Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) பூமியும் பேரண்டமும்(Earth and the universe) புவியின் வளிமண்டலம் - Notes

வளிமண்டலம்

புவியின் வளிமண்டலம்

*புவியின் வளிமண்டலம் வாயுக்களால் சூழப்பட்டுள்ளது. இவை புவி ஈர்ப்பு விசையினால்
நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

வளிமண்டலத்தில் காணப்படும் முக்கிய வாயுக்களானது:
*நைட்ரஜன் - 78%
*ஆக்ஸிஜன் - 21%
*மந்த வாயுக்கள் - 1%



மந்த வாயுக்கள்:

*வளிமண்டலத்தில் இவை குறைந்த அளவே காணப்படுகிறது.
1. ஆர்கான்
2. கிரிப்டான்
3.கார்பன் டை ஆக்ஸைடு
4. நியான்
5.ஹீலியம்
6. ஓசோன்

*இந்த மந்த வாயுக்கள் தவிர நீராவி மற்றும் தூசுக்களும் வளிமண்டலத்தில் காணப்படுகின்றன. இவையே வானிலை மாற்றத்திற்கு காரணமாக அமைகின்றன.

*வளிமண்டலத்தின் உயரத்திற்கு ஏற்ப வாயுக்களின் அளவானது வேறுபடுகிறது.அவை பூமியின் மேற்பரப்பின் அருகில் அடர்த்தி அதிகமாகவும், உயரம் அதிகரிக்க அதிகரிக்க அடர்த்தி குறைந்தும் காணப்படுகிறது.

*வளிமண்டலம் அதன் பண்புகளின் அடிப்படையில் நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை.
1. அடியடுக்கு (Troposphere)
2. படையடுக்கு (Stratosphere)
3. அயனியடுக்கு (Ionosphere)
4. வெளியடுக்கு (Exosphere)


வானிலையியல்:

*வளிமண்டலத்தை பற்றி படிக்கும் அறிவியலாகும், மேலும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் வானிலை மாற்றங்களை உற்று நோக்குவதாகும்.




Share with Friends