Easy Tutorial
For Competitive Exams

Science QA இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள் Notes

இயற்பியல் அளவுகள், அளவீடுகள் மற்றும் அலகுகள்

இயற்பியல் அளவுகள்
  • இயற்பியல் விதிகளை விவரிக்க பயன்படும் அளவுகள் இயற்பியல் அளவுகள் எனப்படும்.
  • தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது அளவீடு (Measurement ) எனப்படும்.
  • தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவு அலகு (Unit) எனப்படும்.

இயற்பியல் அளவுகள் வகைகள்

இயற்பியல் அளவுகள் இருவகைப்படும்

  • அடிப்படை அளவுகள்
  • வழி அளவுகள்

அடிப்படை அளவுகள்
  • மற்ற இயற்பியல் அளவுகளை சாராமல் முழுமையாக வரையறுக்கப்படும் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.
  • எ.கா. : நீளம், நிறை ,காலம் ,etc.

வழி அளவுகள்
  • அடிப்படை அளவுகளை பயன்படுத்தி வரையறுக்கப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா. : வேகம், பருமன்,முடுக்கம் etc.

அலகு

கொடுக்கப்பட்ட இயற்பியல் அளவை ஒப்பிட பயன்படும் நிறுவப்பட்ட படித்தர அளவு அலகு எனப்படும்.

அலகு இருவகைப்படும்.

  • அடிப்படை அலகு
  • வழி அலகு

அடிப்படை அலகு

அடிப்படை அளவுகளை அளக்கப்பயன்படும் அலகு அடிப்படை அலகு எனப்படும். எ.கா. : மீட்டர், கி.கி.


வழி அலகு

வழி அளவுகளை அளக்கப்பயன்படும் அலகு வழி அலகு எனப்படும். எ.கா. மீ/வி, மீ$^{3}$, மீ/மீ$^{2}$.


பொதுவாக பயன்படுத்தப்படும் அலகு முறைகள்
  • FPS முறை என்பது Foot, Pound, Second அலகுமுறை ஆகும்.
  • CGS முறை என்பது Centimetre, Gram, Second அலகுமுறை ஆகும்.
  • MKS முறை என்பது Metre, Kilogram, Second அலகுமுறை ஆகும்.

அலகு முறைநீளம்நிறைகாலம்
CGS முறைசென்டி மீட்டர்கிராம்செகண்டு
MKS முறைமீட்டர்கிலோ கிராம்செகண்டு
FPS முறைஅடிபவுண்டுசெகண்டு

SI அலகு முறை
  • எந்த ஓர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும். இது திட்ட அளவீடு (Standard Measurement ) எனப்படும்.
  • மீட்டர், கிலோகிராம்,விநாடி என்பவை திட்ட அலகுகள் ( Standard Units ) எனப்படும்.
  • 1960 - ல் 11-வது அனைத்துலக எடைகள் மற்றும் அளவுகள் சங்கத்தால், மாற்றங்களுடன் கூடிய MKS முறை, அனைத்து நாடுகளிலும் இன்று பின்பற்றும் SI அலகு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது “System International d'Units” என்பதன் சுருக்கமாகும்.
  • SI அலகு முறையில் 7 அடிப்படை அளவுகளும் இரண்டு துணை அளவுகளும் உள்ளது.

SI அலகு முறையில் அடிப்படை அளவுகள்
அடிப்படை அளவுகள்அலகுகுறியீடுபரிமாண வாய்ப்பாடு
நீளம்மீட்டர்mL
நிறைகிலோகிராம்KgM
காலம்வினாடிsT
வெப்பநிலைகெல்வின்Kq(or)K
மின்னோட்டம்ஆம்பியர்AI (or) A
ஒளிச்செறிவுகேண்டிலாCdCd
பருப்பொருளின் அளவுமோல்molmol

SI அலகு முறையில் துணை அளவுகள்
துணை அளவுகள்அலகுகுறியீடு
தளக்கோணம்ரேடியன்rad
திண்மக்கோணம்ஸ்டிரேடியன்sr

SI அலகு முறையில் வழி அளவுகள்


Previous Year Questions:
9319.பொருத்துக
(a) விசை 1. வாட்
(b) உந்தம் 2.ஜூல்
(c) திறன் 3.கி .கி .மீ .வி $^{-1}$
(d) ஆற்றல் 4. நியூட்டன்
(а) (b) (c)(d)
4 1 2 3
3 2 1 4
3 1 2 4
4 3 1 2
9423.15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி$^{-1}$ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம்
என்ன?
சுழி
201.5 கிகி மீவி$^{-1}$
215 கிகி மீவி$^{-1}$
200 கிகி மீவி$^{-1}$
24744.ஒரு குதிரைத்திறன் என்பது
1000 வாட்
746 வோல்ட்
1000 வோல்ட்
746 வாட்
57236.கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்
குறையும்
அதிகமாகும்
சுழியாகும்
மாறாமலிருக்கும்
57238.கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்?
(1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும்.
(2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும்.
(3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்
(2) மற்றும் (3)
(1) மற்றும் (3)
(3) மட்டும்
(1) மட்டும்
57543.கதிர்வீச்சின் அலகு
கேன்டிலா
டையாப்டர்
கெல்வின்
ராண்ட்ஜென்
இயற்பியல் அளவுகள் அலகுகள் மற்றும் பரிமாணங்கள்

Share with Friends