Easy Tutorial
For Competitive Exams

Science QA திருக்குறள் Test 2

53123.‘.....துணிக கருமம் துணிந்தபின்
......... என்ப திழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்?
நிறையப் பொருள் சேர்த்த பிறகு
தானம் செய்த பிறகு
நன்றாகச் சிந்தித்து அதற்குப் பிறகு
தக்க காலமறிந்து
53124.பின்வருவனவற்றுள் திருக்குறளில் இல்லாத இயல்பு எது?
மதச்சார்பின்மை
இரக்கம்
அனைத்தையும் உள்ளடக்கிய சிந்தனை
சில மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதும், அவர்களின் தனிப்பட்ட வீரத்தைப் பறைசாற்றுவதும்.
53125.மதச்சார்பற்ற இலக்கியம் என்ற வகையில் திருக்குறளின் முக்கியத்துவம் யாது?
எந்த ஒரு குறிப்பிட்ட மத மதிப்பீட்டிற்கான இலக்கியமாகவும் இல்லாது மானுடம் முழுமைக்கும் பொருந்தும் தனித்துவம்.
மானுட நலனை முன்நிறுத்தும் தனித்துவம்.
திருக்குறள் வாசிப்பு நமது நாட்டை கட்டமைத்த தலைவர்களின் மதச் சார்பற்ற தன்மையை வலிமைப்படுத்தியது.
மேற்கண்ட அனைத்தும்.
53126.‘……………. நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
மேற்கூறிய திருக்குறளில் திருவள்ளுவர் நாவடக்கத்தை பற்றி கூறுகிறார் - இப்பண்பு எவருக்குப் பொருந்தும் ?
பொருள் உடையவருக்கு
பொருள் அற்றோருக்கு
நல்லோருக்கு
அனைவருக்கும்
53127."சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
- "அச்சொல்லை " என திருவள்ளுவர் உரைப்பது எதை ?
நீங்கள் பயன்படுத்திய பொருளில் வேறொரு சொல்.
சொல்லுக்கு மாற்றாக வேறுசொல்.
நீங்கள் பயன்படுத்திய சொல்லுக்கு வேற்றுமொழிச் சொல்.
மற்றவர்களால் வெல்ல முடியாத உங்களுடைய சொல்.
53128.அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு இக்குறளின் பொருள் உணர்த்தும் பொருத்தமான தொடரை எழுதுக.
அன்பு விருப்பத்தைத் தரும்
அன்பு வெறுப்பை தரும்
அன்பு பொறுமையைத் தரும்
இவை அனைத்தும்
53129.குறள் குறித்த சிறந்த விளக்க உரையினை உருவாக்கியவர் யார்?
கம்பர்
அகஸ்தியர்
பரிமேலழகர்
காளமேகப்புலவர்
53130.என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் இக்குறளில் வருந்தும் என்ற பொருளைத் தரும் சொல்
வெயில்
அறம்
காயும்
இவை அனைத்தும்
53131.அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் இக்குறளில் எதைத் தாழ்ப்பாளால் அடைக்க முடியாது என்று கூறப்படுகின்றது?
கண்ணீர்
அன்பு
நட்பு
இவை அனைத்தும்
53132.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியில்ல மற்றுப் பிற-இக்குறள் குறிப்பிடும் உண்மையான அணிகலன் எது?
அழகுக்காக அணியும் ஆபரணங்கள்
பணிவும் இன்சொல்லும்
கடுஞ்சொற்களைப் பேசாதிருத்தல்
இவை அனைத்தும்
Share with Friends