Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் Notes - சமச்சீர்க் கல்வி 10 ஆம் வகுப்பு தமிழ் இயல் ஒன்று - அமுத ஊற்று TNPSC,CCSE,TNUSRB Notes

இயல் ஒன்று - அமுத ஊற்று

1.கவிதைப்பேழை

அன்னை மொழியே
     - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

* அன்னை மொழியே பாடலின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
* தென்மொழி, தமிழச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழுணர்வைப் பரப்பியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
* பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
* தமிழின் கருவூலமாக அமைந்த பெருஞ்சித்திரனாரின் படைப்பு திருக்குறள் மெய்ப்பொருளுரை .
* பாடப்பகுதியில் உள்ள பாடசிகள் இடம் பெற்றுள்ள தலைப்பு தமிழ்த்தாய் வாழ்த்து முந்துற்றோம் யாண்டும் .
* 'தென்னன்' என்னும் சொல் பாண்டிய மன்னனைக் குறிக்கிறது .
* பாடலில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர் சிலப்பதிகாரம், மணிமேகலை.

பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் :
*உலகியல் நூறு
*பாவிக்கொத்து
*நூறாசிரியம்
*கனிச்சாறு
*எண்சுவை எண்பது
*மகபுகுவஞ்சி
*பள்ளிப் பறவைகள்.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேணடும்.
          - க. சச்சிதானந்தன்


2.உரைநடை உலகம்

தமிழ்ச்சொல் வளம்
     - தேவநேயப் பாவாணர்

* ''நாடும் மொழியும் நமகிரு கண்கள் என்று பாடியவர் மகாகவி பாரதியார்.
* திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் கால்டுவெல்
* மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர்
* தமிழ்சொல் வளம் என்னும் கட்டுரை `சொல்லாய்வுக்கட்டுரைகள்` என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.


தமிழ்த்திரு இரா.இளங்குமரனார் :
*இவர் தமிழாசிரியர்;
*நூலகப் பணிகளை விரும்பிச் செய்பவர்;
*சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.
*திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்;
*பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர்;
*தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்;
*தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர்.
*தமிழ்த் தென்றல் திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்;

இவர்தம் தமிழ்ப் பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகள் :
*இலக்கண வரலாறு
*தமிழிசை இயக்கம்
*தனித்தமிழ் இயக்கம்
*பாவாணர் வரலாறு
*குண்டலகேசி உரை
*யாப்பருங்கலம் உரை
*புறத்திரட்டு உரை
*திருக்குறள் தமிழ் மரபுரை
*காக்கைப் பாடினிய உரை
*தேவநேயம்

*அவர்தான் உலகப் பெருந்தமிழர் தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்.

அடி வகை :
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
*தாள் : நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
*தண்டு : கீரை,வழை முதலியவற்றின் அடி
*கோல் : நெட்டி,மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
*தூறு : குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
*தட்டு அல்லது தட்டை : கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
*கழி : கரும்பின் அடி
*கழை: மூங்கிலின் அடி
*அடி : புளி, வேம்பு முதலியவற்றின் அடி.

கிளைப்பிரிவுகள் :
*கவை: அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை;
*கொம்பு அல்லது கொப்பு: கவையின் பிரிவு:
*கிளை: கொம்பின் பிரிவு:
*சினை: கிளையின் பிரிவு:
*போத்து: சினையின் பிரிவு;
*குச்சு: போத்தின் பிரிவு;
*இணுக்கு: குச்சியின் பிரிவு.

காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல் :
*சுள்ளி: காய்ந்த குச்சு (குச்சி);
*விறகு: காய்ந்த சிறுகிளை;
*வெங்கழி: காய்ந்த கழி;
*கட்டை: காய்ந்த கொம்பும் கவையும் அடியும்.

இலை வகை :
*இலை: புளி, வேம்பு முதலியவற்றின் இலை;
*தாள்: நெல்,புல் முதலியவற்றின் இலை;
*தோகை: சோளம், கரும்பு முதலியவற்றின் இலை;
*ஓலை: தென்னை , பனை முதலியவற்றின் இலை;
*சண்டு: காய்ந்த தாளும் தோகையும்;
*சருகு: காய்ந்த இலை.

கொழுந்து வகை.
*துளிர் அல்லது தளிர்: நெல், புல் முதலியவற்றின் கொழுந்து; *முறி அல்லது கொழுந்து: புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து;
*குருத்து : சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து;
*கொழுந்தாடை: கரும்பின் நுனிப்பகுதி.

பூவின் நிலைகள் :
*அரும்பு: பூவின் தோற்றநிலை;
*போது: பூவிரியத் தொடங்கும் நிலை;
*மலர்(அலர்); பூவின் மலர்ந்த நிலை;
*வீ: மரஞ்செடியினின்று பூ கீழேவிழுந்த நிலை;
*செம்மல்: பூ வாடின நிலை.

பிஞ்சு வகை :
*பூம்பிஞ்சு: பூவோடு கூடிய இளம்பிஞ்சு;
*பிஞ்சு: இளம் காய்;
*வடு: மாம்பிஞ்சு;
*மூசு: பலாப்பிஞ்சு;
*கவ்வை: எள்பிஞ்சு;
*குரும்பை: தென்னை , பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு;
*முட்டுக் குரும்பை: சிறு குரும்பை:
*இளநீர்: முற்றாத தேங்காய்;
*நுழாய்: இளம்பாக்கு;
*கருக்கல்: இளநெல்;
*கச்சல்: வாழைப்பிஞ்சு.

குலை வகை :
*கொத்து: அவரை, துவரை முதலியவற்றின் குலை;
*குலை: கொடி முந்திரி போன்றவற்றின் குலை;
*தாறு: வாழைக் குலை;
*கதிர்: கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்;
*அலகு அல்லது குரல்: நெல், தினை முதலியவற்றின் கதிர்; சீப்பு: வாழைத் தாற்றின் பகுதி.

கெட்டுப்போன காய்கனி வகை :
*சூம்பல்: நுனியில் சுருங்கிய காய்;
*சிவியல்: சுருங்கிய பழம்;
*சொத்தை: புழுபூச்சி அரித்தகாய் அல்லது கனி;
*வெம்பல்: சூட்டினால் பழுத்த பிஞ்சு;
*அளியல்: குளுகுளுத்த பழம்;
*அழுகல்: குளுகுளுத்து நாறிய பழம் அல்லது காய்;
*சொண்டு: பதராய்ப் போன மிளகாய்.
*கோட்டான் காய் அல்லது கூகைக்காய்: கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்;
*தேரைக்காய்: தேரை அமர்ந்ததினால் கெட்ட காய்;
*அல்லிக்காய் : தேரை அமர்ந்ததினால் கெட்ட தேங்காய்;
*ஒல்லிக்காய்: தென்னையில் கெட்ட காய்.

பழத்தோல் வகை :
*தொலி: மிக மெல்லியது;
*தோல்: திண்ணமானது;
*தோடு: வன்மையானது;
*ஓடு: மிக வன்மையானது;
*குடுக்கை: சுரையின் ஓடு;
*மட்டை: தேங்காய் நெற்றின் மேற்பகுதி;
*உமி: நெல்,கம்பு முதலியவற்றின் மூடி;
*கொம்மை: வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி.

மணிவகை :
*கூலம்: நெல்,புல் (கம்பு) முதலிய தானியங்கள் ;
*பயறு: அவரை, உளுந்து முதலியவை;
*கடலை: வேர்க்கடலை, கொண்டைக்கடலை முதலியவை;
*விதை: கத்தரி, மிளகாய் முதலியவற்றின் வித்து;
*காழ்; புளி, காஞ்சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து:
*முத்து: வேம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து;
*கொட்டை: மா, பனை முதலியவற்றின் வித்து;
*தேங்காய்: தென்னையின் வித்து;
*முதிரை: அவரை, துவரை முதலிய பயறுகள்.

இளம் பயிர் வகை :
*நாற்று: நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை;
*கன்று: மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை;
*குருத்து: வாழையின் இளநிலை;
*பிள்ளை: தென்னையின் இளநிலை;
*குட்டி: விளாவின் இளநிலை,
*மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை;
*பைங்கூழ்: நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.

கூலம் என்பதன் பொருள் தானியம்.

"உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே.
மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே".
         - பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்


3.கவிதைப்பேழை

இரட்டுற மொழிதல்
     - சந்தக்கவிமணி தமிழழகனார்.

* தமிழ் இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
*தமிழ் முதல் இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது
*தமிழ் ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது
*கடல் முத்தினையும், அமிழ்தினையும் தருகிறது.
*கடல் தரும் மூன்று வகையான சங்குகளின் பெயர்கள் வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகும்
*கடல் தன் அலைகளால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.
*ஒரு சொல்லோ, சொற்றொரோ இருபொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும்
*இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர் சிலேடை அணி ஆகும்.
*தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
*தமிழழகனாரின் சிறப்புப்பெயர் சந்தக்கவிமணி
*தமிழழகனார் இயற்றிய சிற்றிலக்கிய நூல்களின் எண்ணிக்கை பன்னிரண்டு
*சிலேடை பயன்படுத்தப்படும் இடங்கள் செய்யுள், உரைநடை ,மேடைப்பேச்சு ஆகியன ஆகும்

சொல்லும் பொருளும்:
1.துய்ப்பது - கற்பது,தருதல்
2.மேவலால் - பொருந்துதல்,பெறுதல்


4.விரிவானம்

உரைநடையின் அணிநலன்கள்
     - எழில் முதல்வன்.

* முதலில் உருவாக்கப்பட்ட தமிழ்க் கணினி பெயர் திருவள்ளுவர்.
* முதல் தமிழ்க் கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு 1983.
* திருவள்ளுவர் கணினியை உருவாக்கியம் நிறுவனம் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் நிறுவனம்
* குறிஞ்சி மலர் என்னும் நூலின் ஆசிரியர் நா. பார்த்தசாரதி
* எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் 'இணை ஒப்பு' என்கிறோம்.
* 'மழையும் புயலும் ' என்னும் நூலின் ஆசிரியர் அ. ராமசாமி
* அஃறிணைப் பொருள்களை உயர்திணையாகவும், உயர்திணைப் பொருள்களை அஃறிணையாகவும் கூறுவதனை இணையத்தமிழன் இலக்கணை' என்கிறான்
* மலைவளம் படைத்த பழம்பதி என அழைக்கப்படுவது திருக்குற்றாலம்.
* தமிழின்பம் என்னும் நூல் ஆசிரியர் சொல்லின் செல்வர் இரா.பி.சே.
* நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் மு.வரதராசனார் .
* உண்மையின் முரண் படாத - மெய்ம்மையைச் சொல்வது 'முரண்படு மெய்ம்மை ' எனப்படும்
* முரண்பட்ட சொற்களைச் சேர்ந்து எழுதுவது சொல்முரண் என்கிறாம்.
* சொல்லும் முறையில் அசத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவது எதிரிணை இசைவு என்கிறோம்
* எழில் முதவன் எழுதிய நூலின் பெயர் புதிய உரைநடை
* எழில் முதல்வனின் இயற்பெயர் மா. இராமலிங்கம்
* எழில் முதல்வன் புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார்
* எழில் முதல்வன் குடந்தை அரசு ஆடவர் கல்லாரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராக பணிசெய்தார்.


5.கற்கண்டு

எழுத்து, சொல்

* சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்
*அளயெடுத்தல் என்றால் நீண்டு ஒலித்தல் என்ற பொருள்படும்
*அளபெடை இரண்டு வகைப்படும்.
*உயிரளபெடை மூன்று வகைப் படும்.
*செய்யுளின் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய மொழிக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெடுத்துகள் அளபெடுப்பது உயிரளபெடை ஆகும்
*செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தளைச் செய்யுளிசை அளபெடை என்கிறோம்.
*செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.
*செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
*செய்யுளின் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்
*செய்யுளில் ஓசை குறையும் போது ஆய்த எழுத்து அளயெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
*ஓர் எழுத்து தனித்தோ , பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும்.
*திணை அஃறிணை, உயர்திணை என இரு வகைப்படும்.
*பால் ஐந்து வகைப்படும்.
*ஆண்பால், பெண்பால் , பலர் பால் எண்பன உயர்திணையைக் குறிக்கும் ,
*ஒன்றன் பால், பலவின் பால் என்பன அஃறிணையைக் குறிக்கும்
*தன்மை , முன்னிலை, படர்கை என்பன மூவிடங்களாகும்.
*மொழி மூன்று வகைப்படும்.
*ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்
*இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும் ,
*தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும் ,
*ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது தொழிற்பெயர் எனப்படும்,
*வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிபெயர் விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும்,
*எதிர்மறைப் பொருளில் வரும் தொழிற்பெயர் எதிர் மறைத் தொழிற்பெயர் ஆகும்.
*விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற்பெயராகும் .
*விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்
*ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும்
*வினையாலணையும் பெயர் தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்
*தொழிற்பெயர் படர்கதை இடத்திற்கே உரியது .
*வினையாலணையும் பெயர் மூவிடத்திற்கும் உரியது,
*வினையாலணையும் பெயர் காலம் காட்டும்.
*தொழிற்பெயர் காலம் காட்டாது .

Share with Friends