Easy Tutorial
For Competitive Exams

GS - Zoology (விலங்கியல்) ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் (Health and Hygiene) Notes

ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் (HEALTH AND HYGIENE)

உடல் வளர்ச்சிக்கு, நோயிலிருந்து பாதுகாப்பதற்கு, உடலில் பல்வேறு உறுப்புகளின் பணிகளுக்கு (சுவாசித்தல், கழிவு நீக்கம், செரித்தல் போன்றவை) உடல் உறுப்புகளுக்கு சக்தி தருவதற்கு உணவு அவசியம்.

சராசரியாக ஒரு மனிதனின் (70 கிலோ) உடலில் உள்ள பொருள்களின் அளவு (கிராமில்)
நீர்41, 400
மெக்னீசியம்21
கொழுப்பு12,600
கால்சியம்85
புரதம்12,600
பாஸ்பரஸ்670
கார்போஹைட்ரேட்300
சல்பர்112
சோடியம்63
இரும்பு3
பொட்டாசியம்150
அயோடின்0.014
கால்சியம்1160
உணவுப் பொருள்களின் வகைகள்
  • மாவுப்பொருள்கள் (கார்போஹைட்ரேட்டுகள்)
  • கொழுப்பு
  • புரதங்கள்
  • வைட்டமின்கள்
  • தாது உப்புகள்
  • நீர்

உணவுப் பொருள்களை அவற்றின் பயன்பாட்டில் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

உணவின் வகைகள்
வளர்ச்சியளிப்பவைபுரதங்கள்4.4/ கிராம்
சக்தியளிப்பவைகார்போஹைட்ரேட்4.1/ கிராம்
பாதுகாப்பு தருபவைகொழுப்பு9.3/ கிராம்
உணவுப் பொருள்களும் அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களும், அதன் பயன்களும்

சத்துள்ள உணவு - வெவ்வேறு உணவுப்பொருள்களில் 100 கிராமில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவு

சரிவிகித உணவு :

உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின், நீர் போன்றவற்றை உரிய அளவு கொண்ட உணவே சரிவிகித உணவு ஆகும்.

BMI - Body Moss Index

BMI = உடல் எடை (கிலோகிராம்) /உயரம் (மீட்டர் $^{2}$)

  • 18.5 - 24-9 - சரியான எடை
  • 18க்கு குறைவு - குறைவான எடை
  • 25 - 30 அதிக எடை
  • 30க்கு மேல் - மிக அதிக எடை

உணவில் கலப்படம்

அடிப்படையாக உணவு, காற்று, உறைவிடம் ஆகியன உயிர்வாழ மிகவும் அவசியம். இவற்றின் இயல்பான பண்புகளைக் குறைக்கும் அல்லது சிதைக்கும் எந்த நடவடிக்கையும் சட்டப்படி தண்டனைக்குரியதே ஆகும்.

இது தெரிந்தும், சில சமூக விரோதிகள், பணத்திற்காக உணவில் கலப்படம் செய்கிறார்கள்.

தரத்தால் குறைந்த, உடல் நலத்திற்கு தீங்கு செய்யும் பொருள்களை உணவுப் பொருள்களுடன் கலந்து, உணவின் தன்மையை மாற்றமடையச் செய்வது உணவுக் கலப்படம் ஆகும். எடுத்துக்காட்டு: பாலில் நீரைச் சேர்த்தல் ஆகும்.

உணவுப் பதப்படுத்தலில் வழி முறைகள்
  • உணவுப் பதப்படுத்துதலில் பல வழி முறைகள் உள்ளன அவை
  • உலர்த்துதல் மற்றும் நீர் அகற்றுதல்
  • டப்பாக்களில் இடுதல், புட்டியில் இடுதல்
  • குளிரூட்டுதல்
  • உணவுப் பதப்படுத்திகளைச் சேர்த்தல்
  • பாஸ்டியர் முறை
  • நீரில் கரையும் வைட்டமின் - B, C
  • கொழுப்பில் கரையும் வைட்டமின் - A, D, E, K
உணவூட்டம் வைட்டமின்கள்
Share with Friends