Easy Tutorial
For Competitive Exams

Science QA வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Prepare QA

55795.கூற்று: உலகளவில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா சிறந்து விளங்குகிறது.
காரணம்: இந்திய மக்களிடம் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மனப்பான்மை காணப்படுகிறது.
கூற்றும் காரணமும் சரி, காரணம் சரியான விளக்கம்
கூற்றும் காரணமும் சரி, காரணம் சரியான விளக்கமல்ல
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு
55796.இந்தியாவின் தெற்கே உள்ளது எது?
வங்காள விரிகுடா
அரபிக்கடல்
இந்து மகா சமுத்திரம்
இமயமலைகள்
55797.அரேபியர்களும், துருக்கியர்களும், மங்கோலியர்களும், முகலாயர்களும்
இந்தியாவிற்கு வந்து ஆட்சி செய்த வரலாற்றுக்காலம் என்ன?
முற்கால இந்தியா
பிற்கால இந்தியா
இடைக்கால இந்தியா
நவீனகால இந்தியா
Explanation:

நவீனகால இந்திய வரலாற்றில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுகாரர்கள் முதலியோர் இந்தியாவில் வணிகநோக்கில் குடியேறினர்.
55798.வடகிழக்கு இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி எது?
இந்தி
சமஸ்கிருதம்
அஸ்ஸாமி
ஒடியா
55799.தோடர்கள், இருளர்கள், குறும்பர்கள் போன்ற பழங்குடியின மக்கள் காணப்படும் மாநிலம் எது?
கர்நாடகா
அஸ்ஸாம்
திரிபுரா
தமிழ்நாடு
55800.தவறான இணை எது?
சோட்டா நாகபுரி பீடபூமி - கனிம வளங்கள்
மாளவ பீடபூமி - பருப்பு வகைகள்
தக்காண பீடபூமி - எண்ணெய் வித்துக்கள்
ஏதுமில்லை
Explanation:

• தினை வகைகள்
• தக்காண பீடபூமி - பருப்பு வகைகள் & எண்ணெய்வித்துக்கள்
55801.இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?
15
18
20
22
55802.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. பீடபூமிகள் என்பவை மழை அதிகமாக இருக்கும் உயர் நிலங்களாகும்.
2. இப்பகுதியில், கனிம வளங்களும் சில வேளாண் பொருட்களும் விளைகின்றன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
55803.இந்தியாவில், ஒரு குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பது?
குடும்ப மொத்த வருமானம்
தேசிய வருமானம்
தனிநபர் வருமானம்
இவையனைத்தும்
55804.உலகளவில் இந்தியா எத்தனையாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழைமையான நாடாகும்?
முதலாவது
மூன்றாவது
ஏழாவது
பதினொன்றாவது
55805.இந்திய அரசியலமைப்பில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள 22 மொழிகளில், மிகவும் பழமையான மொழி எது?
சமஸ்கிருதம்
இந்தி
தெலுங்கு
தமிழ்
Explanation:

• அட்டவணையில் தமிழ் 20வத் இடத்தில் உள்ளது
• பிரெஞ்சு மொழி பாண்டிச்சேரியிலும், போர்த்துக்கீசிய மொழி கோவாவிலும் பேசப்படுகின்றன.
55806.உலகளவில் பொருள்களை வாங்கும் திறன் அடிப்படையில் எந்த இடத்தில் இந்தியா உள்ளது?
2வது
3வது
4வது
1வது
Explanation:

• பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் கலப்புப்பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றும் நாடாக இந்தியா திகழ்கிறது. ஏன்?
• இப்பொருளாதாரக் கொள்கை அரசு, மற்றும் தனியார் துறைகளின் பங்கெடுப்பைக் குறிப்பிடுகிறது.
55807.பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1. இந்தியாவின் வட பகுதியில் குளிர் அதிகம் காணப்பட்டாலும், அது மனிதன் வாழவே இயலாத அளவுக்கு உறைபனி நிலையைக் கொண்டிருக்கவில்லை .
2. ஆனால் இந்தியாவின் வேறு சில பகுதிகளில் மக்களின் அன்றாசச் செயல்களை பாதிக்கும் நிலையில் காலநிலை உள்ளது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
55808.மொழி என்பது
உயிர் மூச்சு
இணைப்புக் கருவி
கலாச்சாரக் காவல்
இவையனைத்தும்
Explanation:

மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அறிவியல், கலை, வரலாறு, சமூகநிலை, பழக்க வழக்கங்கள், ஒழுக்க நெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் தீர்மானிக்கிறது.
55809.தவறான இணை எது?
பஞ்சாப்-பருத்தி
கேரளா - வாசனைப் பொருட்கள்
மேற்கு வங்காளம் - நெல்
மத்தியபிரதேசம் - பருப்பு வகைகள்
Explanation:

• அஸ்ஸாம் - தேயிலை
• கர்நாடகா - காபி
• குஜராத், மகாராஷ்டிரா - பருத்தி
55810.பின்வருபவைகளில், புவியியளாலர்கள் இந்தியாவை எந்நாட்டுடன் ஒப்பிடுகின்றனர்?
அமெரிக்கா
நேபாளம்
இங்கிலாந்து
இத்தாலி
55811.தவறான இணை எது?
குஜராத் - குருநானக் ஜெயந்தி
நாகூர் - கந்தூரி விழா
சிக்கல் - கந்தசஷ்டி விழா
வேளாங்கண்ணி - கொடியேற்றம்
55812.பின்வருவனவற்றுள் இந்தியாவினுள் தோன்றாத மதம் எது?
பௌத்தம்
சமணம்
சீக்கிய மதம்
கன்பூசியஸ் மதம்
55813.அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் எம்மததினர்?
c) சீக்கியர்கள்
இஸ்லாமியர்கள்
கிறிஸ்தவர்கள்
பௌத்தர்கள்
Explanation:

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
55814.புராண காலந்தொட்டு நமது நாடு எவ்வாறு அழைக்கப்பட்டு வந்தது?
இந்துஸ்தான்
இந்தியா
பாரத விலாஸ்
பாரத நாடு
Share with Friends