Easy Tutorial
For Competitive Exams

Science QA சமூகம் சார்ந்த பிரச்சினைகள் சுகாதாரம்

சுகாதாரம்

  • குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல் , பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், தொற்று நோய்களைத் தடுத்தல், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்குதல் போன்றவை அரசாங்கத்தின் முக்கிய நலவாழ்வு குறிக்கோள்களாகும்.
  • குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் பொருட்டு நாடெங்கிலும் ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • தேசிய ஊரக நலவாழ்வுத் திட்டம் எனப்படும் NRHM ( National Rural Health Mission) திட்டப்படி ASHA (Accredited Social Health Activist) தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மூலம் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் பொது மக்களுக்கு விளக்கப்படுகிறது.
  • பிறக்கும் குழந்தைகளுக்கு காச நோய் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு BCG தடுப்பூசி போடுதல், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரண ஜன்னி, ஆகிய மூன்று நோய்களையும் தடுக்க முத்தடுப்பு ஊசி (DPT) போடுதல் போன்ற நடவடிக்கைகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
  • கருவில் வளரும் சிசு மரணத்தை தடுக்கும் பொருட்டு கருவுற்ற தாய்மார்கள் ஊட்டச்சத்து மிக்க உணவைப் பெறுவதற்காக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
  • மலேரியா, டெங்கு போன்ற கொசுவினால் பரவும் நோய்களைத் தடுக்கும் பொருட்டு கொசு மருந்து அடித்தல், சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
Share with Friends