Easy Tutorial
For Competitive Exams

Science QA லோக் அதாலத்

லோக் அதாலத்

  • லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.
  • இது ஒரு மாற்றுமுறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும்.
  • 'லோக்" என்பது மக்களையும் 'அதாலத்" என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும்.
  • மக்கள் நீதிமன்றம் முதன் முதலில் குஜராத் மாநிலத்தில் ஜூனகார் என்ற இடத்தில் மார்ச் 14, 1982 அன்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடந்தது.
  • 1987ஆம் ஆண்டு சட்டப் பணிகள் ஆணையச் சட்டத்தின்படி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டன.
  • இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு (லோக் அதாலத்) அனுப்பலாம்.
  • லோக் அதாலத் உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89 - ன் கீழ் வருகின்றது.
  • சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19 ன் படி, மக்கள் நீதிமன்றம், 3 பேர்; கொண்ட அமர்வாக இருக்கும்.
  • நீதி மன்றத்திலிருக்கும் நிலுவையிலுள்ள வழக்குகளில் வழக்கில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதலாகும்.
  • வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல்.
  • குற்றவியல் வழக்குகளைத் தவிர, மற்ற அனைத்து வழக்குகளும் லோக் அதாலத் நீதிமன்றங்களின் மூலம் தீர்வு காணலாம்.
  • லோக் அதாலத் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகள் அனைத்தும் தீர்வு காண்பதில் ஏற்படும் நடைமுறை தாமதத்தினைக் குறைத்து மாற்று முறைகளைப் பின்பற்றி நிரந்தர தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு மேற்படி சட்டம் இயற்றப்பட்டது.
  • லோக் அதாலத் நீதி மன்றங்களை விரைவு நீதிமன்றங்கள் என்றழைக்கிறோம்.
9996.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.
காரணம் (R) = 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
2. இதில் அரசியல் சாரதவர்கள் உள்ளனர்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்,
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) மற்றும் (R) இரண்டும் சரி
(A) தவறு ஆனால் (R) சரி
(A) சரி ஆனால் (R) தவறு
  • லோக் அதாலத் நீதிமன்றங்கள் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள நாளேடுகள் பெரிதும் உதவியாக உள்ளன.
  • அண்மைக் காலத்தில் விரைவாகவும், குறைந்த செலவிலும் நீதி கிடைப்பதற்காகக் குறிப்பாக ஏழை மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நிதி நெருக்கடி (அரசியலமைப்பு சட்டம் 360வது பிரிவு) ன்படி நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நெருக்கடி நிலைமை அறிவிக்கப்படுகிறது.
  • அரசியலமைப்புச் சட்டம் 352ஆவது பிரிவு மூலம் குடியரசுத் தலைவர; நெருக்கடி நிலையை அறிவித்து நாட்டைப் பாதுகாக்க முடியும்.
  • Share with Friends