Easy Tutorial
For Competitive Exams

GS - Indian Polity (இந்திய அரசியல்) QA இந்திய அரசியல்  QA - Part 3

52940.அரசியலமைப்பு நிர்ணய சமையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் இராஜேந்திர பிரசாத்  
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா  
பண்டித ஜவர்ஹர்லால் நேரு
டாக்டர் அம்பேத்கார்
Explanation:
  • 9 டிசம்பர் 1946: அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. தனி நாடு கோரி இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. சச்சிதானந்த சின்கா கூட்டத்திற்கு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 11 டிசம்பர் 1946: இராசேந்திர பிரசாத் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராகவும், ஹரேந்திர கூமர் முகர்ஜி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆலோசகராக பி. என். ராவ் நியமிக்கப்பட்டார்.
  • 13 டிசம்பர் 1946: மன்றத்தில் ஜவகர்லால் நேரு அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் தீர்மானம் கொண்டு வந்தார்.
  • 22 ஜனவரி 1947: நேருவின் குறிக்கோள் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 22 சூலை 1947: இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 15 ஆகஸ்டு 1947: இந்தியாவின் விடுதலை நாள்
  • 29 ஆகஸ்டு 1947: அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவு குழுவிற்கு அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 16 சூலை 1948: ஹரேந்திர கூமர் முகர்ஜி மற்றும் வி. டி. கிருஷ்ணமாச்சாரி அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 26 நவம்பர் 1949: அம்பேத்கர் முன்மொழிந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியலமைப்பு நிர்ண்ய மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 24 ஜனவரி 1950: "ஜன கண மன " எனத்துவங்கும் பாடலை இந்திய தேசிய கீதமாகவும்; வந்தே மாதரம் எனத்துவங்கும் பாடலை நாட்டுப் பாடலாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
52941.இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் வரைந்து  முடித்தது
26 டிசம்பர் 1949இல்
26 நவம்பர் 1949இல்
26 ஜனவரி  1950 இல்
30நவம்பர் 1949 இல்
Explanation:
  • இந்திய அரசியல் சாசனம் வரைந்து முடித்தது --- 29 நவம்பர் 1949
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கார்
  • அரசியலமைப்பு வரைவுக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை --- 7
  • வரைவுக் குழு அமைக்கப்பட்ட நாள் --- 29/8/1947
  • இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாள் --- ஜனவரி 26,1950
  • இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் --- புது தில்லி
  • அரசியல் நிர்ணய சபையில் இந்திய அரசியலமைப்பு எத்தனைமுறை படிக்கபட்டது --- 3
52942.அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது
காபினெட் தூதுக்குழுத் திட்டம்
மத்திய அரசு அதிகாரங்கள் பற்றிய குழு
வழிபடுத்தல் குழு
சிறுபான்மையினரை பற்றிய குழு
Explanation:

1946 இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய ராச்சியத்தின் அரசு, அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பியது. இது பிரித்தானிய அமைச்சர்களின் தூதுக்குழு (Cabinet Mission) என்றழைக்கப்பட்டது.

52943.இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
299
389
398
289
Explanation:
  • தொடக்கத்தில் மொத்தம் 389 உறுப்பினர்கள்.(10 lakhs people=1 உறுப்பினர்)
  • மாநில சட்டமன்றங்களிலிருந்து நேரடியாக தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதி -292
  • சுதேச அரசுப்பகுதி பிரதிநிதி -93
  • Delhi, Ajmer, Marwar, Coorg, Brithish Baluchistan Chief Commissions -4
52944.இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர்
Dr .B .R .அம்பேத்கர்
சர்தார் படேல்
ஜவர்ஹர்லால் நேரு
இராசேந்திர பிரசாத்
Explanation:
  • 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத்.
  • 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.
52945.இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்
2 ஆண்டு 11 மாதம் 18 நாட்கள்
1 ஆண்டு 11 மாதம் 18 நாட்கள்
8 ஆண்டு 11 மாதம் 11 நாட்கள்
18 ஆண்டு 11 மாதம் 18 நாட்கள்
Explanation:
  • இந்திய அரசியல் நிர்ணய சபை 2 ஆண்டு 11 மாதம் 18 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட காலம்.
  • 11 கூட்டுத்தொடர்கள்
  • இதில் 114 நாட்கள் அரசியலமைப்பின் வரைவு விவாதிக்கப்பட்டது.
  • 1stகூட்டுத்தொடர் - 1946,dec9-21
  • 2nd கூட்டுத்தொடர்-1947,jan 20-26
  • 3rd கூட்டுத்தொடர்-1947-April 22-mar 2
52946.உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு
வெனிசுலா அரசியலமைப்பு
அமெரிக்கா அரசியலமைப்பு
ஐரோப்பா அரசியலமைப்பு
Explanation:
  • உலகிலேயே மிக நீளமானது- இந்தியா
  • உலகிலேயே இரண்டாவது மிக நீளமான அரசியலமைப்பு கொண்ட நாடு -வெனிசுலா
  • மிக குறுகிய அரசியலமைப்பு கொண்ட நாடு- அமெரிக்கா
  • மிக பழைமையான அரசியலமைப்பு - சான் மெரினா (ஐரோப்பா)
52947.அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர்
சர்தார் படேல்
ஜவர்ஹர்லால் நேரு
Dr .B .R .அம்பேத்கர்
இராசேந்திர பிரசாத்
Explanation:
  • பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார்.
  • இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது.
  • அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்
  • அரசியலமைப்பு 1949 நவம்பர் 26, அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.
  • இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்
52948.அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை
12
8
18
16
Explanation:
  • இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது 12 அட்டவணைகள் உள்ளன.
  • அட்டவணை 1: இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்து
  • அட்டவணை 2: குடியரசு தலைவர், உச்ச, உயர் நீதி மன்ற நீதிபதிகள், கவர்னர் போன்றோரின் சம்பளங்கள் குறித்து
  • அட்டவணை 3: பதவி ஏற்பு உறுதிமொழிகள்
  • அட்டவணை 4: ராஜ்யச்பாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றியது
  • அட்டவணை 5: SC & ST மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றியது
  • அட்டவணை 6: அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ST பகுதிகள் நிர்வாகம் பற்றியது
  • அட்டவணை 7: மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு தொடர்பாக ( மத்திய பட்டியல் – 99, மாநில பட்டியல் – 61, பொது பட்டியல் – 52)
  • அட்டவணை 8: அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது
  • அட்டவணை 9: 1951 ம் வருடத்திய முதல் சட்டதிருத்தம் மூலம் இது சேர்க்கப்பட்டது. இந்த அட்டவணையில் ஏதேனும் ஒரு சட்டத்தை இணைப்பதன் மூலம் அரசு அதனை நீதித்துறை ஆய்விலிருந்து பாதுகாக்கலாம்.
  • அட்டவணை 10: கட்சித்தாவல் தடை சட்டம் பற்றியது
  • அட்டவணை 11: பஞ்சாயத்துகள் பற்றியது
  • அட்டவணை 12: நகராட்சிகள் பற்றியது
52949.அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட நாள்
1949 Nov 26
26 டிசம்பர் 1949இல்
26 ஜனவரி  1950 இல்
30நவம்பர் 1949 இல்
Explanation:
  • அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்ட நாள்-1949 Nov 26-இந்திய சட்ட தினம்.
  • நடைமுறைப் படுத்தப்பட்ட நாள்-1950 Jan 26-இந்திய குடியரசு தினம்.
  • First Reading -4 Feb 1948
  • Second Reading – 15 Nov 1949
  • Third Reading – 14 Nov 1949
  • Finally passed and accepted on Nov 26
  • Last meeting – Jan 24 1950(National anthem , citizenship, National song)
  • came into force-Jan 26 1950 (National emblem )
52950.இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம்/ மக்களாட்சி என்பதன் பொருள் யாது?
இறையாண்மையை குறிக்கும்
மதசகிப்புத் தன்மையைக் குறிக்கும்
தேர்தல் முறையினை குறிக்கும்
முடியாட்சியைக் குறிக்கும்
52951.மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய் என்றும், இந்தியா ஓர் இறையாண்மையுடைய சமதர்ம, சமய/ மதசார்பற்ற, மக்களாட்சி நாடாக உள்ளது எனக் கூறுவது
அடிப்படை உரிமைகள்
முகப்புரை
அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
தேர்தல் முறை
52952.அரசியலமைப்பின் முகப்புரை எப்போது முதலாவதாக திருத்தப்பட்டது
84 வது திருத்தம்
44 வது திருத்தம்
42 வது திருத்தம்
24 வது திருத்தம்
52953.இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
1
2
3
4
52954.இந்தியா ஒரு
இறைமை வாய்ந்த- சமநலமை நெறி- சமயச் சார்பற்ற- மக்களாட்சி- குடியரசு
இறைமை வாய்ந்த-சமநலமை நெறி- மக்களாட்சி- குடியரசு-சமயச் சார்பற்ற
குடியரசு-மக்களாட்சி- சமயச் சார்பற்ற- சமநலமை நெறி-னிறைமை வாய்ந்த
சமயச் சார்பற்ற- சமநலமை நெறி-இறைமை வாய்ந்த- மக்களாட்சி- குடியரசு
52955.இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி அல்ல என தீர்ப்பு கூறப்பட்ட வழக்கு?
ரீ பெருபாரி வழக்கு
கேசவானந்த பாரதி
கோலக்நாத் வழக்கு
பொம்மை வழக்கு
52956.இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரை இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பகுதி என தீர்ப்பு கூறப்பட்ட வழக்கு?
ரீ பெருபாரி வழக்கு
கேசவானந்த பாரதி
கோலக்நாத் வழக்கு
பொம்மை வழக்கு
52957.1976 ம் ஆண்டின் 42 வ்து சட்ட திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்ட சொற்கள்
சமநலமை நெறி, சமயச் சார்பின்மை
சமநலமை நெறி, மற்றும் ஒருமைப்பாடு
சமநலமை நெறி, சமயச்சார்பின்மை,மற்றும் ஒருமைப்பாடு
சமநலமை நெறி, மக்களாட்சி, மற்றும் ஒருமைப்பாடு
52958.வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைக்கு ஆதாரம் எது?
சமத்துவம்
மதச் சார்பின்மை
சுதந்திரம்
இறையாண்மை
52959.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்திய அரசாங்கம் எந்த மதத்தையும் அரசாங்க மதமாக அறிவிக்கவில்லை.
2.அனைத்துக் குடிமக்களும் தமது சமயத்தின்படி சுதந்திரமாக வழிபடவும், சமூக மற்றும் அரசியலில் சமமான உரிமைகளை அனுபவிக்கவும் முடியும்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மட்டும் 2 தவறு
Share with Friends