Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) பூமியும் பேரண்டமும்(Earth and the universe) புவி சந்திரன் - Notes

புவி மற்றும் அண்டம் - சூரியக் குடும்பம்

புவி (Earth)

சந்திரன்

*நிலவு,நிலா,மதி, திங்கள் எனப் பெயர்களில் சந்திரன் அழைக்கப்படுகிறது. சந்திரன் ஒரு கோள் இல்லை.

*சந்திரன் நேரடியாக சூரியனை சுற்றுவதில்லை. அது பூமியைத் தான் சுற்றி வருகிறது. எனவே சந்திரனைத் துணைக்கோள் என அழைக்கின்றனர்.



*சந்திரன், பூமியின் விட்டத்தில் சுமார் கால் பங்கு அளவு மட்டுமே உள்ள கோளமாகும். ஏனெனில் பூமிக்கு மிக அருகே உள்ளதால் தான் அது பெரிதாகப் புலப்படுகிறது. அது 3,84,401 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வருகிறது.

*சந்திரன், பூமியைச் சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.

*சந்திரன் தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக் கொள்கிறது.

*எனவே தான் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் ஒரு பக்கம் மட்டுமே தெரிகிறது. சந்திரனின் மறுபக்கத்தை லூனா 3 என்ற செயற்கைக்கோள் தான் 1959 ல் முதன்முதலில் புகைப்படம் எடுத்தது.

*பூமியில் உள்ளது போன்ற வளிமண்டலம் சந்திரனில் இல்லை சந்திரனில் ஈரப்பசை உள்ளது. ஆனால் திரவ நிலையில் நீர் இல்லை.பூமியில் உள்ளது போலமலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனப் பல நிலத்தோற்றங்கள் சந்திரனில் உள்ளன .


சந்திரனின் ஒளிக்கான காரணம்:

* நம் சூரிய குடும்பத்தில் சூரியன் மட்டும் ஒளிரும் வான் பொருள் இரவு வானில் சந்திரன் ஒளிர்வதுப் போலத் தோன்றினாலும் உண்மையில் சூரியனின் ஒளியைத் தான் சந்திரன் பிரதிபலிக்கிறது.


அமாவாசை மற்றும் பௌர்ணமி :

*சந்திரனும், பூமியைப் போலவே கோள வடிவம் கொண்டது. எனவே சூரியனை நோக்கியப் பகுதி ஒளி படர்ந்தும், சூரியனுக்கு எதிர் திசைப் பகுதி இருள் சூழ்ந்தும் காணப்படும்.
*சந்திரன், பூமியைச் சுற்றி வரும் போது அதன் இருள் பகுதி பூமியை நோக்கி அமைவதே அமாவாசை.
*அதன் ஒளி படர்ந்த பகுதி முழுமையாகப் பூமியை நோக்கி அமைவது முழு சந்திரன் (பௌர்ணமி) ஆகும்.


சந்திரனின் கிண்ணக் குழிகள்:

*தொலைநோக்கியில் பார்த்தால் இவை தெரியும் .
*விண்கற்கள் சந்திரனில் மோதி மோதி இந்தக் குழிகள் ஏற்பட்டுள்ளன.
*எரிமலை வெடிப்புகளால் பல குழிகள் ஏற்பட்டுள்ளன.


Revolution (சூரியனைச்சுற்றி வருதல்):

*பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. பொதுவாக ஜூலை மாதத்தில் பூமி சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மிக அருகே இருக்கும்.இதனால் தான் பருவகாலம் ஏற்படுகிறது. எனில் ஜூலை மாதம் குளிர் காலமாகவும் ஜனவரி மாதம் கோடை காலமாகும் அமைய வேண்டும்.
*பூமி முழுவதும் ஒரே பருவ காலம் எப்போதும் அமைவதில்லை.



*பூமியின் சுழல் அச்சு பூமி சூரியனைச் சுற்றி வரும் தளத்தின் நோக்கத்திற்கு 23(1/2)° சாய்ந்துள்ளது.
* இப்படி சாய்வாக இருப்பதனாலும் பருவ கால மாற்றம் ஏற்படுகிறது.

Share with Friends