Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2012

57845.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A):திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.

காரணம் (R) : ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு. ஆனால் (R) சரி
57846.பிரித்து எழுதுக : சின்னாள்
சிறிய + நாள்
சில + நாள்
சின் + நாள்
சிறுமை + நாள்.
57847.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :

அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்
பசுங்காய் எது ?
நெல்லியம் - பொருள் கூறு.
நெல்லிக்காயின் குணம் என்ன ?
நெல்லிக்காயை என்ன செய்ய வேண்டும் ?
57848.பொருந்தாத இணையைக் கண்டறிக :
தமக்கு-மருத்துவர் தாம்
பழம் பகை -நட்பாதலில்
தம் கண்ணிற் -செய்யாறு மாணாவினை
பின்னின்னா-பேதையார் நட்பு.
57849.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
கொடியாரை கொலையில் வேந்தொறுத்தல் டைங்கூழ் களைகட்டதனொடு நேர்
கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதெனாடு நேர்
களைகட் டதனொடு வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் நேர்
வேந்தொறுத்தல் பைங்கூழ் கொடியாரை கொலையில் களைகட் டதெனொடு நேர்.
57850.பிரித்து எழுதுக : நன்னூல்
நன் + நூல்
நல்ல + நூல்
நன்மை + நூல்
நல் + நூல்.
57851.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
தமிழுக்குத் தொண்டு செய்வோன் பாரதிதான் சாவதில்லை தமிழ்த்தொண்டன் செத்ததுண்டோ !
தமிழ் தொண்டன் சாவதில்லை பாரதிதான் செத்துதுண்டோ தமிழுக்குத் தொண்டு செய்வோன் !
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ !
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ ! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
57852.மறவன் - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
குடிப்பெயர்
கிளைப்பெயர்
சாலப்பெயர்
சுட்டுப்பெயர்.
57853.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு

"உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்"
உயர்வு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?
உறுவினை காய்வோன் யார் ?
காய்தல் நல்லதா ? கெட்டதா ?
யார் உயர்வை விரும்புவது பொய்யாகும் ?
57854.நீடு துயில் நீக்க பாட வந்த நிலா என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்
பாரதிதாசன்
கவிமணி
பாரதியார்
புகழேந்திப் புலவர்.
57855.பட்டியல் 1 ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

சொல் -பொருள்

1. பொலம் -அ. இரக்கம்

2. வேரல் -ஆ. அழகு

3. நொய்மை - இ. மூங்கில்

4. செந்தண்மை -ஈ. மென்மை .

குறியீடுகள்:
அ ஈ இ ஆ
ஆ ஈ அ இ
ஆ இ ஈ அ
இ ஈ ஆ அ
57856.எது உணர்ச்சி வாக்கியம் இல்லை?
ஆ ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு !
ஐயோ ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
உண்மைக்கு அழிவில்லை அல்லவா ?
ஆஹா ! தாஜ்மஹாலின் அழகே அழகு.
57857.பட்டியல் 1 ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I-பட்டியல் II

1. பை அ. நுரை

2. பூ ஆ. அளவு

3. பே இ. கூர்மை

4. மா ஈ. பாம்பின் படம்.

குறியீடுகள் :

1 2 3 4
ஈ இ அ ஆ
ஆ அ ஈ இ
இ ஈ ஆ அ
ஆ இ அ ஈ
57858.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
கடலில் பெருங்காயம் கரைத்த போல
கடலில் பெருங்காயம் போல் கரைத்தல்
கடலில் கரைத்த பெருங்காயம் போல
பெருங்காயம் கரைத்த கடல் போல.
57859.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
அறிவை விதைக்கும் களம் பள்ளியின் பாடநூல்கள் ஆகும்
பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும் .
பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் பள்ளி
அறிவை விதைக்கும் களமாக பள்ளியின் பாடநூல்கள் உள்ளன.
57860.ஐந்திலக்கணம் பேசும் நூல்
நரிவிருத்தம்
நன்னூல் .
வீரசோழியம்
வச்சணந்தி மாலை.
57861.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
நன்றிக்கு வித்தாவது எது ?
நல்லொழுக்கம் நன்மை தருமா ?
நன்றி என்பது யாது ?
நல்லொழுக்கம் என்றால் துன்பமா ?
57862.இலைமறை காய் போல
வேதம்
மறைபொருள்
நெருக்கம்
இரகசியம்.
57863.இன்ப மிகுதி - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க :
பாலோடு சர்க்கரை கலந்தது
பாலோடு பழம் கலந்தது போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
பாலோடு தேன் கலந்தது.
57864.பிரித்து எழுதுக : வெற்றிலை
வெற்றி + இலை
வெறு + இலை
வெறுமை + இலை
வெற்று + இலை.
Share with Friends