Easy Tutorial
For Competitive Exams

Science QA மனித உரிமை சாசனம்

மனித உரிமை சாசனம்

மானுடக் குடும்பத்தில், ஒவ்வொரு மனித உயிரும் சமமான உறுப்பினர் என்பதை நிறுவும்படியான மதிப்புயர்ந்த மானுட இருப்பின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி வரையறுக்கப்பட்டவையே நடைமுயையில் ‘மனித உரிமைகள்’ ஆகும். மானுட மதிப்யுர்வு என்பது மனித உரிமைகளின் சாரம் ஆகும். இந்த அம்சத்தைப் பற்றிய பரந்த புரிதலும், ஒரு தனி நபரின் மதிப்புயர் தன்மையின் எல்லையை மதித்து அங்கீகரித்தலுமே மனித உதரிமைகளின் உண்மையான வாய்ப்பை வரையறுப்பவையாக அமைகின்றன.

மனித உரிமைகளின் அம்சங்கள்:
  • மக்கள் மனிதர்களாக இருக்கிற ஒர காரணத்தினாலேயே உரிமைகளைப் பெற்றிருப்பவர்களாகின்றனர்.
  • அனைத்து மக்களும் ஒரு மதிப்புயர்ந்த மானுட வாழ்க்கையை நடத்திச் செல்லுவதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.
  • மேலும் எல்லா மக்களுக்கும் இந்த உரிமைகள்,சாதி, நிறம்,மதம் மற்றும் பாலின அடிப்படையில் மறுக்கப்படக் கூடாதவையாகும்.

Group-IV(2011 Qns)

57505.தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
திருச்சி
மதுரை
சென்னை
திருப்பூர்
57517.ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்
1945 டிசம்பர் 10
1946 டிசம்பர் 10
1947 டிசம்பர் 10
1948 டிசம்பர் 10
மனித உரிமைகள் உலக முழுவதற்குமானவை:

தேசம், இனம், பால் அல்லது நிறம் ஆகிய எதையும் மனித உரிமைகள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எல்லா நாடுகளையும் சேர்ந்த அனைத்து நிறத்தவர், இனத்தவர், மதத்தவர் அனைவரும் எல்லாப் பகதிகளிலும் ஒரே விதமான உரிமைகளைப் பெற்றருப்பவர்களே. உலகின் எல்லாக் கண்டங்களிலும் உள்ள வளர்ச்சி பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே வித உரிமைகளைக் கட்டாயம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

மனித உரிமைகள் அனைத்து மக்களையும் சமமானவர்களாக நடத்துபவை:
  • “எல்லா மனித உயிர்களும் உரிமைகளிலும் – கௌரவத்திலும் சுதந்திரமாகவம், சமமாகவுமே பிறக்கின்றன” என்ற கருத்தாக்கத்தை இது பின்பற்றுவதாகும். ஆகவே அவர்களுடைய வௌ;வேறுபட்ட கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள், அரசியல் ஈடுபாடுகள், பாலியல், சமூக அடித்தளம், அந்தஸ்து, பிற போன்றவைற்றை மதிக்கிற அதே சம காலத்தில் ஒரே விதமான வாய்ப்புகளையும் – நடத்தப்படுதலையும் பெறுவதற்கு (அனைத்து மனித உயிர்களும்) தகுதி படைத்தவையுமாகும்.
  • நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே விதமான வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கங்கள் கட்டாயம் பணியாற்றியாக வேண்டும். மேலும் சமுதாயத்திலுள்ள சில மக்கள் பிரிவுகளுக்கு, உதாரணமாக, பெண்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மேற்கண்டவாறு ஒரே விதமான வாய்ப்புகளை வழங்குவது என்பது கூடுதலாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தையும் கொண்டிருக்கக்கூடும்.
இந்த உரிமைகள் அடிப்படையாக தனிநபர்களைச் சேர்ந்தவையே:

இதனுடைய பொருள், அரசுக்கம், ஒரு தனிபருக்குமிடையே நிலவுகிற உறவைப் பொறுத்தே இவை தொடர்புடையனவாகின்றன என்பதே. இதன் விளைவாக ஒவ்வொரு தனிநபரும் அவன் அல்லது அவளுடைய உரிமைகளை முழுமையான அனுபவிக்கவும், சுதந்திரமாகச் செய்ல்படுத்தவும் முடிகிற ஒரு சமுதாயத்தை உருவாக்கித் தர வேண்டிய கடமையும் அரசுக்கே உரியதாகிறது.

மனித உரிமைகள், மனித நேயத்தின் அடிப்படைக் கொள்கைகள்:
  • மனித ஆளுமையின் வளர்ச்சிக்கும் மனித கௌரவத்தின் பொருட்டும் இவ்வுரிமைகள் அடிப்படையானவை என்று கருதப்படுகின்றன.
  • இத்தகைய உரிமைகளுக்க சில எடுத்துக்காட்டுகள், வாழ்க்கைக்கான உரிமை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை மற்றும் சிதிரவதையிலிருந்து விடுதலை போன்றவைகளாகும்.
  • தேசிய எல்லைகளுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல
  • மனித உரிமைகளின் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு என்பது தேசிய எல்லைகளுக்குட்பட்டது மட்டுமே என்பதல்ல மாறாக உலக முழுவதற்கும் பொருந்தக்கூடிய சில இலட்சியங்களை அவை வலியுறுத்துகின்றன. இந்த மனித உரிமைகளுக்கான மரியாதை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு –போன்ற அம்சங்களை நிறைவு செய்து தர வேண்டிய கடமை நாடுகளுக்கு உண்டு என்பதை மனித உரிமைகள் கொண்டுள்ளன.
மனித உரிமைகளுக்கான முக்கிய நாட்கள்:
  • 1215 – மகாசாசனம்
  • 1776 – அமெரிக்க சதந்திரப் பிரகடனம் மற்றம் உரிமைகள் மசோதா
  • 1787 – ஐக்கிய நாடுகளின் அமைப்புச் சட்டம்
  • 1789 – மனிதனின் உரிமைகள் மீதான பிரெஞ்சு பிரகடனம்
  • 1946 – மனித உரிமைகள் மீதான ஐ.நா. ஆணையம்
  • 1948 – மனித உரிமைகளின் சர்வதேசப் பிரகடனம்
  • 1949 – ஜெனீவா மாநாடு
  • 1950 – மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களின் பாதுகாப்பான ஐரோப்பிய மாநாடு
  • 1961 – ஐரோப்பிய சமூக சாசனம்
  • 1966 – பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாடு (ஐசிசிஎஸ்சி): குடிமை மற்றும் அரசியல் ; உரிமைகளின் மீதான சர்வதேச உடன்பாடு (ஐசிசிபிஆர்): மற்றும் (முதலாவது) குடிமை மனிதத்தன்மையற்ற அல்லது தரக்குறைவாக நடத்துவதல் அல்லது தண்டித்தல் மீதான சர்வதேச உடன்பாட்டிற்கு தேர்வு முறை மரபொழுங்கு (யுஎன்சிஏடீ)
  • 1993 மனித உரிமைகள் மீதான உலக மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல் திட்டம் மற்றும் வியன்னா பிரகடனம்
இந்திய அரசியல் சட்டத்தில் மனித உரிமைகள்:
  • இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை முறைப்படி அங்கீகரித்துள்ளது. அதன் பகுதி – மூன்றில் சில அடிப்படை உரிமைகளை உத்தரவாதமும் செய்துளள்ளது: அவற்றுள் சமத்துவ உரிமை மத சுதந்திரத்திற்கான உரிமை, கல்வி மற்றும் கலாச்சார உரிமைகள் மற்றும் அரசியல் சட்டரீதியான தீர்வுகளுக்கான உரிமை போன்றவை உள்ளடங்கியுள்ளன.
  • இந்த அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் உச்சநீதிமன்றத்pன் மூல நீதிப் பரப்பெல்லை என்ற வடிவத்தில் அரசியல் சட்ட ரீதியான தீர்வுக்கான உரிமையை 32-வது விதி அறித்துள்ளது. இது தங்களின் மனித உரிமைகளின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக தனிநபர்களைப் பாதுகாப்பதற்கானதாகும்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதி, அரசுக் கொள்கைகளுக்கான வழிகாட்டி நெறிகளைக் கொண்டுள்ளது. இவை அரசு தன்னுடைய கொள்கைகளின் உருவாக்கத்தின் போது கடைப்பிடிக்கப்பட்டாக வேண்டிய அடிப்படையில் அரசாங்க நிர்வாகத்திற்கான நெறிகளாகும். இவற்றுள் அரசின் பின்வரும் கடமைகள் உள்ளடங்கியுள்ளன.
  • மக்களுடைய நலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது: சமூக நீதி, வேலைக்கான உரிமை, கல்வி மற்றும் மனிதத்தன்மை மிக்க சுழல்களுக்கான ஏற்பாடு பலவீனமான மக்கள் பகுதிகளின் நலன்களை முன்னெடுப்பது வாழ்க்கைத் தரங்களின் மட்டங்களையும் ஊட்டச்சத்துமிக்க உணவுத் தரத்தையும் உயர்த்துவதற்கான கடமை, மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது சுற்றுப்புறச் சுழலைப் பாதுகாப்பது மற்றம் மேம்படுத்துவது சு10ழலியல் மற்றும் வன விலங்குகளின் வாழ்வைப் பாதுகாத்து மேம்படுத்துவது பிற கடமைகளை வழிகாட்டி நெறிகள் வலியுறுத்துகின்றன.
  • இதோடு கூடுதலாகஇ பிரிவு 51யு –வில் (அரசியலமைப்புச் சட்டத்தி;ன் பகுதி 4 யு) அடிப்படை உரிமைகளின் உத்திரவாதத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமைகள் என்பவற்றின் பரந்து விரிந்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
  • அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துதற்குரிய அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு வழங்குகிற ஷரத்து 32- உடன் கூடுதலாக இதே நோக்கத்திற்காகத் தனது அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்குரிய அதிகாரத்தை உயர்நீதி மன்றத்திற்கு பிரிவு 226 வழங்கியுள்ளது.
  • மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், நடைமுறைப்படுத்துவதுமான இக்கடமை அரசியல் சட்டரீதியான கட்டளையின்படி உயர்நிலை நீதித்துறையின் அடிப்படைக் கடமையாகும். நீதியியல் மீளாய்வு போலவே சட்டத்தின் ஆட்சியும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சமாக உள்ளது.
  • மனித உரிமைகள விரிவாக்கம் செய்வதில் இந்திய உச்சநீதி மன்றத்தின் பங்கு பாத்திரம் மிகுந்த பாராட்டுக்குரியதாகும். இவ்வகையில் அரசயிலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஐ மிக உயர்ந்தபட்சமான அளவிற்கு நல்ல விளைவுகளைத் தரக்கூடிய பிரிவு என்பதாக அறியப்பட்டள்ளது.
  • குழந்தைப்பருவத்தின் பாதுகாப்பிற்கான உரிமை சமூகப் பாதுகாப்புக்கான உரிமை, ஆரொக்கியமான சுற்றுச்சுழலுக்கான உரிமை மனித கௌரவத்திற்கான உரிமை போன்ற உரிமைகள் மீறப்படும் போது பிரிவு 21-ன் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாக வேண்டுமென்று ஏராளமான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதில் (பகுதிகள் 3 மற்றும் 4) 1948-ஆம் ஆண்டின் மனித உரிமைகள் மீதான சர்வதேசப் பிரகடனத்தினுடைய தாக்கம்ää நெடுகிலும் உணரப்படுவதாக அமைந்துள்ளது.
  • மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பிரகடனத்திறட்கும் அதே போரல இரண்டு முறையான உடன்பாடுகளுக்கும் சில அம்சங்களில் தயக்கத்துடன் இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.
Share with Friends