Easy Tutorial
For Competitive Exams

Science QA விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Notes

விஜயநகரப் பேரரசு (கிபி 1336 -1672)

  • தில்லி சுல்தானியம் தெற்கே தங்களின் படையெடுப்பை முடித்து மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றியபோது அவர்களுக்குக் கீழ் இருந்த மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்டனர் அப்படிப்பட்ட காலகட்டங்களில் ஹொய்சாள அரசிடம் சில காலம் பணி புரிந்த பின் 1336 ஆம் ஆண்டு விஜய நகர அரச சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் துங்கபத்திரா நதிக்கரையில் ஹம்பியை தலை நகராகக் கொண்டு விஜய நகரம் தோற்றுவிக்கப்பட்டது.
  • ஹரிஹரர், புக்கர் தங்களை கர்நாடக விஜயநகர அரசர்கள் ஆக பிரகடனப்படுத்திக் கொண்டனர்
  • தங்களின் தந்தையின் பெயரான சங்கமரின் நினைவாகவே சங்கம மரபு அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது
  • சாளுக்கியரின் முத்திரையான பன்றி (வராகம்) தங்கள் அரசு முத்திரையாக கொண்டனர்
  • விஜயநகரப் பேரரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் 300 ஆண்டுகளுக்கு மேல் ஆளப்பட்டது.

நான்கு மரபுகள் :

சங்கம மரபு (1336-1485)-ஹரிஹரர் மற்றும் புக்கர்
சாளுவ மரபு (1485-1505)- சாளுவ நரசிம்மன்
துளுவ மரபு(1505-1570)-வீர நரசிம்மன்
ஆரவீடு மரபு (1570 -1672)- திருமலை
9393.விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
கி.பி.1337
கி.பி. 1336
கி.பி.1338
கி.பி.1335

சங்கம மரபு (கிபி 1336-1485)

  • தில்லி சுல்தான்களின் 30 வருட படையெடுப்பால் நிறைய குழப்பங்கள் நிறைந்த சூழலில் முதலில் சிற்றரசாக விளங்கிய விஜயநகர அரசு பின் இதை பயன்படுத்தி ஹரிஹரரும் அவரின் நான்கு சகோதரர்களும் இணைந்து தங்கள் அரசை விரிவாக்கினார்.
  • முக்கியமாக முதலாம் புக்கரின் ஆட்சியில் தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தை சம்புவராயர் ஆண்டபோது புக்கர் இன் மகன் இளவரசரான குமார கம்பண்ணா தன் தளபதி மாரையா உதவியுடன் 1370 ல் மதுரை சுல்தானை கொன்று சுல்தான் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
  • இந்த மதுரை படையெடுப்பு பற்றிய வெற்றி செய்தி குமார கம்பண்ணா வின் மனைவி கங்காதேவி யால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மதுரா விஜயம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் தேவராயர்

  • இவரின் அரசவைக்கு தான் வெளிநாட்டு பயணிகள் ஆன வெனிஸ் நகரை சேர்ந்த நிக்கலோ கோண்டி ரஷ்ய பயணியான நிக்கிடினும் வருகை புரிந்தனர்
  • இவர் ஸ்ரீ நாதா என்ற தெலுங்கு கவிஞரை ஆதரித்தவர்
  • இவரின் படைப்பு ஹரவிலாசம்
  • இவர் புலவர்களை ஆதரிப்பதற்காக முத்து மண்டபம் கட்டியவர்.

இரண்டாம் தேவராயர்

  • இவர் சங்கம மரபின் முக்கிய அரசராக கருதப்படுகிறார் .
  • இவர் மிகப் பெரும் பகுதிகளை தன் கட்டுக்குள் வைத்திருந்தார்
  • இவரின் அரசவைக்கு அப்துல் ரசாக் என்ற பாரசீக பயணி வருகை புரிந்துள்ளார்
  • இவர் மகா நாடக சுத நிதி என்ற வடமொழி நாடக நூலை படைத்துள்ளார்
  • இவர் கஜபதி அரசர்களை தோற்கடித்தார் (ஒரிசா 1422-1446)
  • இவர் "கஜபேட்டை காரா" என்ற பட்டப்பெயர் கொண்டவர்
  • இவர் இலங்கை அரசிடம் இருந்தும் கப்பம் பெற்றார்.

  • இவருக்குப் பின் நிலையற்ற அரசர்கள் வாரிசுப் போர் திறமையற்ற அரசர்கள் இவர்களால் கஜபதி அரசர்கள் 1460 -65 களில் தங்களது படையெடுப்பால் திருச்சி வரை வந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தினர் அதுமட்டுமல்ல கோயில்களின் பெரும் செல்வங்களையும் கொள்ளையடித்தனர்.

சாளுவ மரபு (கிபி 1485 -1505)

  • 'சாளுவ நரசிம்மர் இவர் ஆந்திர கடல் பகுதிகளை மீட்டார்
  • 1485 இல் அரசாட்சியை கைப்பற்றி தன்னை அரசனாகப் பிரகடனப் படுத்தி ராணுவ அரசை வழிநடத்தினார் இதற்கு இவரின் உண்மையான படைத்தளபதி நரச நாயக்கர் துணையாக நின்றார்.
  • 1491 சாளுவ நரசிம்மர் மரணம் எய்தார். 'இவர் தன் பிள்ளைகளை காப்பாற்ற சொல்லி நரச நாயக்கர் இடம் ஒப்படைத்து இறந்தார். 'இவர் இறப்பிற்குப் பின் இவரது மகன்
  • இம்மிடி நரசிம்மா (1491-1505) அரசாட்சி ஏற்று நடத்தினார் இவர் பெயர் அளவுக்குத்தான் அரசராக இருந்தார் இவரது புடைத்தளபதி நரச நாயக்கர் தான் அரசாட்சியை வழிநடத்தினார்
  • பின் 1505 இல் நரச நாயக்கரின் மகன் வீர நரசிம்மர் ஆட்சி பொறுப்பேற்று துளுவ மரபை தோற்றுவித்தார்.

துளுவ மரபு (கிபி 1505-1570)

  • துளுவ மரபை தோற்றுவித்தவர் வீரநரசிம்மர் 1505 1509
  • இவருக்குப்பின் இவரது தம்பி கிருஷ்ண தேவராயர்.

கிருஷ்ண தேவராயர்(கிபி 1509-1529)

  • ஒட்டுமொத்த விஜயநகரப் பேரரசின் மிக முக்திய அரசராகவும் மகத்தானவரராகவும் சிறந்த அரசாட்சி செய்தவர் ஆகும் கருதப்படுபவர் இவர்
  • இவர் பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார்
    • ஆந்திரபோஜர்
    • அபிநவ போஜர்
    • ஆந்திர பிதாமகன்
  • இவர் பல படையெடுப்புகளை மேற்கொண்டார் .
  • மைசூருக்கு அருகே இருந்த உம்மத்தூர் என்ற குறுநில மன்னனை தோற்கடித்தார் மற்றும் கஜபதி அரசர்களையும் போரில் தோற்கடித்து உதயகிரி கோட்டை போன்று பல கோட்டைகளை கைப்பற்றினார்'
  • இவர் வெற்றிதூணை சிம்மாசலத்தில் நிறுவினார் .
  • இவர் வீரர் மட்டுமல்ல சிறந்த இலக்கியவாதி கட்டடக்கலை யிலும் ஆர்வமுள்ளவர்
  • இவரின் இலக்கியப் படைப்பான ஆமுக்தமால்யதா என்ற தெலுங்கு நூல் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பற்றிய வாழ்க்கை வரலாறு குறிப்பிடுகிறது.
  • மற்றும் ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிண்யம் என்ற வடமொழி நூல்களையும் எழுதியுள்ளார்.
  • இவரது சபையில் தான் அஷ்டதிக்கஜர்கள் இவர் அவையை அலங்கரித்தார்கள்.
    • அல்லசாணி பெத்தண்ணா
    • நந்தி திம்மண்ணா
    • பெட்டு மூர்த்தி
    • துராஜதி
    • புணவீரபத்திரா
    • பனாஜி சூரண்ணா
    • மல்லண்ணா
    • தெனாலிராமன்
  • அதில் முக்கியமானவர்கள் அல்ல சாணி பெத்தண்ணா மற்றும் தெனாலிராமன்
  • இதில் அல்ல சாணி பெத்த நாவின் படைப்பு மனுசரிதம் மற்றும் ஹரிஹராசுதம்
  • தெனாலிராமனின் படைப்பு பாண்டுரங்க மகா மாத்தியம்
  • கிருஷ்ணதேவராயர் முழு நிறைவான அரசர் என்று அறிஞர் தோமிங்கோ பயஸ் குறிப்பிட்டுள்ளார்
  • இவரின் நாயன்காரா முறை என்ற நாயக்கர் முறை .
  • மதுரை பகுதிக்கு இவரின் படைத்தளபதி விசுவநாத நாயக்கர் விஸ்வநாத நாயக்கரின் படைத்தளபதி அரியநாதர் இவர்கள் மூலமாக பாளையங்களாக பிரித்து பாளையக்காரர் முறை
  • இவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன அவை அமரம் என்று அழைக்கப்பட்டது.
  • போர்ச்சுக்கீசிய நட்பு 'போர்ச்சுக்கீசிய தூதுவர்ங்கா ஸே 'பத்கல் கோட்டை கட்ட அனுமதி
  • இவரின் மனைவி பெயர் நாகலாதேவி 'நாகலாபுரம் என்ற நகரத்தையே உருவாக்கியவர்
  • கோவில்களை காக்க மதில் சுவர்கள்
  • ராயபுரம் என்று அழைக்கப்படும் இந்த மதில் சுவர்கள் ஸ்ரீசைலம், சிதம்பரம், காஞ்சி, திருவண்ணாமலை , திருப்பதி, காளகஸ்தி
  • இவரே கட்டியது ஹசராசாமி கோயில் விட்டலசாமி கோயில் ஹம்பியில் கட்டியது.
  • விட்டலசாமி கோயில் தூண்கள் தட்டினால் இசை எழுப்பும் தூண்கள்
  • தூண்கள் இசைத்தூண்கள் அல்லது சரிகம தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன
  • இவரது இறப்பிற்குப் பின் இவரது மகன் இளவயது ஆதலால் தம்பி அச்சுத தேவராயர் ஆட்சி அமர்ந்தார்.
57519.கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
ஆமுக்த மால்யதா
கம்பராமாயணம்
சிவஞான போதம்
மகாபாரதம்.

அச்சுத தேவராயர் (கிபி 1529 -1542)

  • இவரது அரசவைக்கு பாரசீகப் பயணி நுனிஸ் வருகை
  • 1542 இவரது மரணம்
  • சதாசிவராயர் கிருஷ்ணதேவராயன் மகன் அடுத்த ஆட்சி பொறுப்பேற்றார்.

சதாசிவராயர் (கிபி 1529 -1570)

  • இவர்கள் அரசராக இருந்தாலும் உண்மையில் அரசை வழிநடத்தியது கிருஷ்ணதேவராயரின் மகளை திருமணம் செய்த மருமகன் ராமராயர்
  • இவரின் பாமினி அரசுகளை ஒன்றுக்கொன்று மோதவிடும் திறமை போர்ச்சுகீசிய நட்பு தக்காண சுல்தான் களை ஒன்று சேர்த்தது.

தலைக்கோட்டை போர் - கிபி 1565

  • வரலாற்று முக்கிய கூறாக கருதப்படும் இந்தப் போர் ரக்க்ஷாதங்கடி போர்
  • தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன் அச்சகதப்ப நாயக்கர்
  • இதில் ராமராயர் கொல்லப்பட்டு மன்னர் சதாசிவராயர் பெனுகொண்டா என்ற இடத்திற்கு தப்பி ஓடினார்
  • பின் விஜயநகர பேரரசு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
9565.தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
சேவப்ப நாயக்கர்
அச்சகதப்ப நாயக்கர்
இரகுநாதநாயக்கர்
சரபோஜி மன்னர்

ஆரவீடு மரபு( கிபி 1570-1670)

  • தோற்றுவித்தவர் திருமலை தேவராயர், ராமராயர் இன் சகோதரர்
  • பின் வந்த அரசர்கள் இவர்கள் தலைநகர் இல்லாது நாடோடிகளாக இருந்து அரசு நடத்தினர்
  • பெரும்பேடு எச்சம நாயக்கர் (விஜயநகர விசுவாசி )இவர் ஒரு பிரிவு
  • வேலூர் நாயக்கர் இவர் ஒரு பிரிவு
  • வேலூர் நாயக்கரை மதுரை தஞ்சை செஞ்சி நாயக்கர்கள் ஆதரித்தனர்
  • இவர்களுக்குள் 1601 இல் உத்திரமேரூர் போர்
  • பின் முழுவதுமாக விஜயநகரப் பேரரசு முடிவுக்கு வந்தது.

ஆதாரம்

  • இபன் பதூதா மொராக்கோ (கிபி 1333-1345 )
  • அப்துல் ரசாக் -பாரசீக பயணி(கிபி 1343 -1345)
  • நிக்கலோ டி கோண்டி -வெனிஸ்( இத்தாலி)
  • நிகிடின் ரஷ்யா (கிபி 1470 -1474)
  • டோமிங்கோ பயஸ் போர்ச்சுகல்(கிபி 1520 -1535)
  • நூனிஸ் இத்தாலி (கிபி 1520-1535)
  • நாணயம் - வராகன், பகோடா
  • கண்டபெருண்ட பறவை சின்னம் பொறிக்கப்பட்ட நாணயம்.

நிர்வாகிகள்

  • மகா பிரதானி- முதலமைச்சர்
  • தளவாய் -தளபதி
  • வாசல்- அரண்மனைக் காவலர்
  • ராயசம்- கணக்கர் /செயலர்
  • அடைப்பம்- தனி உதவியாளர்
  • காரிய கர்த்தா - செயல் முகவர்

விஜயநகர பேரரசு

  • இராஜ்யா/மாகாணம் /மாநிலம் சீமை
  • ஸ்தலம்
  • கம்பனா

நாயக்கர் முறை

  • அரசிற்கு வரி கட்ட வேண்டிய நாள் ராம நவமி இதை சொல்லும் தெலுங்கு நூல் ராய வாசகமு
  • தமிழ் -நாய கட்டணம்
  • கன்னடம் -நாயக தானம்
  • தெலுங்கு - நாயன் கரமு

  • சாதி முறை அதிகம்
  • 'பிராமணர், ஷத்திரியர், வைசியர் , சூத்திரர் என்ற நான்கு ஜாதி பிரிவுகள் இருந்ததாக அல்லசாணி பெத்தண்ணா தனது மனு சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்
  • அடிமை முறை
  • தேவதாசி முறை வழக்கத்தில் இருந்ததாக பயஸ் குறிப்பிட்டுள்ளார்
  • சதி வழக்கம் பெருமையாகக் கருதப்பட்டது
  • வரி அதிகம்.

பாமினி அரசு

முகமது பாமன்ஷா (1347-1358 )

  • பாமினி பேரரசை நிறுவியவர் அலாவுதீன் பாமன்ஷா (ஹசன் கங்கு பாமினி )
  • இவர் பாமன் சா என்ற பட்டத்தை சூடி பாமினி அரசை உருவாக்கியவர்
  • பாமினி பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1347
  • தலை நகர் குல்பர்கா
  • தேவ கிரியைச் சேர்ந்த துருக்கிய உயிர் அலுவலர்
  • பாரசீக மரபு
  • சமூக நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானிய ஆட்சி முறையை பின்பற்றி தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார்.

4 தாராபுஃகள்/ மாநிலங்கள்

  • குல்பர்கா
  • தௌலதாபாத்
  • பீடார்
  • பிரார்

4 மாகாண ஆளுநர்கள்

  • வரி வசூலுக்கு முழுப்பொறுப்பு இவர்கள்

  • வாராங்கல் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி கொண்ட வீடு வருடம் தோறும் கப்பம் பெற பல போர்கள்
  • 11 ஆண்டுகள் பாபன் ஷா சிறப்பான ஆட்சி தான் பெற்ற வெற்றிகளை நினைவுகூற தன்னைத்தானே இரண்டாம் அலெக்சாண்டர் என்று கூறி நாணயங்களில் பொறித்துக் கொண்டவர்.

முதலாம் முகமது ஷா 1358 1375

  • 1363 காகத்திய போர் வாரங்கல் தோற்கடித்து

ரத்தின சிம்மாசனம் (ஆகாய நீல கல் பச்சை நீலக்கல்)

  • ப்ரௌதௌசி - ஷாநாமா என்ற நூலில் இந்த சிம்மாசனம் பற்றி குறிப்பிட்டுள்ளார்

கோல்கொண்டா கோட்டை

  • கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் , மலை உச்சி மீது 120 மீட்டர் உயரத்தில் ஒலி அம்ச அடிப்படையில் கட்டிடக் கலையுடன் கட்டப்பட்ட கோட்டை
  • கோட்டையின் கீழ் நுழைவு வாயிலில் இருந்து கரவொலி எழுப்பினால் மலை உச்சியில் உள்ள கோட்டையில் கேட்கும்
  • கோட்டையை கட்டியவர் வாரங்கலை தலைநகராகக் கொண்ட காகதிய அரசர் ராஜா கிருஷ்ணதேவ் .
  • (1495 -1496 )கோட்டை குலிகுதப் ஷாவிற்கு ஒரு ஜாகீராக நிலமாக தரப்பட்டது இவர் கோட்டையை கருங்கல் கொண்டு புனர் அமைத்தவர் .
  • இது பின் பாமினி அரசின் வசமாகி அதன்பின் குதுப் ஷாஹி வம்ச அரசின் தலைநகரானது
  • குதுப் ஷாஹி வம்ச ஐந்தாவது மன்னர் முகம்மது குலி குதுப் ஷா
  • கோட்டையின் மிக உயர்ந்த பகுதியில் பெயர் பாலாஹிசார் இதில் ரகசிய சுரங்கப்பாதை
  • கோட்டை நுழைவாயில் பதேதர்வாசா அல்லது வெற்றி நுழைவாயில்
  • கோட்டை இருந்த பகுதி முகமது நகர் என்று அழைக்கப்பட்டது
  • முகமது குதுப் ஷா கல்லறை இங்கு உள்ளது
  • 1687 இல் அவுரங்கசீப் எட்டு மாதம் முற்றுகையிட்டு கடைசியில்காப்பாளர் இன் துரோகம் காரணமாக அதன் ஆட்சியாளர்களிடமிருந்து கோட்டையை கைப்பற்றினார்
  • இந்த கோட்டையில் பீரங்கி, பாலம் , அரண்மனை, அரை, மசூதி, தொழுவம் உட்பட நான்கு சிறிய கோட்டை இதனுள் உள்ளது
  • 17ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டை வைர சந்தையாக திகழ்ந்தது
  • கோகினூர் வைரம் உட்பட சிறந்த வைரங்களை உலகிற்கு வழங்கியது இந்த கோட்டை
  • குல்பர்கா வில் 2 மசூதி கட்டினார் 'அதில் ஒன்று ஜும்மா மசூதி , 1367 ஜும்மா மசூதி கட்டிமுடிக்கப்பட்டது.

அமைச்சர்கள்

  • வகில் உஸ் சுல்தானா- படைத்தலைவர்/ அரசுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்
  • வசீர் குல்-மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வை இடுபவர்
  • அமீர இ ஜூம்லா -நிதி அமைச்சர்
  • வசீர் இ அஷ்ரப் - வெளியுறவு / அரசு விவகாரத்துறை அமைச்சர் /அரசு விழாக்களை முன்னின்று நடத்துபவர்.
  • நசீர் -நிதித்துறை இணை அமைச்சர்
  • பேஷ்வா -அரசபடைகளின் பொறுப்பாளர்
  • கொத்வால் -காவல்துறை தலைவர் /தலைநகரின் நீதிபதி
  • சதர் இ ஜகான் -தலைமை நீதிபதி/ சமய அறநிலைத் துறை அமைச்சர்.
  • இவர் காலத்தில் வழிப்பறி கொள்ளையர் களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
  • பிஜப்பூர் கோல்கும்பாஸ் கட்டிடம் முணுமுணுக்கும் அரங்கம் என்று அழைக்கப்படுகிறது
9467.முணுமுணுக்கும் அரங்கம்- என்று அழைக்கப்படுவது எது?
கோல்கொண்டா
கோல்கும்பாஸ்
குல்பர்கா
ஜூம்மா மசூதி


இரண்டாம் முகமது ஷா (1378 -1397)

பெபெரோஸ் ஷா பாமினி

அகமதுவாலிசா (1422- 1435)

  • 1429 இல் மீண்டும் தலைநகரை குல்பர்கா விலிருந்து பிடாருக்கு மாற்றியவர்

மூன்றாம் முகமது ஷா(1463 -1482)

  • பாமினி அரசு வம்சத்தின் மிகமுக்கிய மன்னர்
  • இவரைவிட இவரின் படைத்தளபதி முகமது கவான் மிகவும் முக்கியமானவராக கருதப் படுகிறார்

முகமது கவான்

  • முகம்மது கவான் பாரசீக வணிகர் ஆக இருந்து பின்னர் தனது தன்னிச்சையான செயல்களினாலும் முயற்சிகளினாலும் படைத் தளபதியாகி மூன்றாம் முகமது ஷாவின் நம்பிக்கைக்குரிய முதலமைச்சராகவும் சமய குருவாக திகழ்ந்தவர்
  • இவர் பாரசீக மொழியிலும் கணிதத்திலும் புலமை பெற்றவர்
  • அதுமட்டுமல்ல இவர் கவிஞராகவும் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தவர்.
  • பீகாரில் ஒரு மதராசா வையும் நிறுவிய இவர் அதில் ஒரு பெரிய நூலகத்தையும் திறந்தார்
  • அந்த நூலகத்தில் 3000 கையெழுத்து உள்ள நூல்கள் இருந்தன
  • இவர் வளர்ச்சியில் பொறாமை கொண்ட உயர்குடிகள் இரண்டு குடிகளாக பெறுகின்றனர் அதில்
  • தக்காண முஸ்லிம்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த முஸ்லிம்கள்
  • இவர்கள் மன்னருக்கு எதிராக முகமது கவான் செயல்படுவதாக ஒரு போலி கடிதம் தயார் செய்து அதை மன்னர் முகமது ஷா வின் கையில் கிடைக்கும்படி செய்தனர்
  • இதை நம்பிய அரசரும் 1481 முகமது கவானை கொலை செய்து விடுகிறார்
  • இதைத்தொடர்ந்து 1482 இல் மூன்றாம் முகமது ஷாவும் இறந்துவிடுகிறார்

  • பின் 1526 இல் பாமினி 5 தக்காண சுல்தானியம் ஆக பிரிகிறது
  • பீஜப்பூர் -அடில் ஷாகி மரபு
  • அகமதுநகர் நிஜாம் ஷாகி மரபு
  • கோல்கொண்டா- குதுப் ஷாஹி மரபு
  • பிரார்- இமாம் ஷாகி மரபு
  • பீடார் பரீத் ஷாகி மரபு

  • இந்த ஐந்து சுல்தானியர்கள் உடன் விஜயநகரப் பேரரசு 1565 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைக்கோட்டைப் போர் நடக்கிறது.
  • போருக்குப்பின் பின்னாளில் தக்காணிய சுல்தானியம் முகலாய அரசுடன் இணைகிறது.
Share with Friends