Easy Tutorial
For Competitive Exams

Science QA 6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் இயல் ஒன்று-தமிழ்த்தேன் TNPSC,CCSE,TNUSRB Notes

இயல் ஒன்று - தமிழ்த்தேன்

1.கவிதைப்பேழை - இன்பத்தமிழ்

சொல்லும் பொருளும்

1. நிருமித்த - உருவாக்கிய
2. விளைவு - விளைச்சல்
3. சமூகம் - மக்கள் குழு
4. அசதி - சோர்வு

நூல் வெளி :

• பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
• பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயைரப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
• தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைள உள்வாங்கிப் பாடியுள்ளார்.
• எனேவ, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
• இவைரப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

58145.ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்
சமூகம்
நாடு
வீடு
தெரு
58146.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ------ ஆக இருக்கும்
மகிழ்ச்சி
கோபம்
வருத்தம்
அசதி
58147.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
நிலயென்று
நிலவென்று
நிலவன்று
நிலவுஎன்று
58148.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
தமிழங்கள்
தமிழெங்கள்
தமிழுங்கள்
தமிழ்எங்கள்
58149.அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அமுது + தென்று
அமுது + என்று
அமுது + ஒன்று
அமு + தென்று
58150.செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து
செம்மை + பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
செம்பு + பயிர்
58151.இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.
a) விளைவுக்கு - பால்
b) அறிவுக்கு - வேல்
c) இளமைக்கு - நீர்
d) புலவர்க்கு - தோள்
3 4 1 2
1 2 3 4
3 2 1 4
4 2 3 1

2.கவிதைப்பேழை - தமிழ்க்கும்மி

சொல்லும் பொருளும்

1.ஆழிப் பெருக்கு - கடல் கோள்
2.ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
3.மேதினி - உலகம்
4.உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை

நூல் வெளி :

• பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
• இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்கைள இயற்றியுள்ளார்.
(short tricks : நூறு கொய்யா கனி கொத்தா இருக்கு)
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கைள நடத்தினார்.
• தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.
• இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
• இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது.
• இது தமிழுணர்வு நிறைந்த பாடல்கைளக் கொண்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

58152.தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்
பன்மை
மேன்மை 
பொறுமை
சிறுமை
58153.தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
மேதினி
நிலா
வானம்
காற்று
58154.செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______
செந் + தமிழ்
செம் + தமிழ்
சென்மை + தமிழ்
செம்மை + தமிழ்
58155.பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
பொய் + அகற்றும்
பொய் + கற்றும்
பொய்ய + கற்றும்
பொய் + யகற்றும்
58156.பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________
பாட்டிருக்கும்
பாட்டுருக்கும்
பாடிருக்கும்
பாடியிருக்கும்
58157.எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________
எட்டுத்திசை
எட்டிதிசை
எட்டுதிசை
எட்டிஇசை

3. உரைநடை உலகம் - வளர்தமிழ்

மனிதரைப் பிற உயிர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது மொழி .
உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.

பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார் :
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.

மூத்தமொழி :
தமிழ்த்தாயின் தொன்மையைப் பாரதியார் :
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்.

• மி்கப்பழமையான நூல் - தொல்காப்பியம்

• எளிய மொழி :தமிழ் எழுத்து்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
(எ.கா.)
வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள் - ட , ய, ழ

சீர்மை மொழி : சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.
உயர்திணை என்பதன் எதிர்சொல் அஃறிணை என்று பெயரிட்டனர் நம் முன்னோர்.
உயர்திணையின் எதிர்சொல் தாழ்திணை என அமைய வேண்டும்
அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை)
பாகற்காய் (பாகு + அல் + காய்)

வளமை மொழி : பூவின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள் தமிழில் உண்டு.
(அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.)

• தொல்காப்பியம், நனனூல் - இலக்கண நூல்கள்.
• எட்டுத்தொகை, பத்துப்பாட்டு - சங்க இலக்கியங்கள்;
• திருக்குறள், நாலடியார் - அறநூல்கள்.
• சிலப்பதிகாரம், மணிமேகலை - காப்பியங்கள்.

• ‘மா’ – மரம், விலஙகு,பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு

வளர் மொழி : முத்தமிழ் - இயல்தமிழ் ,இசைத்தமிழ், நாடகத்தமிழ்
இயல்தமிழ் - எண்ணத்தை வெளிப்படுத்தும்
இசைத்தமிழ் - உள்ளத்தை மகிழ்விக்கும்
நாடகத்தமிழ் - உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
• தமிழ்க் கவிதை வடிவங்கள் : துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செயயுள்.
• உரைநடை வடிவங்கள் : கட்டுரை, புதினம், சிறுகதை.

• புதுமை மொழி : புதியகலைச்சொற்கள் - இணையம் ,முகநூல் ,புலனம் ,குரல் தேடல் ,தேடு பொறி,செயலி,தொடுதிரை.
மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்கள் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்
• தொல்காப்பியம், நன்னூல் - கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச்சொற்கள்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

58158.‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________
புதுமை 
பழமை
பெருமை 
சீர்மை
58159.‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்______
இடன் + புறம்
இடது + புறம்
இட + புறம்
இடப் + புறம்
58160.‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்_________
சீர் + இளமை
சீர்மை + இளமை
சீரி + இளமை
சீற் + இள
58161.சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
சிலம்பதிகாரம்
சிலப்பதிகாரம்
சிலம்புதிகாரம்
சில பதிகாரம்
58162.கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
கணினிதமிழ்
கணினித்தமிழ்
கணிணிதமிழ்
கனினிதமிழ்
58163.“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
58164.மா என்னும் சொல்லின் பொருள்________
மாடம்
வானம்
விலங்கு
அம்மா

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்கள்அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

4. விரிவானம் - கனவு பலித்தது (கடிதம்)

சதிஷ்தவான் (1972ம் ஆண்டைய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தலைவர்) ஆய்வு மையம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர் - தொல்காப்பியர்

கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் - என அறிவியல் செய்திகளை குறிப்பிடும் நூல்கள் - முல்லைப்பாட்டு, பரிபாடல் ,திருக்குறள், கார் நாற்பது, திருப்பாவை
(Short Tricks : முல்லை பரித்து குற(ள்)வன் கார்ஏறிச்சென்று பாவைக்கு கொடுத்தான்.)

"ஆழ அமுக்கி முக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி" - இப்பாடலை இயற்றியவர் - ஔவையார்

வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை நற்றிணை என்னும் நூல் குறிப்பிடுகிறது.

தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என நிரூபித்த அறிஞர் - கலிலியோ கலிலி .இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" - என ஐம்பூதங்களை பற்றி குறிப்பிடும் நூல் - தொல்காப்பியம்

"கடல்நீர் முகுந்த கமஞ்சூழ் எழிலி" - எனும் பாடல் இடம் பெற்ற நூல் - கார் நாற்பது
"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" - எனும் பாடல் இடம் பெற்ற நூல் - பதிற்றுப்பத்து
(Short Tricks : புண்ணுக்கு பத்து போடனும்)

"எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்" - எனும் பாடல் இடம் பெற்ற நூல் - நற்றினை

"தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்" - என்ற பாடலை இயற்றியவர் - கபிலர்

தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் :

மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு - அப்துல் கலாம்
இஸ்ரோ அறிவியல் அறிஞர் - மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோவின் தலைவர் - சிவன்

5. கற்கண்டு - தமிழ் எழுத்துகளின் வகை தொகை

தமிழ் மொழியின் இலக்கண வகைகள் - 5
• எழுத்து இலக்கணம்
• சொல் இலக்கணம்
• பொருள் இலக்கணம்
• யாப்பு இலக்கணம்
• அணி இலக்கணம்

ஒலி வடிவாக எழுதப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படும்.

வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.

அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன. (குறில் எழுத்துகள்)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன. (வநடில் எழுத்துகள்.)

மாத்திரை என்பதன் பொருள் - கால அளவு

குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 2 மாத்திரை

மெய் என்பதன் பொருள் - உடம்பு
மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை

ஆயுத எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு - அரை மாத்திரை

மெய் எழுத்துக்கள் பன்னிரண்டும் வல்லினம் , மெல்லினம், இடையினம் என பிரிக்கப்படுகிறது.

வல்லினம் - க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்

'கபிலர்' என்னும் சொல்லின் மாத்திரை அளவு - 3 1/2 மாத்திரை

.உயிர்மெய் எழுத்துகளை உயிர்மெய்க் குறில்,உயிர்மெய் நெடில் என இரு வகைப்படுத்தலாம்.

பழமொழியின் சிறப்பு சுருங்கச் சொல்வது
நோயற்ற வாழ்வைத் தருவது சுத்தம்
உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை.

வலஞ்சுழி - Clock Wise
இடஞ்சுழி - Anti Clock Wise
இணையம் - internet

Search Engine - தேடுபொறி
Voice Search - குரல்தேடல்
Touch Screen - தொடுதிரை

Share with Friends