Easy Tutorial
For Competitive Exams

Science QA அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII

அலுவலக மொழிகள் - அட்டவணை VIII

அலுவலக மொழிகள்
  • இந்திய அரசமைப்புச்சட்டத்தில் பகுதி XVII-ல் சரத்து 343-351ல் மத்திய அரசியல் அலுவலக மொழி அல்லது ஆட்சி மொழி பற்றி கூறப்பட்டுள்ளது. தேவனகிரி முறையில் எழுதப்படும் இந்தி ஆட்சி மொழியாக இருக்கும் என்று கூறுகிறது. எனினும் அரசமைப்பு சட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரையிலும் ஆங்கிலம் அலுவலக மொழியாக இருக்கும் என்றும் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
  • 1955 இல் B.G. கெர் இதற்கான குழு அமைக்கப்பட்டது நாடாளுமன்றம் அலுவலக மொழிச்சட்டம் ஒன்றை 1963ல் ஏற்படுத்தி இந்தியுடன் கூடுதலாக ஆங்கிலம் தொடர வழிகோலியது. மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இரு மொழியிலும் இருக்கும் என்று கூறப்பட்டது.
  • அரசமைப்புச்சட்டம் மாநிலங்கள் ஏதேனும் ஒன்று அல்லது பல மொழிகளை மாநில eஅலுவலக மொழியாக ஆக்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
  • அதனடிப்படையில் முதலில் 14 மொழிகள் மண்டல மொழிகளாக 8வது அட்டவணையில் இடம் பெற்றிருந்தது. தற்பொழுது 22 மொழிகள் மண்டல மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டு 8வது அட்டவணையில் இடம் பெற்றுள்ளது. 2003ல் போடோ மைதிலி சந்தாலி, டோக்ரி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன. மொழிவாரி சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரி இது 1956ல் ஏழாவது அரசமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் சரத்து 350 சேர்த்ததின் மூலம் கொண்டு வரப்பட்டது.
  • Group-IV(2011 Qn)

57549.இந்தியாவின் இணைப்பு மொழி
பிரெஞ்சு
ஜப்பானிய மொழி
கிரேக்க மொழி
ஆங்கிலம்
  • மொழிவாரி சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார். மொழிவாரி சிறுபான்மையினருக்கு அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்புகளையும் உறுதி செய்வது இவரது பணியாகும். இவர் தனது அறிக்கையை சிறுபான்மையினருக்கான அமைச்சர் மூலம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கிறார்.
  • குடியரசுத்தலைவர் இவ்வறிக்கையை நாடாளுமன்ற இரு அவைகளிலும் அலுவலக் மொழிகள் சமர்ப்பிப்பதோடு சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் அனுப்பி வைப்பார்.
  • 1957ல் இவ்வலுவலகம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் அலகாபத்தில் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் வழங்கியுள்ள சலுகைகளையும் தேசிய அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்களையும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு செயல்படுத்துவது இவரது பணியாகும்.
  • Group-IV(2014 Qn)

    9343.சிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
    கிரேக்கம்
    இலத்தீன்
    ஸ்பானியம்
    உருது
  • சரத்து - 343 - யூனியன் ஆட்சிமொழி
  • சரத்து - 345 - மாநிலத்தில் ஆட்சிமொழி
  • சரத்து - 346 -ஆங்கிலம் மத்திய மாநில அரசிற்கு இடையான இணைப்பு மொழி
  • சரத்து - 348 - ஆங்கில மொழி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், பாராளுமன்றம் மாசோதவுக்கு அனைத்து நடவடிக்கைகளிலும் இருக்கலாம்.
  • சரத்து 350- அவர்களுடைய தாய்மொழியை அரசுக்கு எடுத்து உரைத்தல்.
  • (350- A)- அவர் அவர்களுடைய தாய்மொழியை சிறுவயதில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • Share with Friends