Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-மரபுக்கவிதை உடுமலை நாராயணக்கவி

உடுமலை நாராயணகவி

வாழ்க்கை குறிப்பு

  • புலவர் :உடுமலை நாராயணகவி
  • பிறப்பு :திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர்
  • பெற்றோர் : கிருஷ்ணசாமி – முத்தம்மாள்
  • இயற்பெயர் : நாராயணசாமி
  • காலம் :15.09.1899 முதல் 23.05.1981
  • சிறப்பு பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்

ஆசிரியர் குறிப்பு

இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.

பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.

கல்வி

  • முத்துசாமிக் கவிராயரிடம் கல்வி பயின்றார் .
  • சங்கரதாசு சுவாமிகளிடம் யாப்பிலக்கணம் பயின்றார் .
  • கலைவானர் N.S. கிருஷ்ணனுக்கு "கிந்தனார் கதா காலச்சேபம் " எழுதியதால் கலைவானரின் குருவாக மதிக்கப்பட்டார்.

திரையுலகத் தொடர்பு

  • கிராமபோன் கம்பனிக்கு பாட்டு எழுதி தர இயக்குனர் நாராயணன் இவரை திரைப்பட துறைக்கு அறிமுகப்படுத்தினார்
  • இவர் பாடல் எழுதிய முதல் திரைப்படம் சந்திர மோகனா (அ ) சமூக தொண்டு
  • நாட்டுப்புற பாடல் மெட்டுகளை , திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
  • தம் பாடல்களின் திருக்குறள் கருத்துக்களைமிகுதியாக பயன்படுத்தியவர்.

சிறப்பு

‘கலைமாமணி’ என்னும் பட்டம் பெற்றார்.

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை 500 காசு அஞ்சல் தலையை வெளியிட்டது.

சிறப்புப் பாடல்கள்

  • பெண்களை நம்பாதே ! கண்களே பெண்களை நம்பாதே !(தூக்கு தூக்கி என்ற திரைப்படத்தில் இந்த பாடலை எழுதியுள்ளார்)
  • காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் , பி.ஏ படிப்பு பெஞ்ச் துடைக்குதாம்.
  • குற்றம்புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது ?
  • சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம் ; சோம்பல் வளர்த்தா ஏற்படும் கஷ்டம்.
  • கத்தியைத் தீட்டுவது அந்தக்காலம் , புத்தியைத் தீட்டுவது இந்தக்காலம்.

பாடல் எழுதிய திரைப்படங்கள்

  • வேலைக்காரி
  • ஓர் இரவு
  • ராஜகுமாரி
  • நல்லதம்பி
  • பராசக்தி
  • மனோகரா
  • பிரபாவதி
  • காவேரி
  • சொர்க்க வாசல்
  • தூக்குத் தூக்கி
  • தெய்வப்பிறவி
  • மாங்கல்ய பாக்கியம்
  • சித்தி
  • எங்கள் வீட்டு மகாலட்சுமி
  • ரத்தக்கண்ணீர்
  • ஆதி பராசக்தி
  • தேவதாஸ்

மணி மண்டபம்

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

Share with Friends