Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2013 Page: 5
10249.நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
பாஞ்சாலி சபதம்
மனோன்மணீயம்
மணிமேகலை
10250."மருகி என்பது யாரைக் குறிக்கும்?
மருமகள்
மகள்
கொழுந்தி
மாமியார்
10251.பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாப்பா பாட்டு
பாஞ்சாலி சபதம்
10252."புதுநெறிகண்ட புலவர்" என்று போற்றப்பட்டவர்
இராமலிங்க அடிகளார்
தாயுமானவர்
திரு.வி.க
கவிமணி
10253.பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர்
2 3 4 1
4 3 1 2
1 4 2 3
3 2 1 4
10254.சரியான விடையைத் தேர்வு செய்க.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை
100
80
96
108
10255."பண்ணொடு தமிழொப்பாய்" எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
திருவாசகம்
தேவாரம்
திருக்கோவையார்
திருமந்திரம்
10256.பொருந்தாத தொடரைக் கண்டறி
அடக்கம் அமரருள் உய்க்கும்
கற்க கசடற
தீதும் நன்றும் பிறர்தர வாரா
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
10257.பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1.மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2.கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3.கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4.ஆதிரை
3 4 1 2
3 4 2 1
4 3 2 1
1 2 3 4
10258.63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது?
கந்தபுராணம்
திருவிளையாடற் புராணம்
பெரிய புராணம்
தணிகை புராணம்
10259.பொருத்தமான பழமொழியைக் கண்டறி.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
ஞாயிறைக் கைமறைப்பார் இல்
முள்ளினால் முள்களையும் ஆறு
பாம்பு அறியும் பாம்பின் கால்
ஆற்று உணா வேண்டுவது இல்
10260."செழுங்கனித் தீஞ்கவை" என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
செழுமை + கனி + தீஞ்கவை
செழும் + கனி + தீஞ்சுவை
செழும் + கனி + தீம் + சுவை
செழுமை + கனி + தீம் + சுவை
10261."முடுகினன்" என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?
செலுத்தினான்
நிறுத்தினான்
வளைத்தான்
முரித்தான்
10262."வையக மெல்லா மெமதென்றெழுதுமே" என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?
சேரன்
பல்லவன்
சோழன்
பாண்டியன்
10263.சரியானவற்றைக் காண்க.
(1) நீ+ ஐ = நின்னை
(2) நீ+ அது= நினது
(3) நீ+ ஆல் = நீயால்
(4) நீ+ கு = நீக்கு
2,3- சரி
1,2- சரி
3,4- சரி
நான்கும் சரி
10264.உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
"கொக்கொக்க கூம்பும் பருவத்து"
காத்திருத்தல்
வெறுத்திருத்தல்
அறியாதிருத்தல்
மறந்திருத்தல்
10265.பெயர்ச்சொல்லின் வகையறிதல்
சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக.
ஊரன்
முக்கன்
வறியன்
கடையன்
10266.மனக்குகை-இலக்கணக் குறிப்பு எழுதுக.
வினைத்தொகை
உவமைத்தொகை
உருவகம்
உம்மைத்தொகை
10267.இலக்கணக்குறிப்பறிதல்
சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற்---- பரிவகற்று உறுவேனில்-----இலக்கணம் தேர்ந்து எழுது
வினைத்தொகை
அன்மொழித்தொகை
தொழில் பெயர்
உரிச்சொல் தொடர்
10268.கீழ்க்காணும் தொடர்களில் எத்தொடர் சரியானது?
சன்மார்க்க கவி இராமலிங்க அடிகளார்
சிலம்புச் செல்வர் இளங்கோவடிகள்
இசைக்குயில் சரோஜினி நாயுடு
கவிக்கோ முடியரசன்
Share with Friends