Easy Tutorial
For Competitive Exams

Science QA சமூகம் சார்ந்த பிரச்சினைகள் கல்வி

இந்தியாவில் கல்வி

  • 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 74.04% (ஆண்க ளின் எழுத்தறிவு விகிதம் 82.12% பெண்களின் எழுத்தறிவு விகிதம் 65.46%
  • இந்தியாவிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளாவும் (93.9%) குறைவான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகாரும் (63.8%) உள்ளன.
  • தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் (80.3%)
  • ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்வியை அடிப்படை உரிமையாக்கும் 21A என்ற உறுப்பு அரசமைப்புச் சட்டத்தின் 86ஆவது திருத்தம் (2002)மூலம் அடிப்படை உரிமைகளில் சேர்க்கப்பட்டது.
  • குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of children to Free and compulsory Education Act of 2009) தனியார் பள்ளிகளில் 25% இடங்க ளை இலவசமாக குழந்தைகளுக்கு வழங்க வழி செய்கிறது.
  • நாட்டிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் 80% அரசு பள்ளிகளாகவோ, அரசின் உதவிப் பெறும் பள்ளிகளாகவோ உள்ளன.
  • தொடக்கக் கல்வியை பொதுவுடமையாக்கும் ( Universalization of Primary Education ) நோக்கத்தோடு அனைவருக்கும் கல்வித் திட்டம் - (Sarva Siksha Abiyan) 2001ல் தொடங்கப்பட்டது.
  • 2017க்குள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி அளிக்கவும் - ( Universalization of Secondary Education ) 2020 க்குள் அதை நிலைநிறுத்தவும் R M S A ( ராஷ்டிரிய மத்யாமிக் சிஷா அபியன்) எனப்படும் அரசு இடைநிலைக் கல்வித் திட்டம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய எழுத்தறிவு திட்டம் ( National Literacy Mission), 2010 ஆம் ஆண்டு முதல் படிக்கும் பாரதம் (Saakshar Bharat) என்ற பெயரில் பெண் எழுத்தறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திட்டமாகச் செயல்பட்டு வருகிறது.
  • உயர்கல்வி வழங்குவதில் சீனா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்திய மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • உயர்கல்வி வழங்குவதில் பல்கலைக்கழக மானியக்குழு முக்கிய பங்கு ஆற்றுகிறது.
  • பல்கலைக்கழக மானியக்குழு 1948ல் அமைக்கப்பட்ட இராதாகிருஷ்ணன் கமிட்டியின் பரிந்துரைப்படி உருவாக்கப்பட்டு, 1956 முதல் சட்டப்பூர்வமான அமைப்பாக செயலாற்றி வருகிறது.
  • தொழில் நுட்பக்கல்வியை அகில இந்திய அளவில் நெறிப்படுத்தவும், நிர்வகிக்கவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் ( All India Council of Technical Education) 1988 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமான அமைப்பாக உருவாக்கப்பட்டது.
  • தேசிய அளவில் ஆசிரியக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் ( National Council of Teachers Education ) 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • 1964 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக்குழு, 1966 இல் அளித்த அறிக்கையின்படி, 1968 ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை (National Education Policy) கொண்டு வரப்பட்டது.
  • தேசிய வருமானத்தில் 3 விழுக்காடு கல்விக்காக செலவிட வேண்டும் என்பதும், 10+2+3 முறையில் கல்வி அமைய வேண்டும் என்பதும் கோத்தாரிக் கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சமாகும்.
  • 1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
  • புதிய கல்விக்கொள்கையின்படி கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுடன், நவோதய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
  • தற்போது இந்தியாவில் 576 ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.
  • நவோதய பள்ளிகள் CBSE பாடத்திட்டத்தில் இயங்கும் இருபாலின உறைவிடப் பள்ளிகளாகும். ( Coeducational Residential Schools)
  • தமிழ்நாடு அரசு கட்டாய இருமொழி கொள்கையைப் பின்பற்றுவதால், "மும்மொழிக் கொள்கை" கொண்ட நவோதய பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் தொடங்கப் பெறவில்லை .
  • மத்திய அரசு பணியாளர்களது குழந்தைகளின் சீரான கல்வி நலன் கருதி கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 1962 இல் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் எழுத்தறிவு
  • 1951 முதல் 2001 வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டு மக்களின் எழுத்தறிவு விழுக்காடு மும்மடங்காக பெருகியுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் 80.35 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெற்றவராகத் திகழ்கின்றனர்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின் படி எழுத்தறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக கன்னியாக்குமரியும் - (87.55 விழுக்காடு) எழுத்தறிவு பெற்றவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாவட்டமாக தர்மபுரியும் (61.39 விழுக்காடு) உள்ளன.
Share with Friends