Easy Tutorial
For Competitive Exams

Science QA கிராம நலன் சார்ந்த திட்டங்கள்

கிராம நலன் சார்ந்த திட்டங்கள்

ஒரு நாட்டின் பொருளாதார முனனேற்றம் அந்நாட்டின் தொழில் முன்னேற்ற அளவைப் பொருத்ததாகும். பல மேற்கத்திய நாடுகள் அவற்றினுடைய தொழில் துறை வளர்ச்சியினாலேயே உயர்ந்த பொருளாதார முன்னேற்ற நிலையை எய்தியுள்ளன.

போக்குவரத்து, ஆற்றல், செய்தித்தொடர்பு மூலதனப் பண்ட உற்பத்தி, தொழிலகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அனைத்தும் பின்னிப் பிணைந்து முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பணி தொழில்மயமாக்குதல் எனப்படும். எனவே பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கு தொழில் மயமாக்குதல் மிகவும் இன்றியமைவதாகும்

தொழில் முன்னேற்றத்தின் தேவையும் பங்கும்
1. நாட்டு வருமானத்தை உயர்த்துதல்
2. ஏற்றுமதி ஆற்றல் பெருக்கம்
3. வேலைவாய்ப்பு பெருக்கம்
4. பண்டங்களின் மதிப்பைப் பாதுகாத்தல்
5. தற்சார்பை ஏற்படுத்துதல்

இந்தியாவில் தொழில் முன்னேற்ற வகைப்பாடு:

முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956)

திட்ட ஒதுக்கீடு

தொழில் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.94 கோடியாகும்

முக்கிய கூறுகள்

முதல் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தொடங்கப்பட்ட தொழில்கள், உரத்தொழிற்சாலை, கப்பல் தளம், இரயில் எஞ்சின் தொழிற்சாலை, இயந்திர கருவிகள் தொழிற்சாலை, இரயில் பெட்டி தொழிற்சாலை, தொலைபேசித் தொழிற்சாலை ஆகியவையாகும்

வளர்ச்சி விகிதம்

திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுத் தொழில், வளர்ச்சி வீதம் 7 விழுக்காடு ஆகும், ஆனால் திட்டக்கால இறுதியில் கிட்டிய ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் விழுக்காடு ஆகும்.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)

திட்ட ஒதுக்கீடு

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் ஒழுங்குற அமைந்த பொதுத்துறைக்கு முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.870 கோடியாகும். இதில் தனியார் துறை முதலீடு ரூ. 675 கோடியாகும்

முக்கிய கூறுகள்

தொழில் மயமாக்கலின் வேகத்தை முடுக்கிவிடுவதற்காக ஆயிரக்கணக்கான சிறு தொழில்களைக் கொண்ட அறுபது தொழிற்பேட்டைகளை அரசு தொடங்கியது

வளர்ச்சி வீதம்

சிறு தொழிலும் குடிசை தொழிலும் நன்கு வளர்ச்சியுற்றன. ஓட்டு மொத்த வளர்ச்சி வீதம் 14.7 விழுக்காடு என மதிப்பிடப்பட்டது.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் (1961-1966)
திட்ட ஒதுக்கீடு

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஏறக்குறைய நாட்டின் பல்வேறு தொழில் முன்னேற்றத்துக்காக ரூ.300 கோடியை அரசு ஒதுக்கியது. பொதுத்துறை ஒதுக்கீடு ரூ.1300 கோடியாகவும் இருந்தது.

முக்கிய கூறுகள்.

தற்சார்புடைய வளர்ச்சியை எட்டிபிடிக்கும் நோக்கத்துடன் மூன்றாம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அடிப்படை, பெருந்தொழில்களை முன்னேற்றுவதில் அரசுத்துறை மிகப்பெரும் பங்காற்ற வேண்டியிருந்தது. வருங்காலத் தொழில் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் இத்திட்டக்காலத்தில் அமைக்கப்பட்டது.

வளர்ச்சி வீதம்

ஆண்டுக்கு 7.6 விழுக்காடு என்கிற வீதத்தில் தொழில் வளர்ச்சி வீதம் சீராக உயர்ந்தது.1956-66 ஆம் ஆண்டுகளில் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நடைப்பெற்ற போர்களாலும் வறட்சி நிலையிலும் வளர்ச்சி வீதம் மெல்லக் குறைந்தது.

ஆண்டுத் திட்டங்கள் (1966-67, 1967-68, 1968 - 69)
திட்ட ஒதுக்கீடு

இவற்றில் தொழில் ஒதுக்கீடு ரூ. 15.11 கோடியாகும் முக்கிய கூறுகள் உர உற்பத்தி, உயர் விளைச்சல் விதைகள் உற்பத்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.

வளர்ச்சி வீதம்

தொழில் வளர்ச்சி வீதம் இந்தக் காலக்கட்டத்தில் ஆண்டொன்றுக்கு 7.6 விழுக்காடாக இருந்தது.

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் (1969-74)

நான்காம் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் தொழில் துறையில் பொதுத்துறை ஒதுக்கீடு ரூ.2864 கோடியாகும். அதில் உருக்கு இரும்பு உரங்கள், பெட்ரோலியம், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், இரும்பு கனிமம் ஆகிய தொழில்களுக்காகப் பெருமளவு முதலீடு செய்யப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுத் தொழில் வளர்ச்சி வீதம் 8 விழுக்காடாக இருந்தது.

ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (1974-79)

ஐந்தாம் திட்டத்தில் தொழில் துறைக்கும் சுரங்கத் தொழிலுக்குமாக் ரூ.10135 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பொதுத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.9600 கோடியாகும். ஊரக, சிறுதொழில்களுக்காக ரூ. 535 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டக் காலத்தில் அடிப்படை தொழில் துறை (அ) நுகர்வு பண்டங்கள் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சி
(ஆ) பலவகைத் தொழில்கள்
(இ) முழுமையான ஆற்றல் பயன்பாடு
(ஈ) தனியார்துறை முன்னுரிமை நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் அயல் நாட்டு நிறுவனங்கள் - ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுபாடுகள் நீக்கம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டன.


ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-85)

ஆறாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொழில் முன்னேற்றத்துக்கென செய்யப்பட்ட ஒட்டு மொத்த ஒதுக்கீடு ரூ.2200 கோடியாகும். இதில் பொதுத்துறை ஆகியவற்றுக்காக முறையே ரூ.4300 கோடியும், 13,000 கோடியும் ஒதுக்கப்பட்டன.கார்கள், இரு சக்கர ஊர்திகள், செய்தி தொடர்புக் கருவிகள் ஆகியன எதிர்பார்க்கப்பட்ட இலக்கிற்கு அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டன் அரசின் தாராள கொள்கையினால் இத்தகைய வாய்ப்பு ஏற்பட்டது.

ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985 -1900)

பெருந்தொழில், நடுத்தர தொழில்களுக்கு ரூ.19710 கோடி ஏழாம் திட்டக்காலத்தில் ஒதுக்கப்பட்டது. ஊரகத் தொழில் சிறு தொழிகளுக்காக ரூ.2750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொழில் முன்னேற்றத்தை எளிமைப்படுத்திடத் தொழில் உரிமக் கொள்கையை அரசு தளர்த்தியது. அடிப்படைத் தொழில்களின் வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகளின் பெருக்கத்திற்கும் போதிய கவனம் செலுத்தப்பட்டது. திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு 8 விழுக்காடு ஆனால் உண்மையில் சாதிக்கப்பட்ட வளர்ச்சி 8.4 விழுக்காடாகும்.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)

எட்டாம் திட்டக்காலத்தில் தொழில்கள் மற்றும் சுரங்கத் தொழிலுக்காக, பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது ரூ. 40,673 கோடியாகும்

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)

எட்டாம் ஐந்தாம் திட்டம் 1997 மார்ச் 31 ஆம் நாள் நிறைவுற்றது. ஒன்பதாம் திட்டம் 1997 ஏப்ரல் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. ஆனால் அரசு இறுதியாக 1999 பிப்ரவரியில் தான் இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அரசியல் நிலையற்ற தன்மைகளாலும் மாற்றங்களாலும் திட்டம் உரிய காலத்தில் முறையாகத் தொடங்கப்பட்ட போதிலும் இரண்டாண்டுகள் கழித்தே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெருந்தொழில்கள் இந்தியாவில் கடந்த காலத்தில் ஆங்கிலேய பாணியில் அமைந்த தொழில் புரட்சி எதுவும் நிகழவில்லை . அயல் நாட்டு மூலதனத்துடனும் தொழில் முனைவுடனும், கூடிய ஒரு முயற்சி 19 ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டது. இந்திய முதலாளிகள் இந்தத் தொழில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். அரசும் தொழில் துறை முன்னேற்றத்துக்கு ஆதரவளித்தது. விடுதலைக்குப் பின்னரும் ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னரும் தொழில் துறை வளர்ச்சி, குறிப்பாகப் பெருந்தொழில்களின் வளர்ச்சி வேகம் பெற்றது.


பெருந் தொழில்களை நுகர்வுப் பண்டத் தொழில்கள் என்றும், மூலதனப் பண்டத் தொழில்கள் என்றும் பிரிக்கலாம், இரும்பு எஃகுத் தொழில் பருத்தி நெசவுத் தொழில் ஆகியன மூலதனப் பண்டத்தொழில்களில் அடங்கும்

Share with Friends