Easy Tutorial
For Competitive Exams

Science QA பூமியும் பேரண்டமும்(Earth and the universe) புவியின் வளிமண்டல அழுத்த மண்டலங்கள் - Notes

வளிமண்டலம்

வளிமண்டல அழுத்த மண்டலங்கள்

* வளிமண்டல அழுத்தம் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்புள்ள புவியின் மேற்பரப்பின் உயரே உள்ள மொத்தக் காற்றின் எடை 1 கிராம் ஆகும். புவியைச் சுற்றியுள்ள காற்றின் எடை முழுவதும் புவியின் மேற்பரப்பை அழுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அழுத்தத்தையே காற்று அழுத்தம் என்கிறோம்.


*காற்று அழுத்தம் அழுத்தமானி என்ற கருவியால் அளக்கப்படுகிறது. காற்றின் அழுத்தம் மில்லிபார் என்ற அலகின் மூலம் குறிக்கப்படுகிறது.


*கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தத்தின் அளவு சராசரியாக 1013 மில்லிபார்களாக உள்ளது. பூமியின் மீது சமமான காற்று அழுத்தம் உள்ள பல்வேறு இடங்களை இணைக்கும் கற்பனைக்கோடுகள் சம அழுத்தக் கோடுகள் ஆகும்.


காற்றழுத்தப் பரவல்:

*காற்றின் அழுத்தம் எல்லா இடங்களிலும் மாதிரியாக இருப்பதில்லை.
*இரண்டு காரணங்களால் காற்றழுத்தப் பரவல் மாறுபடுகிறது. அவையாவன.
1. உயரம்
2. வெப்பம்

உயரம் :
*ஓர் இடத்தின் காற்றழுத்தம் என்பது அந்த இடத்தில் உள்ள காற்றின் எடையைக் குறிப்பதாகும். கடல் மட்டத்திற்கு மேல் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அமைந்துள்ள ஒரு இடத்தின் காற்றின் அழுத்தம் அந்த இடத்தின் கடல் மட்டத்திற்கு மேலுள்ள காற்றின் அழுத்தத்தை விட குறைவாக இருக்கும்.


*எ.கா. நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள உதக மண்டலம் கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் அமைந்துள்ளது. உதகமண்டலத்தின் காற்றின் அழுத்தம், கடல் மட்டத்தின் மேலுள்ள மொத்தக்காற்றின் எடையிலிருந்து 2000மீ உயரமுள்ள காற்றின் எடையைக் கழித்துக் கிடைப்பது ஆகும்.


*கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லும்போது காற்றின் அழுத்தம் ஒரே சீராகக் குறைந்து கொண்டே வருகிறது.

*ஒவ்வொரு 10 மீ உயரத்திற்கு, 1 மில்லி பார் வீதம் அழுத்தம் குறைந்து கொண்டே செல்கிறது.


2. வெப்பம் :
*பொதுவாக பொருள்கள் வெப்பம் அடையும் போது, விரிவடையும் தன்மை கொண்டது.எனவே அது போலவே காற்று வெப்பத்தினால் விரிவடைகிறது. எனவே காற்று விரிவடைந்து உயரே செல்கிறது.
*வெப்பம் குறையும் பொழுது பொருட்கள் சுருங்கும் தன்மை கொண்டது. எனவே குளிர்ச்சியான இடங்கள் காற்று குளிர்ச்சி அடைந்து, சுருங்கி, அடர்த்தி, அதிகமாக, கனமாகக் காணப்படுகிறது. - எனவே குளிர்ச்சியான இடங்களில் காற்றின் அழுத்தம் அதிகமாக காணப்படும்.
*வளிமண்டலத்தின் காற்றின் அழுத்தம் ஒரே மாதிரியாகக் காணப்படுவதில்லை என்பதையும், சில இடங்களில் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாகும் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.எனவே வளிமண்டலத்தில் காணப்படும் காற்றின் அழுத்தத்தை அதிக அழுத்தம், குறைந்த அழுத்தம் என இருவகையாகப் பிரிக்கலாம்.
*புவியின் மேற்பரப்பை ஒட்டியுள்ள வளி மண்டலத்தில் காணப்படும் காற்றழுத்த வேறுபாடுகளைக் கொண்டு புவியை 4 பெரும் காற்றழுத்த மண்டலங்களாகப் பிரிக்கலாம். அவை,
1. பூமத்திய ரேகை குறைந்த அழுத்த மண்டலம் (Equatorial Low Pressure)
2. துணை வெப்ப அதிக அழுத்த மண்டலம் (Sub Tropical High Pressure)
3. துணை துருவ குறைந்த அழுத்த மண்டலம் (Sub Polar low pressure)
4. துருவ அதிக அழுத்த மண்டலம் (Polar High Pressure)


1. பூமத்திய ரேகை குறைந்த அழுத்த மண்டலம் (Equator Low Pressure) :

* இந்த மண்டலம் 0 ° முதல் 5° வட மற்றும் தென் அட்சம் வரை பரவியுள்ளது. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் சூரியனுடைய ஒளி கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.
* செங்குத்துக் கதிர்கள் சாய்வான கதிர்களை விட அதிக வெப்பத்தை அளிக்கும். அதனால் பூமத்திய ரேகை பகுதி அதிக வெப்பமாக உள்ளது எனவே பூமத்தியரேகைப் பகுதியில் உள்ள காற்றும், அதிக வெப்பமடைந்து விரிவடைகிறது. எனவே அடர்த்திக் குறைந்து, குறைந்த அழுத்தம் ஏற்படுகிறது. எனவே தான் பூமத்திய ரேகை "அமைதி மண்டலம் "அழைக்கப்படுகிறது.
* இப்பகுதியில் தினமும் 3 PM. அளவில் மழை பெய்யும். (Convectional rainfall)


2. துணை வெப்ப அதிக அழுத்த மண்டலம்:

* இது புவியின் வட மற்றும் தென் அரைக்கோளங்கள் 30° அட்சத்திலிருந்து 35 ° அட்சம் வரை காணப்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில் காற்று விரிவடைந்து, லேசாகி உயரே செல்கிறது. இவ்வாறாக மேலெழும்பும் காற்று, பூமத்தியரேகையின் வடபுறம் வடக்காகவும், தென்புறம் தெற்காகவும் புவியின் சுழற்சி காரணமாக திரும்புகிறது.
*இக்காற்று விண்ணுயர் பகுதிகளை அடைந்தவுடன் குளிர்வடைந்து சுருங்கி வட மற்றும் தென் அட்சங்களில் கீழிறங்குகிறது. எனவே இப்பகுதிகளில் அடர்த்தி அதிகரிக்கிறது .எனவே இப்பகுதிகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.


3. துணை துருவ குறைந்த அழுத்த மண்டலம் (Sub Polar low pressure) :

*இது வட மற்றும் தென் அரைக் கோளத்தில் 60° முதல் 65° அட்சம் வரை அமைந்துள்ளது.
*இதனால் துணை வெப்ப அதிக அழுத்த மண்டலத்திற்கும், துருவ அதிக அழுத்த மண்டலத்திற்கும், இடையே உள்ள துணை துருவ மண்டலத்தில் குறைந்த அழுத்தம் காணப்படுகிறது.


4. துருவ அதிக அழுத்த மண்டலம் :

*வட மற்றும் தென் துருவப் பகுதிகளில் மிகக்குறைந்த வெப்பம் காரணமாக, அங்குள்ள காற்று குளிர்ச்சியாக அடர்த்தி மிகுந்து காணப்படுவதால் வட மற்றும் தென் துருவங்களில் அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது.

Share with Friends