Easy Tutorial
For Competitive Exams

Science QA தனிமம் மற்றும் சேர்மம்(Elements and Compounds) Notes - தனிமம்

தனிமம் மற்றும் சேர்மம் - I

தனிமம்

* தனிமம் என்பது ஒரே விதமான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டதாகும்.

* அனைத்துப் பொருள்களும் தனிமங்களால் உருவாக்கப்பட்டவையே இதுவரையில் 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

* இவற்றில் 92 தனிமங்கள் இயற்கையிலும், 26 தனிமங்கள் ஆய்வகத்திலும், செயற்கை முறைகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

* இவற்றில் 112வது தனிமம் - கோப்ரான்சியம் மட்டுமே IUPAC (International Union of pure and Applied Chemistry) ஆல் அதிகார பூர்வமாக குறியீடு வெளியிடப்பட்டுள்ளன.

* பூமியில் ஆக்ஸிஜன் 46.6%, சிலிக்கான் - 27.7%, அலுமினியம் - 8.1%, இரும்பு - 5%, கால்சியம் - 3.6%, சோடியம் 2.8%, பொட்டாசியம் 2.6%, மெக்னீசியம் - 2.1%, இதர 2.5%

* மனித உடல் ஏறத்தாழ 99% - 6 தனிமங்களாலும் (ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கால்சியம், பாஸ்பரஸ்) 1% மற்ற தனிமங்களாலும் ஆனது.

* உயிருள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ள தனிமங்களின் இயைபு. ஆக்ஸிஜன் 65%, கார்பன் 18%, ஹைட்ரஜன் 10%, நைட்ரஜன் 3%, கால்சியம் 2% இவற்றுடன் மற்ற தனிமங்களும் சேர்ந்து காணப்படும்.

* அண்டம், விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.

தனிமத்தின் பண்புகள் :

*தூய்மையான, ஒருபடித்தான பொருள்.
*உருகுதல் & கொதிநிலைபண்பு பெற்றுள்ளது.
*வேதிவினை மூலம் எளிய பொருளாக சிதைக்க முடியாது.
*ஒரு தனிமம் ஒரேவகை அணுக்களால் ஆனது.
*வெவ்வேறு தனிமங்கள் வெவ்வேறு வகை அணுக்களால் ஆனது.
*தனிமத்திலுள்ள அணுக்களினால் பண்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
*தனிமத்தின் மிகச்சிறியதுகள் - அணு (தனிமத்தின் அடிப்படை அலகு - அணு).
*ஒருதனிமம் மற்றொரு தனிமத்தோடு வேதிவினையில் ஈடுபட்டு சேர்மத்தை உருவாக்கும்.

எடுத்துக்காட்டு :
*H2 + O –> H2O
*H + Cl -> HCl


*இரும்பு அதிகம் உள்ள தாது - ஹேமடைட்
*அடர்த்தி மிகுந்த தனிமம் - ஆஸ்மியம்
*லேசான தனிமம் - ஹைட்ரஜன்
*கனமான தனிமம் - வைரம்

தனிமங்களின் வகைப்பாடு :

இயற்பியல் நிலை அடிப்படையில் வகைப்பாடு :
*தனிமங்களை அவற்றின் இயற்பியல் நிலையை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. திண்மம் :
*குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதும், குறிப்பிட்ட வடிவத்தை உடையதும் திண்மமாகும்.
*(எ.கா): கார்பன், காப்பர்

2. நீர்மம் :
*குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதும் ஆனால் குறிப்பிட்ட வடிவம் அற்றதும் திரவமாகும்.
*(எ.கா): சீசியம், காலியம் (30°C இல்) மெர்க்குரி, புரொமின் (37°C)

3. வாயு :
*குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளாததும், குறிப்பிட்ட வடிவமற்றதும் வாயு ஆகும்.
*(எ.கா): H2, O2

4. பிளாஸ்மா :
*அதிக வெப்பப்படுத்தப்பட்ட வாயுநிலை

5. கண்டன்ஸேட் (Condensate) :
*அதிக குளிரூட்டப்பட்ட திடப்பொருள் - போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்ஸேட்.


பண்புகளின் அடிப்படையில் வகைப்பாடு :

உலோகங்கள் (Metals) :
*92 தனிமங்களில் 72 தனிமங்கள் உலோகங்களாகும்.
*உலோகங்கள் கடினமானவை, பளபளப்பானவை. தகடாக அடிக்கவும், கம்பியாக நீட்டவும் இயலும்.
*மேலும் மின்சாரத்தை நன்கு கடத்தும் மற்றும் ஒலி எழுப்பக்கூடியவை .
*(எ.கா) : காப்பர், இரும்பு, தங்கம்

*ரிட்பெர்க் மாறிலியின் அலகு - m-1

அடர்த்தி மிகுந்த உலோகங்கள் :

அலோகங்கள் (Non- Metals) :
*அலோகங்கள் மென்மையான பளபளப்பு தன்மையற்ற, தகடாக அடிக்க முடியாத, கம்பியாக நீட்ட இயலாத மற்றும் மின்சாரத்தைக் கடத்தாத, ஒலியை எழுப்பாத பண்புகளை பெற்றவை.

*(எ.கா) : கார்பன் , ஆக்ஸிஜன், குளோரின்

உலோகப் போலிகள் :
*இவை உலோகப் பண்புகளையும், அலோகப் பண்புகளையும் பெற்றுள்ளன.
*(எ.கா) : ஆர்செனிக், ஆண்டிமனி, சிலிக்கான், போரான், ஜெர்மானியம்.

டால்டனின் அணுக் கோட்பாடு :
*ஜான் டால்டன் கோட்பாட்டின் படி அனைத்து தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் எனப்படும் சிறு துகள்களால் ஆனவை.

*மேலும் ஒரு தனிமத்தில் உள்ள அணுக்கள் யாவும் ஒரே மாதிரியானவை

Share with Friends