Easy Tutorial
For Competitive Exams

Science QA தனிமம் மற்றும் சேர்மம்(Elements and Compounds) Notes - சேர்மம்

தனிமம் மற்றும் சேர்மம் - II

சேர்மம்

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிகத்தில் இணைந்து உருவான பொருளே சேர்மம் எனப்படும்.


வகைப்பாடு :

கனிமச் சேர்மம் :
*பாறை, தாதுக்கள் போன்ற உயிரற்ற மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்களாகும்.
*எ.கா: சமையல் சோடா, சுண்ணாம்புக்கட்டி (Chalk), பளிங்கு.

கரிமச் சேர்மங்கள் :
*தாவரங்கள், விலங்குகள் போன்ற மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் ஆகும்.
*எ.கா : சர்க்கரை (Sucrose), புரதம் (Protein), மெழுகு (Wax), எண்ணெய் (Oil).


சேர்மத்தின் சிறப்பியல்புகள் :

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து சேர்மம் உருவாகும்

*எ.கா : நீரில் ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் 1: 8 என்ற நிறை விகிதத்தில் உள்ளன .


* ஒரு சேர்மத்தில் உள்ள பகுதிப் பொருட்களை இயற்பியல் முறைப்படி பிரிக்க இயலாது.
*வேதியலைப் பொருத்து தனிமங்களாகப் பிரிக்கலாம்.
* ஒரு சேர்மம் உருவாகும் போது வெப்பம் வெளியிடுதலோ அல்லது உறிஞ்சுதலோ நிகழ்கின்றது.
* ஒரு சேர்மம் குறிப்பிட்ட உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கிறது .
* சேர்மத்தின் பண்புகள் அதன் பகுதிப் பொருள்களின் பண்புகளிலிருந்து மாறுபடுகின்றன .
* சேர்மம் ஒரு படித்தானது.


சேர்மங்களின் பயன்கள் :



அணுக்கட்டு எண் :

*ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அதுவே அத்தனிமனத்தில் அணுக்கட்டு எண் ஆகும்.

அணுக்கட்டு எண் ஒன்று :
*சில்வர், பொட்டாசியம், கார்பன் மற்றும் மந்த வாயுக்கள்

அணுக்கட்டு எண் இரண்டு :
*ஹைட்ரஜன், புரோமின், குளோரின், ஆக்ஸிஜன்

பல அணுக்கட்டு எண் :
*பாஸ்பரஸ் (P4), கந்தகம் (S8)


தனிம வரிசை வகைபாடு (Periodic Table) :

மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணை :

*1869 ம் ஆண்டு இரஷ்ய நாட்டு அறிஞர் மெண்டலீவ் முதல் தனிம வரிசை அட்டவணையைத் தயாரித்தார்.
*மெண்டலீவ் அணுநிறையை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தினார்.


நவீன ஆவர்த்தன் விதி (H.J. மோஸ்லே) :

*ஹென்றிஜின் ஜெப்ரிஸ் மோஸ்லே என்பவர் 'x' கதிர்களைப் பயன்படுத்தி தனிமங்களின் அதிர்வெண்ணை அளந்தறிந்தார்.
*பின் அணு எண் அடிப்படையில் தனிமங்களை வகைப்படுத்தினார்.
*அவ்வெண் வர்க்கமூலம், அணு எண் கொண்டு படம் வரைந்தார். வரைபடம் நேராக அமைந்தது.


டொபரினரின் மும்மை விதி :

*ஒத்த பண்புகளைப் பெற்ற தனிமங்களை மும்மூன்று தனிமங்களாக தொகுக்கலாம். தனிமங்களின் ஒரு மும்மையில் உள்ள மையத் தனிமத்தின் அணுநிறை மற்ற 2 தனிமங்களின் அணுநிறைகளின் சராசரியாக அமையும்.
*எ.கா: லித்தியம் 7, சோடியம் 23, பொட்டாசியம் 39


எண்ம விதி :

*நியூலாணட் என்பவர் தனிமங்களை அவற்றின் அணுநிறை அடிப்படையில் ஏறுவரிசையில் அமைத்த போது ஒரு தனிமத்தின் பண்புகளும் அதிலிருந்து எட்டாவது அமைந்த தனிமத்தின் பண்புகளும் ஒத்து இருக்கும்.
*இசைக் குறியீடு சார்ந்து விதி கண்டவர்.


குறைகள் :

*கால்சியத்திற்குப் பின்வரும் தனிமங்களுக்கு இவ்விதி பொருந்தவில்லை.
*பின் கண்டுபிடிக்கப்பட்ட மந்த வாயுக்களுக்கும் இவ்விதம் பொருந்தவில்லை.


தனிம வரிசை அட்டவணை பற்றிய கருத்துக்கள் :

*ஒர் தொகுதியில் கீழ் நோக்கி சென்றால் அணுக்களின் உருவ அளவு அதிகரிக்கும்
*தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் உருவ அளவு குறையும்.

*தொடரில் இடமிருந்து வலமாக செல்லும் போது அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது.
*தொகுதியில் மேலிருந்து கீழ் நோக்கி செல்லும் போது அயனி ஆக்கும் ஆற்றல் குறைகிறது.

*ஒரு தொடரில் இடமிருந்து வலம் நோக்கிச் செல்லும் போது எலக்டரான் நாட்டம் அதிகரிக்கிறது.
*ஒரு தொகுதியில் மேலிருந்து கீழ்நோக்கி செல்லும் போது எலக்ட்ரான் நாட்டம் குறைகிறது.


திட்ட விகித விதி (மாறாத விகித விதி ) :

*ப்ரௌஸ்ட் என்பவர் வெளியிட்டார். இவ்விதிபடி ஒரு சேர்மம் எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் உள்ள தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட மாறா எடை விகிதத்தில் தான் இருக்கும்.

*IUPAC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள இறுதி தனிமம் கோப்பெரன்சியம் (அனுஎண் 112) ஆகும்.

கலவைகள் :

*இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் எந்த விகிதத்தில் கலந்து காணப்படும்.

வகைகள் :

ஒரு படித்தான கலவை :
*ஒரே ஒரு நிலைமையில் உள்ளது (நிலைமை என்பது தெளிவான எல்லைகளுக்கு உட்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிப்பட்டுத் தெரியும் பகுதி ஆகும்) .
*(எ.கா): உலோகக் கலவை, காற்று

பல படித்தான கலவை :
*2 அல்லது அதற்கு மேற்பட்ட நிலைமைகள் கொண்டது.
*(எ.கா): நீருடன் எண்ணெய் கலந்த கலவை.


சேர்மங்களுக்கும் கலவைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் :

சேர்மம்கலவை
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் வேதிமுறையில் சேர்ந்து உருவாகுபவைஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் கலக்கப்பட்டு உருவாகுபவை
2. உருகுநிலை, கொதிநிலை, அடர்த்தி போன்ற பண்புகளை பெற்றிருக்கும்உருகுநிலை, கொதிநிலை, அடர்த்தி போன்ற பண்புகளை பெற்றிருக்காது.
3.சேர்மங்களின் தன்மை அதில் காணும் தனிமங்களின் தன்மையிலிருந்து மாறுபட்டவை.கலவை அதன் பகுதிப் பொருள்களின் தன்மையைப் பெற்றிருக்கும்.
4.சேர்மங்கள் ஒரு படித்தானவை.கலவைகள் பொதுவாக பல படித்தானவை.ஒரு சில கலவைகள் ஒரு படித்தானவை.
5.சேர்மத்தில் உள்ள பகுதி பொருட்களை இயற்பியல் முறைப்படி பிரிக்க முடியாது.எளிமையான இயற்பியல் முறைகளைப் பயன்படுத்தி கலவையில் உள்ள பகுதி பொருட்களை பிரிக்க இயலும்.

அணு :

*அணு என்பதற்கு கிரேக்கப் பொருள் "உடைக்க முடியாதவை" (அ) பிரிக்க முடியாதவை.

அணுவின் அடிப்படைத்துகள்கள் :

புரோட்டான்கள் :
*கண்டறிந்தவர் கோல்டுஸ்டீன்
*இவை நேர்மின்சுமை உடைய துகள்கள்
*இவை ஒரு அணுவின் உட்கருவினுள் உள்ளன.

எலக்ட்ரான்கள் :
*கண்டறிந்தவர் - J.J. தாம்சன்
*இவை எதிர்சுமை உடையதுகள்கள்
*இத்துகள்கள் உட்கருவை வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

*ஒலிப்பதிவு செய்யும் முறையை முதன் முதலில் கண்டுபடித்தவர் - எடிசன்

நியூட்ரான்கள் :
*கண்டறிந்தவர் - சாட்விக்
*இவை நடுநிலையான, மின் சுமையற்ற துகள்கள்.
*இத்துகள்கள் உட்கருவினுள் உள்ளன.

அணுஎண் :

*உட்கருவினுள் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை (அல்லது)
*உட்கருவைச் சுற்றிவருகின்ற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என அணு எண்ணை வரையறுக்கலாம்.

நிறை எண் :

*ஓர் அணுவின் உட்கருவில் உள்ளபுரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின்
*எண்ணிக்கைகளின் கூடுதலே, அவ்விணுவின் நிறை எண் ஆகும்.

* நிறை எண் (A) = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை
* N = A - Z
* நியூட்ரான் எண்ணிக்கை = (நிறை எண் - அணு எண்)

பருப்பொருள் :

*அறிவியல் உலகில் நிறை மற்றும் குறிப்பிட்ட இடத்தை அமைத்துக் கொள்ளும் தன்மை பருப்பொருளாகும்.

பருப்பொருளின் வகைகள் :



*விழாக்களில் பலூனில் நிரப்பப்படும் வாயு - ஹீலியம்
*ஒளிரும் விளக்குகளில் நிரப்பப்படும் வாயு - கிரிப்பான்
*விளம்பரங்களில் பயன்படும் குழல் விளக்குகளில் - நியான்
*டங்ஸ்டன் விளக்குகளில் - ஆர்கான்
*அதிக ஒளிரக் கூடிய விளக்குகளில் - செனான்
*பற்களை வலிமையாக வைத்திருக்க பற்பசையில் - ஃபுளுரின்
*நீச்சல் குளத்தை சுத்தம் செய்ய - குளோரின்
*கதிரியக்க தன்மையுள்ள வாயு - ஆஸ்டாடின்
*புவியின் வளிமண்டலத்தில் 21% உள்ள வாயு - ஆக்ஸிஜன்
Share with Friends