Easy Tutorial
For Competitive Exams

Science QA இந்திய அரசியலமைப்பு இந்திய அரசுச் சட்டம் - 1

இந்திய அரசுச் சட்டம் - 1909

இது கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபு மற்றும் இந்தியாவிற்கான வெளியுறவுச் செயலாளர் மார்லி பிரபுவினால் கொண்டுவரப்பட்டது. எனவே மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் எனப்படுகிறது.

முதன் முதலாக நேரடி தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. முஸ்லீம்களுக்கு வகுப்புவாத இடஒதுக்கீட்டு முறையினை அறிமுகம் செய்தது. எனவே முஸ்லீம் உறுப்பினர்களை தேர்வு செய்ய முஸ்லீம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு செய்வர். கவர்னர் ஜெனரல் மற்றும் கவர்னரின் நிர்வாக குழுவினில் முதன் முதலாக இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வகையினில் சத்யேந்திர பிரசாத் சின்கா கவர்னர் ஜெனரலின் நிர்வாக குழுவினில் நியமனம் செய்யப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.

இந்திய அரசுச் சட்டம் - 1919

இச்சட்டமானது கவர்னர் ஜெனரல் செல்ம்ஸ்போர்டு மற்றும் இந்தியாவிற்கான வெளியுறவுச் செயலாளர் மாண்டேகு போன்றோரால் கொண்டு வரப்பட்டது. எனவே இது மாண்டேகு செல்ம்ஸ் ஆண்டு மாண்டேகு பிரபிவினால் பிரகடனம் செய்யப்பட்ட மாண்டேகு பிரகடனம் (அ) போர்டு சீர்திருத்தங்கள் என்றழைக்கப்படுகிறது.

Group-IV(2014 Qn)

9395.பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான
விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் II
(a) இந்தியாவின் மகாசாசனம் 1. 1883
(b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885
(c) இல்பர்ட் மசோதா 3. 1878
(d) இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858
(a) (b) (c) (d)
3 4 1 2
4 3 1 2
2 3 1 4
1 4 3 2

ஆகஸ்ட் பிரகடனம் இச்சட்டத்தின் முன்நோக்கமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது மாகாணங்களில் இரட்டையாட்சி முறையினை அறிமுகம் செய்தது. .மத்தியில் ஈரவை சட்டமன்றத்தை அறிமுகம் செய்தது

மாகாண பட்டியலில் உள்ள விவகாரங்கள் ஒதுக்கப்பட்டவை (மாற்றப்பட்டவை), ஒதுக்கப்படாதவை (மாற்றப்படாதவை) என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்தியாவிற்கான வெளியுறவு செயலாளருக்கான ஊதியம் இந்திய வருவாயிலிருந்து கொடுக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. இந்தியாவில் விவகாரங்களுக்காக, இந்திய அரசினால் லண்டனில் இந்திய ஹை கமிஷனர் என்ற பணியிடம் ஏற்படுத்தப்பட்டது.

ஆடிட்டர் ஜெனரல் என்ற பணியிடம் பதவி உருவாக்கப்பட்டது. நரேந்திர மண்டல்` எனப்படும் சுதேச மன்னர்களின் அவையினை உருவாக்க சட்ட வழிவகை செய்யப்பட்டது.

இந்தியச் அரசுச் சட்டம் - 1933

இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக 1919 -ம் ஆண்டு சட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக நியமனம் செய்யப்பட்ட சைமன் கமிஷனனின் அறிக்கை, மூன்று வட்டமேசை மாநாடுகளின் நிகழ்வுகள், 1932 பூனா ஒப்பந்தம், பட்லர் குழுவின் அறிக்கைப் போன்ற அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய அரசுச் சட்டம் 1935 -ஆக கொண்டுவரப்பட்டது.

இந்தச் சட்டம் 1937 -ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது மாகாணங்களில் இரட்டையாட்சி முறையினை ஒழித்தது. மத்தியினில் இரட்டையாட்சி முறையினை அறிமுகம் செய்தது.

பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் மற்றும் சுதேச மன்னர் சமஸ்தானங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி / கூட்டமைப்பு முறையினை அறிமுகம் செய்தது. ஆனால் சுதேச மன்னர்கள் ஒப்புதல் கொடுக்காத காரணத்தினால் இச்சட்டத்தின் கூட்டாட்சி கூறு (அல்லது) மத்திய அரசு பகுதியானது.

இறுதி வரையிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. (1935) கூட்டமைப்பிற்கான நீதிமன்றம் (Fader Court) உருவாக்கப்பட்டது. இதுதான் பின்னாளில் உச்ச நீதிமன்றமாக உருமாற்றம் பெற்றது.

இது 1937 - ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. அதன்படி 1937 -ம் ஆண்டு மாகாணச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைப்பெற்றது.

இந்திய அரசியலமைப்பின் உருவாக்கம்(FRAMING OF THE CONSTITUTION OF INDIA)

இந்திய அரசியலமைப்பானது அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மந்திரிசபையின் காரியத் திட்டம் (Cabinet Mission) 1946ன் படி அரசியல் நிர்ணய சபை 1946-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது.

இதன் அங்கத்தினர்கள் மாகாணச்சபைகளின் (Provincial Assemblies) மூலமாக ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற விகதப்படி மறைமுகமாக தேர்தெடுக்கப்பட்டனர். அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்.

அவர்களுள் 296 போர் மாகாணச் சபையின் உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் அரசர்களால் ஆளப்பட்ட மாகாணங்களினால் (Princley States) நியமிக்கப்பட்டவர்கள்.

இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் நாள் சச்சிதானந்த சின்காவை இடைக்காலத் தலைவராகக் கொண்டு நடைபெற்றது. 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் டாக்டர் ராஜேந்திரபிரசாத் அரசியல் நிர்ணயம் சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாற்று முக்கியத்துவம் ஆவாய்ந்த 'குறிக்கோள் தீர்மானம் (Objective Resolution) பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் அரசியல் நிர்ணய சபையில் 1946ம் ஆண்டு டிசம்பர் 13ம் நாள் கொண்டுவரப்பட்டது.

அரசியல் நிர்ணய சபை 13 முக்கிய குழுக்களை அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அமைத்தது.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் நாள் வரைவுக்குழு டாக்டர் B. R. அம்பேத்கார் (பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார்) தலைமையில் அமைக்கப்பட்டது. 1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசியல் அமைப்பின் முதல் வரைவு தயாரிக்கப்பட்டது.

வரைவுக்குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் வரைவு 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் அவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு நவம்பர் 15 முதல்-1949ம் ஆண்டு அக்டோபர் 17 வரை இந்திய அரசியலமைப்பின் வரைவு ஒவ்வொரு ஷரத்துக்களாக பரிசீலனக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

1949ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் இந்திய அரசியல் அமைப்பு இந்திய மக்களால் அரசியல் நிர்ணய சபையின் மூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு அரசியல் நிர்ணய சபையால் அதன் கடைசி நாளான 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் அதன் உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் இந்திய அரசியல் அமைப்பு முழுவதுமாக நடைமுறைக்கு வந்தது.

இந்தக்காலக் கட்டத்தில் அரசியல் நிர்ணய சபை தற்காலிக பாராளுமன்றமாக செயல்பட்டது. (1947 ஆகஸ்ட் 15, 1949 நவம்பர் 26). இந்திய அரசியல் அமைப்பே உலகின் முதலாவது நீளமான அரசியலமைப்பாக கருதப்பட்டது.

ஆரம்பத்தில் இவ்வரசியலமைப்பு 22 பிரிவுகளையும் 395 ஒப்பந்தங்களையும் 8 அட்டவணைகளையும் கொண்டிருந்தது. அரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபை அரசியல் அமைப்பை உருவாக்க 2 வருடங்கள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களை எடுத்துக் கொண்டது.

இதற்காக 6.4 கோடி ரூபாய் அரசுப்பணம் செலவழிக்கப்பட்டது. தேசியக்கொடியின் வரைபடம் அரசியல் நிர்ணய சபையால் 1947ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேசிய கீதம் அரசியல் நிர்ணய சபையால் 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் இந்திய பாராளுமன்றமாக மாற்றப்பட்டது.

தனது சொந்த அரசியலமைப்பைக் கொண்ட ஒரே இந்திய மாநிலம் ஜம்மு காஷ்மீர். 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கான முதல் தேர்தல் நடைபெற்றது. 1951ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு முதன்முறையாக திருத்தப்பட்டது.

1991ம் ஆண்டு டெல்லி இந்தியாவின் தலைநகரப் பகுதியாக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியினால் இந்திய அரசியலமைப்பின் வரைவு தயாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1935ம் ஆண்டு அரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபையில் எழுப்பப்பட்டது.

ஆங்கிலேய அரசு இக்கோரிக்கைளை 1940ம் ஆண்டு ஆகஸ்ட் கொடையின் போது ஏற்றுக் கொண்டது.

முஸ்லீம் சீக்கியர்கள் மற்றும் பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு அவர்களின் மக்கள் தொகை விகிதப்படி இடங்கள் ஒதுக்கப்பட்டது. 1947ம் ஆண்டு ஜூன் 3ம் தேதியில் மெளன்ட்பாட்டன் பிரபுவின் திட்டப்படி பாகிஸ்தான் நாட்டின் பிரிவும் அந்நாட்டிற்கான தனியான அரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபையும் அறிவிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான்-நாட்டிற்குட்பட்ட பகுதிகளான கிழக்கு வங்கம், வடமேற்கு எல்லை மாகாணம், மேற்கு பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், அஸ்ஸாமின் சில்கெட் மாவட்டம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்திய அரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபையின் உறுப்பினர்களாக கருதப்படவில்லை.

வடமேற்கு எல்லை மாகாணம் மற்றும் சில்கெட் ஆகியவை பொது ஜன வாக்கெடுப்பின் மூலம் பாகிஸ்தானிடமே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் பிரிவினைக்கு பிறகு இந்திய அரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 299 ஆக குறைந்தது.

ஆரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபையின் முதல் ஆலோசனைக் கூட்டம் முஸ்லீம் லீக்கால் புறக்கணிக்கப்பட்டது. திரு. B. N. ராவ் அரசியல் முறை நிர்ணயம் செய்யக்கூடிய சபையின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வரைவுக்குழுவின் உறுப்பினர்கள் N. கோபாலசுவாமி ஐய்யங்கார், அல்லாதி கிருஷ்ணசுவாமி ஐய்யர் K. M. முன்ஷி முகமது சதுல்லா P. L. மிட்டர் (பின்னர் இவருக்குப்பதிலாக N. மாதவ்ராவ் நியமிக்கப்பட்டார்) மற்றும் T. P. கெய்தான் (இவர் 1948ல் இறந்ததால் இவருக்குப் பதிலாக T.T. கிருஷ்ணமாச்சாரி நியமிக்கப்பட்டார்.) டாக்டர் B.R. அம்பேத்கார் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்றழைக்கப்பட்டார்.

394ம் ஒப்பந்தத்தின்படி, குடியுரிமை, தேர்தல், பாராளுமன்றம், தற்காலிக மற்றும் மாறக்கூடிய உடன்படிக்கைகளை கொண்ட விதிகள் (Articles) 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367, 379, 380, 388, 391, 392 மற்றும் 393 ஆகியவை இந்திய அரசியல் அமைப்பு ஏற்றுக கொள்ளப்பட்ட நாள் முதல் (1949 நவம்பர் 26) அமலுக்கு வந்தன.

மற்ற உடன்படிக்கைகள் இந்திய அரசியலமைப்பு தொடங்கப்பட்ட நாள் முதல் (1950 ஜனவரி 26) அமலுக்கு வந்தன. 395வது ஒப்பந்தத்தின்படி இந்திய அரசுச்சட்டம் 1935 மற்றும் இந்திய சுதந்திரச் சட்டம் 1947 ஆகியவற்றுக்கு பதிலாக அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் இயல்பு (NATURE OF THE INDIAN CONSTITUTION)

இந்திய அரசியலமைப்பு ஒரு முழு கூட்டாட்சி நாடு அல்ல இது ஒரு அரைகுறை கூட்டாட்சி

இந்திய அரசுசட்டம் : 1935 (GOVERNMENT OF INDIA ACT OF 1935)

இந்திய அரசியலமைப்பின் மூன்றில் இரண்டு பகுதிக்கு மேல் இந்திய அரசுச்சட்டம் 1935ல் இருந்து எடுக்கப்பட்டது. அரசியலின் அடிப்படை அமைப்பு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடையேயான உறவு, அவசர நிலைப்பிரகடனம், கூட்டாட்சி முறை, கூட்டாட்சி தத்துவத்துடன் கூடிய நீதித்துறை மற்றும் ஆளுநரின் அலுவலகம் தொடர்பான உடன்படிக்கைகள் இச்சட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டன.

அமெரிக்க அரசியலமைப்பு (THE US CONSTITUTION)

குடியரசுத் தலைவரை முடிவுகள் எடுக்கக்கூடிய தலைவராகவும் முப்படைகளின் தலைவராகவும் நியமித்தல், துணைக் குடியரசுத்தலைவரை மாநிலங்கள் அவையின் ஆலோசனை சபைத்தலைவராக நியமித்தல், அடிப்படை உரிமைகளின் மீதான மசோதா, நீதித்துறையின் சுதந்திரம், சட்டம் தொடர்பான மறு பரிசீலனை, முகவுரை மற்றும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை நீக்குதல் ஆகியவை தொடர்பான உடன்பாடுகள் கொண்டிருக்கும்

ஆங்கிலேய அரசியலமைப்பு (BRITISH CONSTITUTION)

சட்டம் இயற்றும் நடைமுறைகள், சட்டத்தின் விதிமுறைகள், ஒற்றை குடியுரிமை முறை மற்றும் அமைச்சர்களுக்கான பொறுப்புகளைக் கொண்ட பாராளுமன்ற ஆட்சிமுறை

கனடாவின் அரசியலமைப்பு (CANADIAN CONSTITUTION)

மாநிலங்கள் இடையேயான உறவு, மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது, (Residuary List) வலிமையான மத்திய அரசுடன் கூடிய கூட்டமைப்பு மற்றும் எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசிடமே ஒப்படைப்பது ஆகியவை தொடர்பான உடன்படிக்கைகள்.

hஐரிஷ் அரசியலமைப்பு (IRISH CONSTITUTION)

அரசாங்கத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள், குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை, மாநிலங்களவையின் உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமித்தல்.

ஜெர்மனியின் வெய்மர் அரசியலமைப்பு (WEIMAR CONSTITUTION OF GERMANY)

அவசர நிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நீக்கும் உடன்பாடுகள்.

ஆஸ்திரேலியா அரசியலமைப்பு (AUSTRALIAN CONSTITUTION)

ஒன்றோடொன்று ஒத்துப்போகின்ற பொதுப்பட்டியல் மற்றும் வியாபாரம் வணிகம் மற்றும் பரிமாற்றம், ஒத்துழைப்போடு கூடிய கூட்டாட்சி மற்றும் பாராளுமன்ற முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பான உடன்படிக்கைகள்.

Share with Friends