Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

  • தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது வானியல் பற்றிய அறிவாகும்.

  • தொல்காப்பியத்தின்,
    "நிலம் நீர் தீ வலி விசும்போடு ஐந்தும்
    கலந்த மயக்கம் ஆதலின்.”
    (தொல்காப்பியம், பொருள்.635) எனும் பாடலில் உலகம் ஐம்பூதங்களாகிய 'நிலம், நீர், வெப்பம், காற்று, வானம்' ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இதே கருத்தை,
    “மண்திணிந்த நிலனும்
    நிலன் ஏந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித்தலை இய தீரும்
    தீ முரணிய நீரும் என்றாங்கு
    ஐம்பெரும்பூதத்து இயற்கை போல்..” (புறம், 2)
    எனும் புறநானூற்றுப்பாடலும் குறிப்பிடுகிறது.

  • 15-ஆம் நூற்றாண்டில் நிக்கோலஸ்கிராப்ஸ் - ம், பிறகு கலிலியோவும் கண்டறிந்து சொன்ன "உலகம் தட்டை அல்ல, உருண்டை” என்பதை, அதற்கு பல நூற்றாண்டு முன்பே வள்ளுவர்,
    "சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை” என்கிறார்.

  • வான்வெளியின் மிகப்பெரிய வின்மீனாகிய சூரியனின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் வகையில், "ஞாயிறு போற்றுதும்" என்கிறது சிலப்பதிகாரம்.

  • சூரியனைச் சுற்றியுள்ள பாதையை "ஞாயிறு வட்டம்" என்கிறது புறநானூறு -
    "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
    பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” - புறம், 30 தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை நாள்மீன்' என்றும், ஞாயிறிடமிருந்து ஒளியை பெற்று பிரதிபலிக்கக் கூடியவற்றை 'கோள்மீன்' என்றும் பண்டைத்தமிழர் குறிப்பிட்டுள்ளனர்.

  • திங்கள் தானே ஒளி வீசுவதில்லை என்பதை,
    “மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.”
    என்ற குறட்பாவில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

  • இன்னொரு குறட்பாவில் (குறள், 1146), "திங்களைப் பாம்பு கொண்டற்று” என்று திங்கள் மறைப்பு (சந்திரகிரகணம்) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தமிழர்கள் ஞாயிறு, திங்கள் ஆகியற்றுடன் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என தாம் கண்டறிந்த கோள்களை சேர்த்துக் கிழமைகளாக்கி தங்கள் அன்றாட வாழ்வியலோடு இணைத்துக் கொண்டனர்.

  • தமிழர்கள் கோள்களின் வடிவம், நிறம், தன்மை ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தனர்.

  • செந்நிறமாய் இருந்த கோளை, செவ்வாய் என்றனர். இன்றைய அறிவியல், செயற்கைக்கோள்கள் மூலம் அதன் நிறத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

  • வெண்மை நிறமுடையக் கோள் வெள்ளி எனப்பட்டது. இன்று வெள்ளிக்கோளில் வெள்ளித்தாது உள்ளதை அறிவியல் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

  • ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி தோன்றி விடியலை உணர்த்துவதால் இதனை தமிழர் 'விடிவெள்ளி' என்றனர்.

  • அன்று புதிதாகக் கண்டறியப்பட்ட கோள் புதன் என்ற காரணப் பெயர் பெற்றது. புதிதாக அறிந்ததால் "அறிவன்" எனும் பெயரும் அதற்கு உண்டு.

  • 'வியா' என்றால் பெரிய, அகன்ற எனப் பொருள். வானில் பெரிய கோளானது வியாழன் என்றழைக்கப்பட்டது.

  • சனிக்கோளை 'காரிக்கோள்' என்றனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

  • தூமகேது என்பது வால்நட்சத்திரத்தைக் குறிக்கும் சொல். தமிழ் இலக்கியங்களில் தூமகேது பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

  • ஓட்டுனர் இல்லாத விமானம் புறநானூற்றில் (புறம், 27:8) “வலவன் ஏவா வானவூர்தி” என்று குறிப்பிடப்பட்டிருப்பது தமிழரின் அறிவியற் சிந்தனைக்கு சான்று. (வலவன் - வானவூர்தி ஓட்டுகிறவன்)

Share with Friends