Easy Tutorial
For Competitive Exams

Science QA பூமியும் பேரண்டமும்(Earth and the universe) புவியின் தோற்றம் - Notes

புவி மற்றும் அண்டம் - சூரியக் குடும்பம்

புவி (Earth)

புவியின் தோற்றம்:


*4.6 மில்லியன் வருடம் முன் தோன்றியிருக்கக் கூடும் .
*சூரியனைச் சுற்றியிருந்த தூசுக்கள் மற்றும் வாயு அடங்கிய மேகக்கூட்டம் (நெபுலா) சுருங்கி துகளாக மாறியது.

*பூமியின் தோற்றம் பற்றிய கொள்கையைக் கூறியவர் - எட்வின் ஹபிள் - "பெரு வெடிப்புக் கொள்கை" நாம் இவரது கொள்கையை நம்பி வருகிறோம்.
*பூமியானது சூரியனிடமிருந்து 149.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சூரியக் குடும்பத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
*பூமியில் நீரூம் (71%), நிலமும் (29%), காற்றும் காணப்படுவதால் உயிர்கள் வாழத் தகுதியான கோளாக உள்ளது.
*காற்று மண்டலமானது புவியைச் சுற்றிலும் காணப்படுகிறது.
*பூமியில் மட்டுமே நீரும், காற்றும், உகந்த வெப்பநிலையும் இருப்பதால் உயிர்கள் உருவாகிப் பெருகுகின்றன. சூரியக் குடும்பத்தில் பூமியில் மட்டும் உயிர்கள் உள்ளன.
*பூமியைத் தவிர, மற்ற கோள்களில் உயிர்கள் இல்லை. எனவே பூமி பல்லுயிர்களும் பல்கிப் பெருகும் உயிர் கோளமாக விளங்குகிறது. எனவே பூமியை உயிர்க்கோளம் (Biosphere) என்றும் அழைப்பர்.



பெரு வெடிப்புக் கொள்கை:

*ஒரு மிகப்பெரிய நெருப்புப் பந்திலிருந்து வெடித்துச் சிதறிய பல துண்டுகளில் ஒன்றே சூரியன். இந்த சூரியனைச் சுற்றும் மற்ற துகள்கள் குளிர்ந்து கோள்களாக உருப்பெற்றன.
*பூமியில் நைட்ரஜன் 78.09%. ஆக்ஸிஜன் 20.95% உள்ளது. ஆர்கான், கரிய மில வாயு, மந்த வாயுக்கள் (செனான், கிரிப்டான், நியான்) மற்றும் மீதமுள்ள வாயுக்களும் உள்ளன.


தற்சுழற்சி (Rotation):

*சுமார் 23 மணி 56 நிமிடத்திற்கு ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அதையே பூமியின் தற்சுழற்சி என்கிறோம்.
*இதன் காரணமாகத்தான் பகல், இரவு மாற்றம் ஏற்படுகிறது.
*பூமியின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பகல் அல்லது இரவு ஏற்படாது.
*சூரியனை நோக்கி உள்ள பூமியின் பாதிப்பகுதி பகல் பொழுதாகவும் சூரியனுக்கு மறுபுறம் உள்ள பூமியின் மீதிப்பகுதி இரவாகவும் அமையும்.
*எனவேதான் இந்தியாவில் பகலாக இருக்கும்போது, பூமியின் மறுபக்க உள்ள அமெரிக்காவில் இரவுப் பொழுதாக இருக்கும்.


*பூமி தன்னைத் தானே சுற்றுகிறது என்று அறிவியல் வழியில் விளக்கிக் கூறியவர் ஆரியபட்டர் ஆவார்.


லீப் ஆண்டு :

*மொத்தமுள்ள 365.24 நாட்களில் மீதமுள்ள 0.24 நாள் அல்லது 1/4 நாள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டி ஒரு நாளை கூடுதலாக சேர்த்தல் லீப் ஆண்டு என்கிறோம்.
*லீப் ஆண்டில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 என்ற தேதியைக் கூடுதலாகக் கொள்கிறோம். அதாவது குறிப்பிட்ட ஆண்டை மீதியின்றி நான்கால் வகுக்க முடியுமானால் அது லீப் ஆண்டு என்கிறோம். இப்படி செய்தாலும் சிறு தவறு நேரிடுகிறது.
*இதனையும் தவிர்க்க போப் கிரிகாரி என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு திருத்தம் செய்தார். இதன்படி நூற்றாண்டுகளில் (1800,1900,2000) போன்ற ஆண்டுகள் லீப் வருடம் என எடுத்துக்கொள்வதால் அது நான்கால் வகுபட்டால் மட்டும் போதாது, 400 ஆலும் வகுபட வேண்டும் என்று விளக்கினார்.


*முற்காலத்தில் சூரியனின் முதல் நாள் உதயத்திலிருந்து அடுத்த நாள் உதயம் வரையிலான கால இடைவெளியைத் தான் ஒரு நாள் எனக் கணக்கிட்டனர்.ஆனால் இப்போது நாம் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கி மறு நாள் இரவு 12 மணி வரை ஒரு நாள் எனக் கணக்கிடுறோம்.
*பூமி தன்னைத் தானே சுற்றுவது மட்டுமல்லாமல், சூரியனை நீள்வட்ட வடிவப் பாதையில் சுற்றி வருகிறது.
*பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் கால இடைவெளியைத் தான் ஓர் ஆண்டு எனக்குறிக்கிறோம். சுமார் 365.24 நாட்கள் கொண்டது ஓர் ஆண்டு ஆகும். நமது வசதிக்காக 365 நாட்கள் என அமைத்துக் கொண்டிருக்கிறோம்.
*பூமியின் மீது தற்பொழுது உள்ள நில மற்றும் நீர் பரவலானது எப்பொழுதும் ஒரே நிலையில் இருந்ததில்லை.தற்பொழுது உள்ள அனைத்து கண்டங்களும் தென்துருவத்தில் ஒன்றி ணைந்து இருந்தது.அந்நிலப்பரப்பு பான்ஜியா(Pangea) என்று அழைக்கப்பட்டது.



*பான்ஜியா' என்பது ஒரு கிரேக்கச் சொல், இதன் பொருள் "எல்லா நிலமும்" (All Earth) என்பதாகும்.


*பான்ஜியாவை சூழ்ந்த பேராழி பெந்தலாசா (Panthalassa) அல்லது பிரம்மாண்டமான பேராழி எனப்படும். இதன் கிரேக்கப் பொருள் எல்லா நீரும் ஆகும். பிறகு பான்ஜியா பல தட்டுகளாக உடைந்தது.இவ்வாறு உடைந்த இத்தட்டுகளே நிலக்கோள் தட்டுகள் (lithosphere plate) என அறியப்படுகின்றன.
*இத்தட்டுகள் மெதுவாக ஒரு சில மில்லிமீட்டர் முதல் சென்டி மீட்டர் வரை ஒவ்வொரு ஆண்டும் நகர்கின்றன.


Share with Friends