உடனடியாக பால் இனப்பெருக்கத்தினைத் தூண்டுகின்றன. பாசிட்டிவ் அனிமோடாக்சிஸ் பெண் இனப்பெருக்க மேல் பகுதியில் உள்ளது. இது ஆண் உயிரிகளை இனப்பெருக்கத்திற்காக ஈர்க்கிறது.

* இன ஈர்ப்பு சுரப்பி என்பது 10-18 கார்பன் சேர்மங்கள் ஆகும். இந்தக் கலவை குறைந்த மூலக்கூறு நிலையிலும் மிகவும் செயல்திறன் மிக்கது. பெண்பால், ஆண்பாலில் பாலினப் பெருக்கத்தைத் தூண்டுகிறது. அவற்றின் இயல்பு அவற்றிற்குகிடையே ஏற்படும் தகவல் தொடர்பின் அளவைப் பொறுத்தது. மேலும் ஏற்றுக் கொள்ளப்படும் செல்களில் உள்ள இன ஈர்ப்புச் சுரப்பியைப் பொறுத்தது.

Share with Friends