Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2016 Page: 2
8816.தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது
பாவேந்தர் விருது
பாரதியார் விருது
கலைமாமணி விருது
கவிச்செம்மல் விருது
8817.ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
1786
1806
1856
1886
8818.`மணநூல்` என அழைக்கப்பெறும் நூல்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
8819.பொருத்துக:
சிந்தை - நீர்
நவ்வி - மேகம்
முகில் - எண்ணம்
புனல் - மான்
2 1 3 4
1 3 4 2
3 4 2 1
4 3 1 2
8820.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Writs - வாரிசுரிமைச் சட்டம்
Succession Act - உரிமைச் சட்டங்கள்
Substantive Law- சான்றுச் சட்டம்
Evidence Act - சட்ட ஆவணங்கள்
1 3 4 2
4 1 2 3
2 4 3 1
1 2 3 4
8821.`யாழ் கேட்டு மகிழ்ந்தாள்` - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
சொல்லாகு பெயர்
கருத்தாகு பெயர்
காரியவாகு பெயர்
கருவியாகு பெயர்
8822.வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும்.
சிங்கம்
கடல்
மாலை
சந்தனம்
8823."எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
திரிசொல்
இயற்சொல்
வினைத்திரிசொல்
பெயர்த் திரிசொல்
8824.அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
எதுகை மட்டும் வந்துள்ளது
எதுகையும், மோனையும் வந்துள்ளது
எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
மோனை மட்டும் வந்துள்ளது
8825.பெயரெச்சத்தை எடுத்து எழுது.
படித்து
எழுதி
வந்த
நின்றான்
8826.பொருத்துக:
அறுவை வீதி - அந்தணர் வீதி
கூல வீதி - பொற்கடை வீதி
பொன் வீதி - ஆடைகள் விற்கும் வீதி
மறையவர் வீதி - தானியக்கடை வீதி
4 3 2 1
3 4 2 1
1 8 2 4
2 1 3 4
8827.துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
கலையரசிதுணி தைத்தாள்
கலையரசி தைத்தாள் துணி
கலையரசி என்னதைத்தாள்
கலையரசி துணியைத் தைத்தாள்
8828."ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
முற்றெச்சம்
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
வினையெச்சம்
8829.வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
வந்தான்
வந்து
வருதல்
வந்த
8830."உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்க
கயல்விழி
மலர் முகம்
வெண்ணிலவு
தாமரைக் கண்கள்
8831."கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை
இன்னிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
சொல்லிசை அளபெடை
ஒற்றளபெடை
8832.இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக்
கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி
வழுவமைதி
வினாவழு
காலவழு
வழாநிலை
8833.யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்
கிரேக்கர், உரோமானியர்
பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்
சீனர் , மலேசியர்
8834.தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
ஏலமும், இலவங்கமும்
இஞ்சியும், மிளகும்
பட்டும் சருக்கரையும்
முத்தும், பவளமும்
8835.இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு
எது?
1991
1990
1993
1992
Share with Friends