Easy Tutorial
For Competitive Exams

Science QA வேளாண் முறைகள் (Agricultural pattern) Notes

வேளாண் முறைகள் (Agricultural pattern)

வேளாண்மை :

* வேளாண்மை என்பது குறிப்பிடப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் மற்றும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர ப ொருட்களை வழங்குவதாகும். இந்தியா தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வரும் நாடென்றாலும் வேளாண்மை மூலம் 50 சதவீதத்திற்கும் மேலான மக்களுக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் மொத்த வருமானத்தில் 25 சதவீதத்தையும் நாட்டிற்கு அளிக்கின்றது.

வேளாண்மையை நிர்ணயிக்கும் காரணிகள் :
* இந்திய வேளாண்மையை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவற்றில் சில முக்கியக் காரணிகளாவன.
1) இயற்கைக் காரணிகள் : நிலத்தோற்றம், காலநிலை மற்றும் மண்
2) அமைப்பு சார் காரணிகள் : வேளாண் நிலத்தின் அளவு, நில வாரம் முறை மற்றும் நிலச்சீர்திருத்தங்கள்
3) உட்கட்டமைப்பு காரணிகள் : நீர்ப்பாசனம், மின்சாரம், போக்குவரத்து, வரவு, சந்தை, காப்பீடு மற்றும் சேமிப்பு வசதிகள்,
4) தொழில்நுட்பக் காரணிகள் : வீரிய விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இயந்திரங்கள் .

வேளாண்மையின் வகைகள் :
* பல்வேறு இயற்கைச் சூழல் மற்றும் கலாச்சாரம் காரணமாக இந்தியாவில் பல்வேறு வேளாண்முறைகள் மற்றும் பயிர்சாகுபடி முறைகள் பின்பற்றப்படுகின்றன.
அ)  தன்னிறைவு வேளாண்மை :
* இந்தியாவில் கணிசமான அளவு விவசாயிகள் தன்னிறைவு வேளாண்மை முறையை பின்பற்றுகிறார்கள். இம்முறையில் விவசாய நிலவுடைமை சிறிய அளவிலானது. விவசாயிகள் ஏழ்மையாக இருப்பதால், இயந்திரங்கள் மற்றும் அதிக செலவு கொண்ட நவீன யுத்திகளை பயன்படுத்த முடிவதில்லை. பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சாகுபடி செய்யப்பட்டு நிலத்தின் மொத்த விளைச்சலின் பெரும் பகுதியை குடும்ப உறுப்பினர்களால் நுகரப்பட்டு மீதம் உள்ளவை அருகில் உள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி ,சணல் மற்றும் புகையிலை ஆகியவை சிறிய அளவில் பயிரிடப்படுகின்றன. பாரம்பரிய விவசாய முறையாதலால் குறைவான உற்பத்தியை அளிக்கிறது. பஞ்சாப் இராஜஸ்தானின் சில பகுதிகள், உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் சிலபகுதிகளில் இவ்வகை வேளாண்முறை பின்பற்றப்படுகிறது.

ஆ)  இடப்பெயர்வு வேளாண்மை :
* இவ்வகை வேளாண்மை பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களைஅகற்றி சாகுபடி செய்யப்படுகிறது.இரண்டு அல்லது மூன்றாண்டுகள் சாகுபடிக்குப் பிறகு, மண்ணின் வளம் குறைவதால் அவ்விடத்தைக் கைவிட்டு மக்கள் வேறொரு புதிய இடத்திற்குச் செல்வர்.இவ்வாறாக இது தொடர்ச்சியாக நடைபெறும் சில உணவு பயிர்களும், காய்வகை பயிர்களும் மனித உழைப்பின் மூலம் பயிரிடப்படுகிறது. இவை ’வெட்டுதல்’ மற்றும் ’எரித்தல்’ வேளாண்மை என்றும் அழைக்கப்படுகிறது.


இ) தீவிர வேளாண்மை :
* தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும். சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள்,களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சளை பெறுவது இதன் நோக்கமாகும். இந்த இயந்திரமயமாக்கல் மற்றும் தீவிரப்படுத்துதல் மூலம் சிறிய அளவில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையை குறிப்பாக பசுக்கள், பன்றிகள், கோழிகள் போன்ற விலங்குகளை பெரிய பண்ணைகள் மூலம் வளர்க்க வழிவகை செய்கிறது. இந்தியாவில் பஞ்சாப் இராஜஸ்தானின் சில பகுதிகள், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசப் பகுதிகளில் இத்தீவிர வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது.

ஈ) வறண்ட நில வேளாண்மை :
* நீர் பாசன வசதி இல்லாத வறண்ட பகுதிகளில் இவ்வகையான வேளாண்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் வறட்சியை தாங்கக் கூடியவை. பாசன வசதி உதவியுடன் பயிரிடப்படும் பயிர்களும் இவ்வேளாண்மையின் கீழ் பயிரிடப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் விளைச்சல் பொதுவாக குறைவாகவே இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு ஒரு பயிர் மட்டுமேபயிரிடப்படுகின்றது. இது இராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற வறண்ட பகுதிகளில் நடைபெறுகிறது.

உ) கலப்பு வேளாண்மை :
* கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். விவசாயிகளின் பல தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.


ஊ) படிக்கட்டு முறை வேளாண்மை :
* இவ்வேளாண்மை முறையானது மலைப்பிரதேசங்களில் பின்பற்றப்படுகிறது. இப்பகுதி நிலங்கள் இயற்கையாகவே சரிவு அமைப்பை கொண்டவை மலைச்சரிவுப் பகுதிகள் சமப்படுத்தப்பட்டு நிலத்தை நிலையான வேளாண் பகுதிகள் போலவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் சமமான நிலப்பகுதி குறைவாக இப்பகுதிகளில் உள்ளது. படிக்கட்டு நிலங்கள் சிறிய சமமான நிலப்பகுதிகளாக உருவாக்கப்படுகின்றன. மலைச் சரிவுகளில் உள்ள படிக்கட்டுமுறை அமைப்பு மண் அரிப்பை தடுக்கிறது. இந்தியாவில் பஞ்சாப், மேகாலயா, ஹரியானா, உத்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் படிக்கட்டுமுறை வேளாண்மை பின்பற்றப்படுகிறது.



Previous Year Questions:G4
9377.வரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
சரியான விடையை தெரிவு செய்க.
வரிசைI வரிசைII
(a) நெல் உற்பத்தி -பஞ்சாப் மற்றும் ஹரியானா
(b) கோதுமை உற்பத்தி -கூர்க் மற்றும் நீலகிரி
(c) சணல் உற்பத்தி - உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
(d) காப்பி உற்பத்தி - மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
(a) (b) (c) (d)
1 2 4 3
2 1 4 3
1 3 4 2
3 1 4 2
9383.பொருத்துக:
(a) முதல் நிலைத் தொழில் வெளிர் 1.சிவப்பு கழுத்துப்பட்டை தொழிலாளர்
(b) இரண்டாம் நிலைத் தொழில் 2.சிவப்புகழுத்துப் பட்டை தொழிலாளர்
(c) மூன்றாம் நிலைத் தொழில் 3.வெள்ளை கழுத்துப் பட்டை தொழிலாளர்
(d) நான்காம் நிலைத் தொழில் 4.நீல கழுத்துப் பட்டை தொழிலாளர்
(a) (b) (c) (d)
2 3 4 1
1 2 3 4
2 4 1 3
4 3 2 1
9475.உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
இந்தியா மற்றும் வங்காளதேசம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான்
சீனா மற்றும் ஜப்பான்
சிங்கப்பூர் மற்றும் மலேசியா
9589.இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)
9970.பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
வேளாண் பயிர்கள் - பசுமை புரட்சி
முட்டை மற்றும் கோழிவளர்ப்பு - வெண்மை புரட்சி
கடல்சார் பொருட்கள் - நீல புரட்சி
தோட்டக்கலை - தங்க புரட்சி
10066.இந்தியாவில் பசுமை புரட்சியை அறிமுகப்படுத்திய அமைப்பு
ICAR
ICMR
ISRO
CSIR
10084.சரியாக பொருந்தப்படாததை கீழ்கண்டவற்றிலிருந்து தேர்வு செய்க.
பசுமைப் புரட்சி - வேளாண் உற்பத்தி
வெண்மைப் புரட்சி - பால் மற்றும் பால் பொருட்கள்
சாம்பல் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்
பொன் புரட்சி - பழங்கள்
57228.வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
நீர்ப்பாசன வசதி
நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்
எந்திரமயமாதல்
57246.சமீபத்தில் இந்திய இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?
தோவாலை, கன்னியாகுமரி மாவட்டம்
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்
அண்ணாநகர், சென்னை
குன்னூர், நீலகிரி மாவட்டம்
57336.புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1984
1976
1996
1986
57509.இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
பஞ்சாப்
ஆந்திரப் பிரதேசம்
ராஜஸ்தான்
ஒரிஸ்ஸா
57603.அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
நெல்
கோதுமை
சிறு தானியங்கள்
தோட்டப் பயிர்கள்
57752.சடுதி மாற்ற கோதுமை வகை
ஈனோதீரா லாமார்க்கியானா
ஆமணக்கு அருணா
சார்பதி சொனோரா
மிராபிலிஸ் ஜலாபா
57971.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்

b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்.

குறியீடுகள் :
4 2 1 3
1 3 2 4
3 1 4 2
3 1 2 4
57973.இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
ரிப்பன் பிரபு
58003.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு ரோட்டான் என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?

1. கரும்பு

II. நெல்

III. பருத்தி

IV. சணல்.

இவற்றுள் :
I மட்டும்
II மட்டும்
III மட்டும்
IV மட்டும்.
Share with Friends