Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் பழமொழிகள் (TNPSC Pazhamozhigal)

* பழமொழிகள் என்பது வாய்மொழி இலக்கியம்.

* நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய வார்த்தைகளே பழமொழிகள் ஆகும்.

* தொல்கப்பியம் பழமொழியை "முதுசொல்" என்று கூறுகிறது.

* பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன.

* இவை பெரும்பாலும் பதிவு செய்யப்படாத வாய்மொழி வழக்காகவும், நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் அமைகின்றன.

* எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்க வைக்கின்றன.

TNPSC G4 2022

58838.'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
தெளிவாகத் தெரியாது
தெளிவாகத் தெரியும்
நிலைத்து நிற்கும்
நிலைத்து நிற்காது
விடை தெரியவில்லை
பழமொழிகள்(Pazhamozhigal) விளக்கம்
இக்கரைக்கு அக்கரை பச்சை அதுவே பரவாயில்லை
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் ஆடி மாதக் காற்றில் அம்மி கூடப் பறந்துவிடும்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் வாய்ப்புகளைக் கிடைக்கும்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிலை மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்
கல்வி கரையில கற்பவர் நாள்சில. கல்வி அளவில்லாதது; எல்லையற்றது; முடிவற்றது; ஆனால், கல்வி கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி திருக்குறளும், நாலடியாரும் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே முன்னெச்சரிக்கை அறிந்து செயல்படுதல்.
அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் எந்தச் செயலையும் ஆழ்ந்து செய்ய வேண்டும்
"கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லைக் காணோம்" "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்"
நாயகன் என்பது இங்கு கடவுளை குறிக்கிறது. ஒரு கற்சிலையை கற்சிலையாக பார்த்தால் அதில் கடவுள் தெரியமாட்டார். அதே கற்சிலையை கடவுளாக பார்த்தால் அங்கு கல் தெரியாது.
“குரைக்கின்ற நாய் கடிக்காது” "குழைகிற நாய் கடிக்காது"
நம்மிடம் பாசமாய் குழையும் நாய் எப்போதும் நம்மை கடிக்காது.
“யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்” ‘ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு காலம் வரும்’ என்பதே உண்மையான பழமொழி.
ஆ + நெய் அதாவது பசுவின் நெய் - நாம் இளமையில் பசுநெய்யை விரும்பி உண்போம்
பூ + நெய் அதாவது பூவில் ஊறும் தேன் - வயதான முதுமையில் தேனோடு மருந்து கலந்து உண்போம்
இளமையில் ஆநெய், முதுமையில் பூநெய். இதைத்தான் “ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்” என்பர்.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் "அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்" என்பதே சரி.
அகம் என்றால் மனம் என்று பொருள். எந்த ஒரு விடயத்தையும் மனதில் பதியவைக்கும் முன்பு அதை தெளிவாக ஆராய்ந்து அறிந்து பதியவைக்க வேண்டும்.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. ஒரு உண‌வி‌ல் உ‌ப்பு இ‌ல்லாம‌ல் ம‌ற்ற சுவைக‌ள் இரு‌ந்தாலு‌‌ம், அ‌ந்த உண‌வினை உ‌ண்ண இயலாது.
அது போல தா‌ன் ஒருவரு‌க்கு செ‌ல்வ‌ம், அழகு, புக‌ழ், ‌வீர‌ம் என அனை‌த்து‌ம் இரு‌ந்தாலு‌ம் அவ‌‌ரிட‌ம் ந‌ற்குண‌ங்க‌ள் இ‌ல்லை எ‌‌ன்றா‌ல் மே‌ற்கூ‌றியவை அவ‌ரி‌ட‌ம் இரு‌ந்து‌ம் எ‌‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. ‌
ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எ‌ன்ற பழமொ‌ழி‌யி‌ன் பொரு‌ள் ஒருவ‌ரி‌ன் முழு‌க் குண‌த்‌தினை அவ‌‌ரி‌ன் ஏதேனு‌ம் ஒரு செய‌லி‌னை வை‌த்தே அ‌றியலா‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை. நீ உயிரோடு இருக்கும் வரை, உனக்கு உணவளிப்பவரை மறந்து விடாதே என்பதே இதன் பொருள்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. உயிரைக் காக்கக்கூடிய அமுதம்கூட அதிகமாகச் சாப்பிட்டால் நஞ்சாகிவிடும். நல்ல செயலில்கூட அளவாக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். அளவுக்கு மீறினால் அதுவே தீமையாக முடியும்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை , முயற்சி, வெற்றி ஆகிய 16 செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று பொருள்.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறக்கலாமா? மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான். கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான்.
1.ஆடம்பரமாய் வாழும் தாய்
2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்
3.ஒழுக்கம் தவறும் மனைவி
4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு
5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை.
இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாள். விருந்துக்குச் சென்றால் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ணக்கூடாது.
வீட்டுக்கு வீடு வாசப்படி மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும் வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.

TNPSC G4 2022

58886.கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்
தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
விடை தெரியவில்லை
பழமொழிகள்(Pazhamozhigal)Proverbs
ஒற்றுமையே பலம்Union is strength
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுUnited we stand, divided we fall
யானைக்கும் அடி சறுக்கும்A Good marksman may miss
விளையும் பயிர் முளையிலே தெரியும்The child is the father of man
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்Blood is thicker than water
தனிமரம் தோப்பாகாதுA single tree doesn’t make an orchard
சிறுதுளி பெருவெள்ளம்A penny saved is a penny earned
நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்Man proposes and God disposes
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுBend the twig, Bend the tree
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா?You can’t make a silk purse out of a sow’s ear
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுA hasty man never wants woe
காலம் பொன் போன்றதுTime is Gold
பதறாத காரியம் சிதறாதுHaste makes waste
ஆழம் அறியாமல் காலை விடாதேHearty laugh dispels disease
பழிக்கு பழிTit for tat
உழைப்பின்றி ஊதியமில்லைNo pain no gain
இனம் இனத்தோடு சேரும்Birds of the same feather flock together
செய்யும் தொழிலே தெய்வம்Work is worship
மின்னுவதெல்லாம் பொன்னல்லAll that gliter is not gold
கம்பன் வீட்டு கட்டத்தறியும் கவி பாடும்In a fiddler’s house all are dancers
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்Health is wealth
தோல்வியே வெற்றிக்கு அடித்தளம்Failure is the stepping stone to success
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுToo much of anything is good for nothing
கல்லிலே நார் உரிக்க முடியுமாNo man can flay a stone
கல்வி கரையில கற்பவர் நாள் சிலArt is long and life is short
குறைகின்ற நாய் கடிக்காதுBarking dog seldom bite
ஆழம் அறியாமல் காலை விடாதேLook before you leap
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்Lile Strokes fell great oaks
Share with Friends