Easy Tutorial
For Competitive Exams

Science QA நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்

நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்

நுகர்வோர் என்பவர் யார்?

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளை வாங்குதல் அல்லது ஒரு சேவையைப் பெறுவதற்காக அது அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது சுய வேலைவாய்ப்பு மூலம் தனது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்பவர் ஆவார்.

நுகர்வோர் என்பவர்:
  • பணம் செலுத்தியவர்
  • வாக்குறுதி பெற்றவர்
  • ஓரளவு பணம் செலுத்தியவர் மற்றும் ஓரளவு வாக்குறுதி பெற்றவர்

நுகர்வோரின் ஒப்புதலுடன் இத்தகைய பயன்பாடு செய்யப்படும் போது. அத்தகைய பொருள்கள் சேவைகளின் பயனாளிகளும் இதில் அடங்கும்.

Group-IV(2011 Qn)

58077.நுகர்வு என்ற பட்சத்தில் அபரிகரக என்பதின் பொருள்
தேவைகளைக் கட்டுப்படுத்துதல்
குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
இவை அனைத்தும்.
நுகர்வோர் இல்லாதவர் யார்?

ஒரு நபர் எப்போது நுகர்வோராய் இருக்கவியலாது :

    எந்தவொரு பொருளையோ வாங்குகிறது அல்லது எந்தவொரு சேவையையோ இலவசமாகப் பெறுகின்ற போது.
  • வணிக நோக்கத்திற்காக ஒரு சேவையை அமர்த்துவது அல்லது பொருளை வாங்குவது.
  • ஒப்பந்த அடிப்படையில் ஒரு சேவையைப் பெறுவது.
நுகர்வோர் பாதுகாப்பு:
  • நுகர்வோர் பாதுகாப்பு என்பது நுகர்வோரின் உரிமைகள், நியாயமான வர்த்தகப் போட்டி மற்றும் துல்லியமான தகவல்கள் சந்தையில் இருக்க வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் குழு ஆகும்.
  • நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடும் வணிகத்தை போட்டியாளர்களுக்கு மேலாகப் பெறுவதைத் தடுக்க சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும்.
  • நுகர்வோர் பாதுகப்பு சட்டங்கள் என்பது நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க வழிமுறைகளின் ஒரு வடிவமாகும்.

Group-IV(2013 Qn)

10074.நுகர்வோரியலின் தந்தை என கருதப்படுபவர் யார்?
மஹாத்மா காந்தி
இந்திரா காந்தி
ஜான் F. கென்னடி
ரால்ப் ரேடர்
எட்டு அடிப்படையான நுகர்வோர் உரிமைகள்:

1. அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை
2. பாதுகாப்புக்கான உரிமை
3. தகவல் அறியும் உரிமை
4. தேர்ந்தெடுக்கும் உரிமை
5. பிரதிநிதித்துவ உரிமை
6. குறை தீர்க்கும் உரிமை
7. நுகர்வோர் கல்வி மற்றும் உரிமை
8. தூய்மையான சுற்றுப்புறச்சூழலைப் பெறுவதற்கான உரிமை

இந்தியாவில் நுகர்வோர் நீதிமன்றங்கள்
  • தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC)
  • மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையம் (SCDRC)
  • மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் (DCDRC)
Share with Friends