Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2022 Page: 2
58857.'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
தாலாட்டுப்பாட்டு
கும்மிப் பாட்டு
பள்ளுப்பாட்டு
வில்லுப் பாட்டு
விடை தெரியவில்லை
58858.'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்
நல்லாதனார்
ஒட்டக்கூத்தர்
காளமேகப் புலவர்
குமரகுருபரர்
விடை தெரியவில்லை
58859.'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர்
பாரதிதாசன்
அழகிய சொக்கநாதப் புலவர்
காளமேகப்புலவர்
புதுமைப்பித்தன்
விடை தெரியவில்லை
58860.'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?
அர்ச்சுனன்
தருமன்
சகாதேவன்
நகுலன்
விடை தெரியவில்லை
58861."உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
உ.வே. சாமிநாதனார்
திரு.வி. கலியாண சுந்தரனார்
ஆறுமுக நாவலர்
விடை தெரியவில்லை
58862.சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
(c) "அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்
அனைத்தும் சரி
(a), (b) சரி
(a), (c), (d) சரி
அனைத்தும் தவறு
விடை தெரியவில்லை
58863.

கூற்று 1 : சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

கூற்று 1 மட்டும் சரி
கூற்று 2 மட்டும் சரி
கூற்று இரண்டும் சரி
கூற்று இரண்டும் தவறு
விடை தெரியவில்லை
58864."வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்" - திருக்குறள் உணர்த்தும் கருத்து.
ஏற்றுமதி
ஏமாற்றுதல்
நேர்மை
முயற்சியின்மை
விடை தெரியவில்லை
58865.

கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று

கூற்று 2 :ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

கூற்று 1 மட்டும் சரி
கூற்று 2 மட்டும் சரி
கூற்று 1ம் கூற்று 2ம் சரி
கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
விடை தெரியவில்லை
58866. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?
வாணிதாசன்
பாரதிதாசன்
சுரதா
பாரதியார்
விடை தெரியவில்லை
58867.'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
ஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
நல்வழி
மூதுரை
விடை தெரியவில்லை
58868. பொருத்துக.
(a)மதியாதார் முற்றம்1. கூடுவது கோடிபெறும்
(b) உபசரிக்காதார் மனையில்2.மிதியாமை கோடிபெறும்
(c) குடிபிறந்தார் தம்மோடு3.சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்'
(d) கோடானு கோடி கொடுப்பினும்4. உண்ணாமை கோடிபெறும்
3 4 2 1
2 4 1 3
2 3 1 4
1 2 3 4
விடை தெரியவில்லை
58869.தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
ஆகஸ்டு ஒன்றாம் நாள்
டிசம்பர் பதினைந்தாம் நாள்
விடை தெரியவில்லை
58870.இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு______நூலாகும்.
இரட்டைமணிமாலை
மும்மணிக்கோவை
தெய்வமணிமாலை
மனுமுறைகண்டவாசகம்
விடை தெரியவில்லை
58871.'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
சிங்கவல்லி
கீழாநெல்லி
குப்பைமேனி
வல்லாரை
விடை தெரியவில்லை
58872.'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்
தொல்காப்பியம்
மதுரைக்காஞ்சி
பட்டினப்பாலை
பதிற்றுப்பத்து
விடை தெரியவில்லை
58873.பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்
பட்டினப்பாலை
தொல்காப்பியம்
குறிஞ்சிப்பாட்டு
திருக்குறள்
விடை தெரியவில்லை
58874.ஆற்றூர் பேச்சு வழக்கில்______என மருவியுள்ளது.
ஆம்பூர்
அரூர்
அரசூர்
ஆத்தூர்
விடை தெரியவில்லை
58875.பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
எம்.ஜி.இராமச்சந்திரன்
மூதறிஞர் இராஜாஜி
பெருந்தலைவர் காமராசர்
கலைஞர் கருணாநிதி
விடை தெரியவில்லை
58876.தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்
வீரமாமுனிவர்
கால்டுவெல்
ஜி.யு. போப்
தேவநேயப்பாவாணர்
விடை தெரியவில்லை
Share with Friends