Easy Tutorial
For Competitive Exams

Science QA பூமியும் பேரண்டமும்(Earth and the universe) புவியின் அமைப்பு - Notes

புவி மற்றும் அண்டம் - சூரியக் குடும்பம்

புவியின் அமைப்பு

*பூமி, புவி, உலகம், உலகு, ஞாலம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது இந்தப் பூமிக்கோளம்.



*பூமியின் கிடைவசமாக அல்லது கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக் கோட்டிற்கு அட்சக்கோடு (latitude) என்று பெயர்.
*பூமியில் செங்குத்தாக அல்லது தெற்கு வடக்காகச் செல்லும் கோட்டிற்குத் தீர்க்கக்கோடு (longitude) என்று பெயர்.
*பூமியின் மையத்தில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு நிலநடுக்கோடு (Equator) (அ) பூமத்திய ரேகை எனப்படும்.


*பூமியின் மொத்தக் கோண அளவு 360° ஆகும்.
*நிலநடுக்கோடு 0° அட்சக்கோடாக அமைகிறது. இது முக்கிய அட்சக்கோடு.
*0° அட்சக் கோட்டுக்கு வடக்கே உள்ள பூமிப்பரப்பை வட அரைக்கோளம் என்பர்.
*தெற்கே பூமிப்பரப்பை தென்கோளம் என்பர்.



கிரின்விச் தீர்க்கக்கோடு:

*இலண்டனில் உள்ள கிரீன்விச் என்கிற இடத்தில் ஒரு வானவியல் ஆராய்ச்சிக் கூடம் அமைந்துள்ளது. அதன் வழியே செல்லும் தீர்க்கக்கோடு 0° தீர்க்கக்கோடு ஆகும். அதைக் கிரின்விச் தீர்க்கக் கோடு என்றும் கூறுவர்.



* முதன்முதலாக வரைபடத்தில் அட்சக் கோடு, தீர்க்கக்கோடுகளை வரைந்தவர் டாலமி ஆவார்.
* கி.பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வானவியல் அறிஞர்.


*நிலநடுக்கோடு பகுதியில் ஆண்டு முழுவதும் இரவும், பகலுமாக (12 மணி நேரம்) இருக்கும்.

*கடகரேகை, மகாரேகை, பூமத்திய *கோடு மூன்றும் செல்லும் கண்டம் -ஆப்பிரிக்கா
*இரு முக்கிய அட்சக்கோடுகள் மட்டும் செல்லும் நாடு - பிரேசில்
*இந்தியாவில் செல்லும் முக்கிய அச்சக்கோடு - கடகரேகை


பூமியின் உள்ளமைப்பு :

* புவி மூன்று அடுக்குகளாக அல்லது ஒடுகளாக உள்ளது.
* பூமி (உள்ளமைப்பு) அமைப்புப் பற்றிய கோட்பாட்டை முதலில் உருவாக்கியவர் ஐசக் நியூட்டன் ஆவர்.



*பூமியின் மேற்பகுதியை உட்கருவத்தோடு ஒப்பிடும் பொழுது மிக மெலிதான பகுதியாகக் காணப்படுகிறது.
*பொருட்களின் கட்டமைப்பு மற்றும் பண்புகளின் அடிப்படையில் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. மேலோடு(Crust)
2. கவசம் (Mantle)
3. கருவம் (Core) ஆகும்.


மேலோடு : (Crust)

*பூமியின் மேற்பரப்பு மேலோடு அல்லது நிலக்கோளம் என அழைக்கப்படுகிறது.
*கண்டத்தின் மேல் அடுக்கானது சியால் என்று அழைக்கப்படுகிறது.


*சியால் - சிலிக்கா + அலுமினியம்

*கடலடி மேலோடு பசால்ட் அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிமா என்று அழைக்கப்படுகிறது.


*சிமா - சிலிக்கா + மெக்னீசியம்




*பூமியின் மேலோடு கண்டப்பகுதியில் தடிமனாகவும் மற்றும் கடல் பகுதியில் மெலிதாகவும் உள்ளது.
*சியால் அடுக்கானாது சிமா அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது.


*சியாலின் சராசரி ஆழம் - 20 கி.மீ
*சியாலின் சராசரி ஆழம் - 25 கி.மீ


*மேலோட்டின் சராசரி அடர்த்தி எண் 3 g/cm ஆகும்.


கவசம் (Mantle):

*கவசம் பூமியின் மேலோட்டிற்கும், கருவத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.
*இக்கவசம் பூமியின் எடையில் 83 சதவீதத்தை கொண்டுள்ளன. இவை பல தட்டுகளால் உருவாக்கப்பட்டதாகும்.
*இவை கண்ட நகர்வை உருவாக்குகின்றன. இவ்வடுக்கு 900 கி.மீ அப்பால் ஒரே மாதிரியாக காணப்படுகிறது.
*இவ்வடுக்கின் பேல் பகுதி அஸ்தினோஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது.
*இது 700 கி.மீ ஆழம் வரை பரவிக் காணப்படுகிறது.
*இக்கவச அடுக்கின் கீழ்ப்பகுதி குழம்பு நிலையையும் மற்றும் நெகிழும் தன்மையையும் கொண்டுள்ளது.
*இத ன் சராசரி அடர்த்தி எண் 8 g/cm ஆகும்.


கருவம் (Core):

*பூமியின் உள் மைய அடுக்கு கருவம் அல்லது பேரிஸ்பியர் (Barysphere) என அழைக்கப்படுகிறது.
*நிக்கல் மற்றும் இரும்பு இருப்பதன் காரணமாக இது நைப் எனவும் கூறப்படுகிறது.
*இவ்வடுக்கு பூமியின் காந்த விசையை உற்பத்தி செய்கிறது.
*இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன .
1) வெளிக் கருவம்
2) உட்கருவம்.
*வெளிக் கருவமானது திரவ நிலையிலும், உள் கருவமானது சுற்றியுள்ள அடுக்குகளின் அழுத்தத்தின் காரணமாக திட நிலையில் காணப்படுகிறது. இதன் சராசரி அடர்த்தி எண் 12 g/cm ஆகும்.


புவி மையப் பகுதியின் வெப்பநிலை:

*புவியின் மேலோட்டிலிருந்து கீழ்நோக்கிச் செல்ல செல்ல வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
*புவியின் மையப்பகுதியில் வெப்பநிலையானது 5000°C இருக்கும்.


இயல்பான பெரு விகிதம் (Normal Gain Rare) :

*ஒவ்வொரு 32 மீட்டர் ஆழத்திற்கும் 1°C அதிகரிக்கிறது.


சராசரி அடர்த்தி எண்:

*மேலோடு (Crust) : 3 g/cm
*கவசம் (Mantle) 8 g/ cm
*கருவம் (Core) : 12 g/cm

Share with Friends