Easy Tutorial
For Competitive Exams

Science QA தமிழகத்தின் பொருளாதார போக்கு

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

  • தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில்
    1. சேவைத் துறை 45%,
    2. தொழில் துறை 34%,
    3. வேளாண்மைத்துறை 21%
    பங்களிக்கின்றன.
  • தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (2012-13) ரூபாய் 98,550.
  • தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில் நான்காவது இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது (Rs 7,444,740 Milion).
  • 2011-2012-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.39 விழுக்காடு.
  • தமிழ்நாட்டின் தொழில்கள்

    1. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும் புகழ்பெற்றுள்ளன.
    2. திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களைப் போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும் புகழ்பெற்றுள்ளன
    3. சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கு புகழ்பெற்றுள்ளன.
    4. காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும் புகழ்பெற்றுள்ளன
    5. வேலூர் தோல் தொழிலுக்கும் புகழ்பெற்றுள்ளது.
    6. சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.
    7. தூத்துக்குடியில் மின்னுற்பத்தி நிலையங்களும், உர, உலோகத் தொழிற்சாலைகளும் உள்ளன. கரூரில் நெசவுத்தொழிலும், பேருந்து, சரக்குந்துகளுக்கு கூடு கட்டும் தொழிலும் நன்கு வளர்ந்துள்ளன.
    8. பெங்களூருக்கு அருகில் உள்ள ஓசூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் (அசோக் லேலண்டு, டிவிஎஸ்), மற்ற இயந்திரத் தொழிற்சாலைகளும் (டைட்டன்) உள்ளன.

    தமிழ் நாடு - முதலீடுசெய்துள்ள முதல் 10 நிறுவனங்கள்

    தமிழகத்தில், 15 ஆண்டுகளில், முதலீட்டில், முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பட்டியல்

    நிறுவனம் முதலீடு (ரூபாய் கோடியில்)
    போர்டு 4.110
    ஹாஸ்பைரா எல்த்கேர் 3.648
    டெய்ம்லர் 3.594
    ரெனால்ட் - நிசான் 3,154
    டபிள்யு.எஸ். எலக்ட்ரிக் 1,781
    எல்.பி. கியூப் சிஸ்டம் 1406
    நிசான் 1,026
    மிஷலின் 686
    வெடில் காஸ் பி.வி. 539

    இரகுராம் ராஜன் குழுவின் அறிக்கை

    இந்தியாவின் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாநிலங்களைக் கண்டறிவதற்காக ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு ஒரு குறியீட்டை உருவாக்கியது. குறியீட்டு அளவு 0 முதல் 1 வரை, இதில் 0 என்பது முன்னேறிய மாநிலம், 1 என்பது மிகவும் பின்தங்கிய மாநிலம் ஆகும்.

    ரகுராம் ராஜன் அறிக்கையின் படி, தமிழ்நாடு மூன்றாவது முன்னேறிய மாநிலம். தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் (560) D6).

    • குறியீடு 0.4க்கு கீழ் முன்னேறிய மாநிலம்.
    • குறியீடு 0.4-க்கு மேல், 0.6க்கு கீழ் - பின்தங்கிய மாநிலம்.
    • குறியீடு 0.6 , 0.6-க்கு மேல் - மிகவும் பின்தங்கிய மாநிலம்.

    ரகுராம் ராஜன் அறிக்கையின் படி, கீழே இந்தியாவின், மிக முன்னேறிய மாநிலங்கள், மேல் இருந்து கீழாக:

    மாநிலம் குறியீடு
    கோவா 0
    கேரளா 0.095
    தமிழ்நாடு 0.341
    பஞ்சாப் 0.345
    மகாராஸ்திரா 0.352
    உத்ராகண்ட் 0.383
    ஹரியானா 0.395

    தமிழகத்தின் வேளாண்மைத்துறை

    தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு 21%. வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது. தமிழகத்தின் விவசாயத்துறையின் துறையின் வளர்ச்சி விகிதம் எதிர்த்திசையில் உள்ளது. அதாவது 1991-92 ஆம் ஆண்டில் 1142% ஆக இருந்த விவசாயத்துறை வளர்ச்சி, 2008-09 ல் 265% ஆக உள்ளது

    தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக விவசாயம் உள்ளது. மாநில மக்கள் தொகையில் 70%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஈடுபட்டுள்ளனர்

    தஞ்சை, திரூவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பழங்கள்:

    வாழை மற்றும் மாம்பழம்.தமிழ்நாட்டில் பழங்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

    பழம் இடம்
    வாழை திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வெலி, கன்னியாகுமரி
    மாம்பழம் கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல்
    சப்போட்டா திருநெல்வெலி, ஈரோடு, கரூர்
    திராட்சை தேனி, கோவை
    கொய்யா மதுரை, திண்டுக்கல், வேலூர்

    தமிழ்நாட்டில் விளையும் முக்கிய காய்கறிகள்:

    மரவள்ளிக்கிழங் முருங்கை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் தமிழ்நாட்டில், காய்கறி விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

    காய்கறிகள் விளையும் இடம்
    மரவள்ளிக்கிழங்கு நாமக்கல், சேலம், தருமபுரி தக்காளி கோவை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி
    வெங்காயம் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல்
    கத்தரிக்காய் வேலூர், தேனி, கோவை
    முருங்கை தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர்
    உருளை நீலகிரி, திண்டுக்கல்

    தமிழ்நாட்டில் விளையும் முக்கிய மசாலா பொருட்கள்:

    கருவேப்பிள்ளை, மஞ்சள், கொத்துமல்லி, மிளகாய், புளி

    தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பூக்கள்:

    மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி.

    ஓசூர் நகரிலிருந்து ரோஜா ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது

    வேளாண் உற்பத்தியில் தமிழ்நாடு வகிக்கும் இடம்

    • மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • கரும்பு சாகுபடியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
    • சப்போட்டா உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
    • அரிசி உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உளளது

    கோழிப்பண்ணை உற்பத்தி

    நாமக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் தினமும் 25,00,000 முட்டைகள் லய்பிரியா, பகுரைன், ஆப்கானித்தான், ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மீன்பிடிப்புத்துறை

    மீன் பிடிப்பு, வளர்ப்பு அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுளும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை எனலாம். இது மீனவர்களின் ஒரு நெடுங்கால வாழ்வு முறையும் தொழிலும் அகும்.

    தமிழ்நாடு, 1076 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008 கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டன்கள்

    தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கு 34%. உற்பத்தி துறை என்பது மின்னணுவியல், தானுந்து, நெசவு முதலிய துறைகளை உள்ளடக்கியது.

    மின்னணுவியல்துறை

    தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா (NOKIA) ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள்

    டெல் (DELL), வருடத்தில் தோராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியைச் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து தயாரிக்கிறது.

    சாம்சங் (SAMSUNG) சென்னையில் 2007ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கிறது.

    ஹவாய் (HUAWEI) ரூ. 25 கோடி செலவில் தமிழகத்தில் பூரீபெரும்புதூர் அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சாலையை அமைக்க விருக்கிறது

    வாகன உற்பத்தித்துறை

    சென்னையின் துறைமுக வசதி ஆகிய காரணங்களுக்காகச் சென்னையில் அதிக அளவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் பெருவாரியான வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதால் சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.

    ஹன்டாய் (கொரிய நிறுவனம்) வருடத்தில் 3,30,000 கார்களை (மகிழுந்து) சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து தயாரிக்கிறது. ஹன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களைச் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

    போர்ட் (அமெரிக்க நிறுவனம்) தொழிற்சாலை, ரூபாய் 1700 கோடி முதலீட்டில், சென்னையை அடுத்த மறைமலை நகரில் அமைந்துள்ளது. போர்ட் தொழிற்சாலை ஆண்டுக்கு 100,000 கார்கள் வரை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது.

    ரெனால்ட்-நிச்சான் (பிரான்சு-ஜப்பான் கூட்டு தயாரிப்பு) சென்னை ஓரகடத்தில் ரூபாய் 4,500 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது.

    டைம்லர் பேருந்து தொழிற்சாலை சென்னை ஒரகடத்தில் 425 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது.

    TVS இரு சக்கர வாகன தொழிற்சாலை, ஓசூரில் 174 ஏக்கர் பரப்பரவில் தொழிற்சாலை அமைந்துள்ளது. ராயல் என்பில்டு, யமகா தொழில்சாலைகள் சென்னையில் அமைந்துள்ளன.

    தமிழகத்தில் அமைந்துள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பட்டியல்

    நிறுவனம்இடம்நிறுவப்பட்ட ஆண்டுவாகன இரகம்
    FORDமறைமலைநகர்,காஞ்சிபுரம்1995ஐகான், பியஸ்டா, பிகொ
    HYUNDAIதிருபெரும்புதூர்,காஞ்சிபுரம்1996சன்ட்ரொ, ஐ10, ஐ20, வெர்னா, அக்சென்ட்
    NISSANஒரகடம்,காஞ்சிபுரம்2005டியனா
    BMWசிங்கப்பெருமாள்கோவி2007பியம்டபில்யு 3 வரிசை, பியம்டபில்யூ 5 வரிசை, மினி கன்ட்ரிமன்
    RENAULTஒரகடம், காஞ்சிபுரம்2007லோகன் டஸ்டர் பல்ஸ்
    KOMATSUஒரகடம்200760 பூன் மற்றும் 100 டன் ஆகிய சுரங்க ட்ரக்

    நெசவுத்தொழில்

    பருத்தி, பட்டு போன்றவற்றிலிருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும்

    தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம்.

    திருப்பூர், கரூர், கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கு பெயர்பெற்ற பகுதிகள் ஆகும்

    தமிழ்நாடு மென்பொருள்துறை

    தமிழ்நாட்டில் 934 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன.

    மென்பொருள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு கரநாடகா, மகாராஷடிராவுககு அடுத்து மூன்றாவது பெரிய மாநிலம் ஆகும்.

    2011.2012 ஆம் ஆண்டு, மென்பொருள் ஏற்றுமதி $8.5 பில்லியன் என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. மென்பொருள் ஏற்றுமதி தமிழ்நாட்டில் 2008-09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 பில்லியன் என்று இருந்தது.

    இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் பூங்கா, சிருசேரி, (ராஜீவ் காந்தி சாலை) சென்னையில் உள்ளது. எச்.சி.எல், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், வேரைசன், சி.டி.எஸ், ஜன்சா, கோவன்சிஸ், சத்யம், பாலி டெக்னொலஜிஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் சென்னை நகரில் உள்ளன.

    ராபட் பொச் சி.டி.எஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் கோவை நகரில் உள்ளன. ஹனிவெல் டெக்னொலஜிஸ் மென்பொருள் நிறுவனம் மதுரை நகரில் உள்ளது.

    வணிக செயல்முறை (பிபிஒ) நிறுவனங்கள் ஆகிய சிடெல் இந்தியா, எச்.சி.எல் பிஸ்னஸ் சர்விசஸ், அல்டெக் ஸ்டார், சுதெர்லான்ட் கிலொபல் சர்விசஸ், விப்ரோ முதலியவை சென்னையில் உள்ளன.

    தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள்

    தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் பொது துறை நிறுவனங்கள்.

    1. பாரத மிகு மின் நிறுவனம் - திருச்சி, இராணிப்பேட்டை
    2. பாரத மிகு மின் நிறுவனம் -2013-திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்.
    3. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - 1956 - நிலக்கரி அமைச்சகம்.
    4. மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ்
    5. சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - 1965 - பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.
    6. எண்ணுார் துறைமுகம்
    7. நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன்
    8. பாரதிய நபிகியா வித்யூத் நிகாம் -2003 - அணுசக்தி துறை - சென்னை
    9. இரயில் பெட்டி தொழிற்சாலை

    தமிழ்நாடு மாநில அரசின் பொது துறை நிறுவனங்கள்

    1. தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் நிறுவனம்(TNPL) - 1979
    2. தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (TANCEM) - 1976
    3. இந்தியாவின் சிறப்புமிகு சேலம் இரும்பு உருக்கு ஆலை பொதுத்துறை நிறுவனம் உள்ளது.

    தமிழ்நாடு சுற்றுலா துறை

    தமிழ்நாடு, 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் முதன்மையான சுற்றுலா தளமாகும்.

    தற்போது மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, உலங்கு வானூர்தி சுற்றுலாவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து தனியார் உதவியுடன் ராமேஸ்வரம், கொடைக்கானல், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு உலங்கு வானூர்தியை இயக்க முடிவு செய்யப்பட்டது.

    உள்நாட்டு சுற்றுலா துறை

    2014 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

    வரிசைமாநிலம்எண்ணிக்கை
    தமிழ்நாடு327.6மில்லியன்
    உத்தரபிரதேசம்1828மில்லியன்
    கர்நாடகா118.3மில்லியன்

    வெளிநாட்டு சுற்றுலா துறை

    2014 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலாதுறையினர் வருகா எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கையில் அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

    வரிசைமாநிலம்எண்ணிக்கை
    1தமிழ்நாடு4.66 மில்லியன்
    2மகாராஷ்டிரா4.39 மில்லியன்
    3உத்தர பிரதேசம்2.91 மில்லியன்

    தமிழ்நாடு மலை வாஸ்தலங்கள்:

    நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், டாப்ஸ்லிப், வால்பாறை.

    தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன:

    1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா டாப்ளஸிப் பொள்ளாச்சி
    2. முதுமலை தேசியப் பூங்கா நீலகிரி
    3. முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்,நீலகிரி
    4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா
    5. கிண்டி தேசிய பூங்க

    தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள்:

    1. மாமல்லபுரம் கடற்கரை கோயில்.
    2. பிரகதீசுவரர் ஆலயம், தஞ்சை,
    3. மதுரை மீனாட்சியம்மன் ஆலயம்.

    தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள்:

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்சோலை.

    வருமானம் அடிப்படையில், பழனி முருகன் கோவில் இந்தியாவில், மூன்றாவது பெரியதாகும்.

    தமிழ்நாடு ஆற்றல்துறை

    கல்பாக்கம் அணு உலை, எண்ணுார் அனல்மின் நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவையின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மின் ஆற்றல் திறன் அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய மாநிலம் ஆகும்.

    • ஆற்றல் திறன்(மொத்தம்) - 18382.13 (மேகாவாட்)
    • அனல் மின் நிலையம் ஆற்றல் திறன் - 18382.13 (மேகாவாட்)
    • அணு மின் நிலையம் -52400
    • நீர் மின் நிலையம் - 2,137.20
    • புதுப்பிக்கத் தக்க ஆற்றல் - 7503.60

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC)

    தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் (TASMAC) தமிழக அரசுக்கு 21,680 கோடி ரூபாய் வருமானத்தை 2012-13 ஆண்டில் அளித்தது.டாஸ்மாக் வருவாய் 2013-14 ஆம் ஆண்டு, 23,401 கோடி ரூபாய் ஆகும்.

    தமிழ்நாட்டின் கடன்

    தமிழக அரசின் மொத்த கடன் 2014 - 15 ஆண்டு இறுதியில், 1.81 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 1921 சதவீதம்

    2016 ஆம் ஆண்டு இறுதியில், திருப்பி செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு, 2.11 லட்சம் கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 1924 சதவீதம் ஆகும்.

    மற்ற மாநிலங்களில் மொத்த உற்பத்தி-கடன் சதவிதம் பின்வறுமாறு. ஆந்திராவில் 25.05% கர்நாடகாவில் 23.61% கேரளாவில் 26.95% மேற்குவங்கத்தில் 32.61 சதவீதமாக கடன் உள்ளது, ஆனால், தமிழகத்தில் கடன், 1923 சதவீதமாகவே உள்ளது.

Share with Friends