Easy Tutorial
For Competitive Exams

Science QA முக்கிய அருஞ்சொற்பொருள்கள்

முக்கிய அருஞ்சொற்பொருள்கள்

அரசு:

மத்திய அரசாங்கம், இந்திய நாடாளுமன்றம், மாநில அரசாங்கங்கள், மாநிலச் சட்டமன்றங்கள், இந்திய எல்லைக்குள் வரும் அனைத்து உள்ளூர் அதிகார அமைப்புகள், இந்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அமைப்புகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது அரசு ஆகும்.

ஓரவை:

ஒரு சட்டப்பேரவையை மட்டுமே மக்களவையாக கொண்டுள்ள தேசிய சட்டமன்றம் ஓரவை என்று அழைக்கப்படும்.

ஈரவை:

சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை கொண்டுள்ள சட்டமன்ற அமைப்பு ஈரவை முறை என்று அழைக்கப்படும்.

உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை:

மக்களவை மாநிலங்களவைக் கூட்டத்தொடர்களை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் பத்தில் ஒரு பங்கு எண்ணிக்கை இருக்க வேண்டும்.

சட்டமுன்வரைவு:

ஒரு சட்டம், அது சட்டமாவதற்கு முந்தைய நிலையில் இது பரிசீலனைக்காக நாடாளுமன்றத்தில் “சட்ட முன்வரைவுவாக” முன்மொழியப்படுகின்றது. அந்த சட்ட முன்வரைவவை அரசமைப்புக் கட்டமைப்புக்குள் முழுமையாக அறிந்துகொள்ளும் பொருட்டு ஒரு முழுமையான விவாத்திற்கு நாடாளுமன்றம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

திருத்தச்சட்டம்:

இந்திய அரசமைப்புக்கோட்பாட்டின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை மாற்றாமல் மாறும் நிலைமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு சமகாலத்திற்கு பொருத்தமாக திருத்தக்கூடிய ஒரு தனித்துவமான ஏற்பாட்டை இந்திய அரசியமைப்பைக் கொண்டுள்ளது. அந்த வகையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவது அல்லது மாற்றுவது சட்டத் திருத்தம் ஆகும். கண்டன தீர்மானம்: குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கான நீதித்துறைச் சார்ந்த பணிகளும் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அவர்களுக்கெதிராக கண்டன தீர்மானம் ஈரவைகளிலும் நிறைவேற்றினால் அவர்களின் பதவி பறிபோகும்.

உறுப்பினர்களுக்கான விலக்களிப்புகள்:

அவையின் எல்லைக்குள் கைதுக்கு எதிரான பாதுகாப்பு

கூட்டுக் கூட்டத்தொடர்:

சிறப்பு நிகழ்வுகள் அல்லது சில சட்ட நடவடிக்கைகளில் ஈரவைகளுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும் சமயங்களில் நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடருக்கு மக்களவையின் சபாநாயகர் தலைமை தாங்குவார்.

கூட்டத்தொடர்:

சட்டமுன் வரைவுகளுக்கான ஒப்புதல் அளித்தல், தீர்மானங்கள் ஆகியவை போன்ற பல்வேறு செயல்குறிப்புக்கள் குறித்து விவாதம் நடத்துவதற்காக, திட்டமிடப்பட்ட ஒரு கால வரையறையில் நாடாளுமன்றம் கூடுவதைத்தான் ஒரு கூட்டத்தொடர் என்று அழைக்கிறோம்.

நம்பிக்கையில்லா தீர்மானம்:

பிரதமர் / முதலமைச்சர் அரசாங்கத்திற்கு தலைமைத் தாங்குவதற்காக மக்களவை/ சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெருவதற்கான வழிமுறையாகும். ஒருவேளை அந்த தீர்மானம் வெற்றி பெற்றால், மொத்த அரசாங்கமும் வெளியேற நேரிடும், புதிய தேர்தலை சந்திக்க நேரிடும். முன் மொழிதல்: ஒரு விருது, கௌரவம் அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காக பெயரை முறையாக அறிவித்தல்.

சட்டம்:

ஒரு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஈரவைகளிலும் ஏற்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறும் போது சட்டம் எனப்படுகிறது.

சட்ட முன்வரைவு:

நாடாளுமன்றத்தில் ஈரவைகளின் ஏற்பு கோரி முன்மொழியப்படும் சட்ட வரைவு சட்ட முன்வரைவு எனப்படும்.

உட்பிரிவு:

ஒரு சட்ட முன்வரைவில் வரிசை எண்ணிடப்பட்ட பத்தி.

தீர்மானம்:

நாடாளுமன்றத்தின் தீர்வு, நடவடிக்கை, கருத்து கோரி நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினராலும் முன்வைக்கப்படுவது தீர்மானம் எனப்படும்

பதவி பிராமணம்:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமரும்முன் இந்திய அரசமைப்பிற்கும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் தமது உறுதிப்பாட்டினைத் தெரிவித்து கடவுள் பெயராலோ, பகுத்தறிவின் பெயராலோ உறுதி மொழி ஏற்றுக் கொள்வதாகும்.

கேள்வி நேரம்:

ஒவ்வொரு நாளும் அவை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒதுக்கப்படுகிறது.

கோரம்:

நாடாளுமன்ற அவை அல்லது பல்வேறு பணிகளுக்காக உருவாக்கப்படும் குழுக்களின் கூட்டத்தொடர் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கோரம் எனப்படுகிறது. அவையின் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை கோரம் என வகுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர்:

ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் குடியரசுத்தலைவரால் கூட்டப்படுகிறது. நாடாளுமன்றம் செயல்புரியும் குறிப்பிட்ட கூட்டத்தின் கால அளவு கூட்டத்தொடர் எனப்படும்.

நிலைக்குழு:

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அல்லது அவ்வப்போது அவையால் தேர்ந்தெடுக்கப்படும் அல்லது அவைத் தலைவரால் நியமிக்கப்படும் குழு நிலைக்குழு எனப்படும்.

உறுதி மொழி:

ஒருவரின் எதிர்கால நடவடிக்கை அல்லது நடத்தையை உறுதி செய்யும் விதத்தில் பெரும்பாலும் கடவுளின் பெயரால் கூறப்படும் வாக்குறுதி

ஊதியம்:

ஒரு பணிக்காக கிடைக்கப் பெறும் தொகை

கண்டன தீர்மானம்:

அரசமைப்பு பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம்

பதவிக் காலம்:

ஒரு பதவிக்கு சட்டப்படி அளிக்கப்பட்டிருக்கும் காலம்

கூடுவதற்கான அழைப்பு:

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கூடுவதற்காக குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரால் விடுக்கப்படும் அழைப்பு

ஒத்தி வைப்பு:

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் கூட்டத் தொடரினிடையே சில அமர்வுகள் தள்ளி வைக்கப்படுதல்

அவசரச்சட்டம்:

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறாதபோது, குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநரால் பிறப்பிக்கப்படும் சட்டம்

நீக்குதல்:

ஒரு சட்டம், உரிமை அல்லது ஒப்பந்தத்தை சட்டப்படி நீக்குதல்

அலுவல் வழி தலைமை:

ஒருவர் சட்டப்பூர்வமாக வகிக்கும் பதவியின் காரணமாக, வேறு ஒரு பதவிக்கும் பொறுப்பாக இருத்தல்

முன்னெடு:

ஒரு குழு அல்லது கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திச் செல்லுதல்

அமைச்சரின் துறை:

ஒரு அமைச்சர் தலைமை நிர்வாக பொறுப்பேற்றிருக்கும் துறை

அதிகார பூர்வ பேச்சாளர்:

ஒரு கட்சி அல்லது அரசாங்கத்தின் சார்பாக நியமிக்கப்பட்டிருக்கும் பேச்சாளர்

ஒப்புரிமை உடைய:

ஒரே மாதிரி கருத்துடைய

பறைசாற்று:

வெளிப்படையாக தெரிவித்தல்

சட்டமன்ற கலைப்பு:

ஒரு சட்டமன்றத்தை முறைப்படி முடித்து வைத்தல்

சபை ஒத்திவைப்பு:

நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற கூட்டத் தொடரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்தி வைத்தல்

முன்வரைவிற்கான ஒப்புதல்:

சட்ட மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முன்வரைவிற்கு குடியரசுத்தலைவர் அல்லது ஆளுநர் அளிக்கும் ஒப்புதல்

வெஸ்ட்மினிஸ்டர் முறை:

இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்ட்டர் பகுதியில் ஆங்கிலேய நாடாளுமன்றம் அமைந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்றமுறை வெஸ்ட்மினிஸ்டர் முறை எனப்படுகிறது.

நேர்மை:

பிரிக்க முடியாத மற்றும் முழுமையான ஒரு ஒழுங்கமைவு நிலை

ஒருமைப்பாடு:

நாடு அல்லது ஒரு குழுவிற்குள் ஒவ்வொருவருக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை

வாக்கு சீட்டு:

ஒரு வாக்கெடுப்பைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு காகிதம்.

தீர்மானம்:

ஒரு சட்டமன்றம் அல்லது மற்ற முறையான கூட்டத்தினால் ஒப்புக் ள்ளப்பட்ட கருத்து அல்லது விருப்பத்தின் ஒரு முறையான வெளிப்பாடு.

வெற்றிடம்:

செல்லுபடியாகாத அல்லது சட்டபூர்வமாக பிணைப்பு இல்லை

சட்ட உரிமை கட்டளை:

ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்படுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம்.

கூட்டணி:

கூட்டு நடவடிக்கைக்கான ஒரு தற்காலிக கூட்டு, குறிப்பாக அரசியல் கட்சிகள் இதன் மூலம் ஒரு அரசாங்கத்தை உருவாக்குகின்றன

சுயவிருப்புரிமை:

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய சட்டம் அளித்திருக்கும் சுதந்திரம்.

ஆட்சி எல்லை:

ஒரு அரசின் அதிகாரபூர்வ எல்லை.

ஆக்கிரமிப்பு:

தூண்டுதல் இல்லாமல் தாக்கும் நடவடிக்கை

கலகம்:

ஒரு நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கோ அல்லது தலைமைக்கெதிராகவோ ஆயுதமேந்திய எதிர்ப்பு.

நீதித்துறை:

மாநிலத்தின் பெயரில் சட்டத்தை விளக்குவது மற்றும் பொருந்தும் சட்டங்களின் அமைப்பு ஆகும்.

கூட்டமைப்பு:

இது ஒரு மத்திய அரசின் கீழ் சுயநிதி மாகாணங்கள், மாநிலங்கள் அல்லது பிற பிராந்தியங்களின் ஒன்றியத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு அரசியல் நிறுவனம் ஆகும்.

அடிப்படை உரிமைகள்:

அவை அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து உயர்ந்த பாதுகாப்பு தேவை என உச்ச நீதிமன்றம் அங்கீகரித்த உரிமைகள் குழு. இந்த உரிமைகள் குறிப்பாக அரசமைப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நீதித்துறை:

மாநிலத்தின் பெயரில் சட்டத்தை விளக்குவது மற்றும் பொருந்தும் சட்டங்களின் அமைப்பு ஆகும்.

ஜூரி மூலம் விசாரணை:

இது ஒரு நீதிபதியிடம் ஒரு முடிவை அல்லது உண்மையை கண்டுபிடிக்கும் ஒரு சட்டபூர்வமான நடவடிக்கை. நீதிபதிகள் அல்லது குழு அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஒரு பெஞ்ச் விசாரணையில் இருந்து வேறுபடுத்தப்படுகிறது.

நீதித் தடுப்பு:

நீதிபதிகளின் கோட்பாடு நீதிபதிகள் தங்கள் சொந்த அதிகாரத்தை குறைப்பதற்காக ஊக்குவிக்கும் ஒரு தத்துவமாகும்.

நீதித்துறை செயல்முறை:

நீதிபதிகள் தங்கள் நபர்களை பொதுக் கொள்கை பற்றி, மற்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் முடிவுகளை வழிகாட்டிக்கொள்ள அனுமதிக்கும் ஒரு தத்துவம் ஆகும்.

பொது நல வழக்கு:

பொது நலனுக்கான பாதுகாப்பு வழக்கு. இது சட்ட நீதிமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் பாதிக்கப்பட்ட கட்சியால் அல்ல, நீதிமன்றம் அல்லது வேறு எந்த தனியார் கட்சியால்.

அசல் அதிகார வரம்பு:

இது முதல் முறையாக ஒரு வழக்கு கேட்க ஒரு நீதிமன்றத்தின் அதிகாரம்.

மேல்முறையீட்டு நீதிமன்றம்:

விசாரணை நீதிமன்றம் அல்லது வேறு கீழ் நீதிமன்றம் ஆகியவற்றின் முடிவுகளை திருத்த, திருத்த மற்றும் மீறுவதற்கான ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிகாரமாகும்.

நிர்வாக நீதிமன்றங்கள்:

இது நிர்வாகச் சட்டத்தில் சிறப்பு வகையிலான நீதிமன்றம், குறிப்பாக பொது அதிகாரத்தை நடைமுறைப் படுத்துவதற்கான விவாதங்கள்.

பொதுச் சட்டம்:

தனிநபர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவுகளை நிர்வகிக்கும் சட்டத்தின் பகுதியாகும், மற்றும் சமூகத்திற்கு நேரடி அக்கறை கொண்ட தனிநபர்களுக்கிடையிலான அந்த உறவு.

அரசமைப்பு:

அடிப்படைக் கொள்கைகள் அல்லது நிறுவப்பட்ட முன்னுரிமைகள் ஆகியவற்றின் அமைப்பு ஒரு மாநில அல்லது பிற அமைப்பு நிர்வகிக்கப்படும் என்பதை ஒப்புக்கொள்கிறது.

ஆலோசனை அதிகாரசபை:

உச்ச நீதி மன்றம் அல்லது ஒரு அரசமைப்பு விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை நாடுகிறது.

மறுதலித்தல்:

குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநருக்கு உள்ள ரத்து செய்யும் அதிகாரம்

Share with Friends